Saturday, January 12, 2013

பொங்கலோ பொங்கல்!!!

பொங்கலோ பொங்கல்...!!
தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்­;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள் இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய் நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய் நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம் இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!­!

தமிழர்களுக்காக போராடும்
என் தலைவன் “வைகோ” முதல்வராகட்டும்­;

பொங்கலோ பொங்கல்...!!

தமிழின உறவுகளுக்கு“இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள


No comments:

Post a Comment