Tuesday, July 30, 2013

என் கவிதைகளின் இரகசியம்
நீ, நான், நிறைய காதல்
அவளவுதான்..!

நிலவு
தரை இறங்கி வருமாயின்
அது
என்னவள்
நடையில்
மட்டுமே
உணர முடியும் !!!!

Monday, July 29, 2013

அன்புக்கு ஆலயம் அம்மா
ஆசையை மெய்பிக்கும் அம்மா
இசையென்னும் தாலாட்டு அம்மா
ஈடில்லா உறவு அம்மா
உயிராய் காப்பவள் அம்மா
ஊக்கம் தருப்பவள் அம்மா
ஐயமின்றி சொல்வேன் அம்மா
என்னை செதுக்கிய சிற்பி
ஏடுகளின் இலக்கியமும் சொன்னவள்
ஒற்றை வார்த்தை கவிதை
"என் அம்மா"

எத்தனை முறை ரசித்தாலும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய்த் தெரியும் மழை போலவே,
நீயும்...

இலக்கண பிழையொன்றும்
இல்லாதஇலக்கியமே !
உன் செவ் வாய் செய்யுளில் நவரசங்கள்
கற்கிறேன்
உரைநடையாய் என்னில்
நடை போடுகிறாய்
சிறுகதையாய் உன் பிரிவை போக்குகிறேன்
வெண் பாவாய் அன்பின்வெண்
பாவை தந்திடு
காத்திருக்கிறேன் நான் !!
வந்திடு என்னருகில் !!

Friday, July 26, 2013

நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே

Wednesday, July 24, 2013

தாய் மடி கிடைக்காத
போது உன் மடியில்
தலை சாய்ந்தேன் . . .

யாரோ நினைத்தால் தும்மல் வரும்
என்றால்
நீ எல்லாம் தும்மல் வந்தே செத்துருப்பாய்
பெண்ணே..!!

Friday, July 19, 2013

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
என்னோடு கலந்துவிட்ட உன் அன்பின் நேசமும்
ஒரு நாளும் பிரியாது..

Friday, July 12, 2013

நம் இதயம்எந்த அளவுக்குபிடித்தவர்களிடம்சண்டை போடுகிறதோ...அந்த அளவுக்குஅவர்களிடம்அன்பை எதிர்பார்க்கும்.

Wednesday, July 10, 2013

தொலைபேசியில் எல்லாம்நீ எனக்கு முத்தம் தராதே...!அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டுவெறும்சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது..!

உன் மடியில் தலைவைத்து உறங்கும் சுகம் !
நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி 
உன் எச்சிலை சாப்பிடம் சுகம் !

தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு 
பள்ளி செல்லும் சுகம் !
மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல் 
என்ன தலையை வருடிக் கொடுக்கும் சுகம் !

நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி 
என் நெற்றியில் நீ முத்தம் கொடுக்கும் சுகம் !
இது அனைத்தும் இன்று வரை அனுபவித்துகொண்டிருக்கிறேன் 
என் தாயிடம் இருந்து.

ஏழு கழுதை வயசாச்சு இன்னம் பிள்ளைய 
கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு சொனாலும் 
என் பிள்ளை கிழன் ஆனாலும் எனக்கு அவன் 
 குழந்தைதான் என்று சொல்லி 

என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டிருக்கும் 
என் அன்னையை கடைசி காலம் வரை 
சுகமாகசுமப்பது நான் செய்த பாக்கியம்.

Sunday, July 7, 2013

முதல் ஸ்பரிசம் அது!
சிரித்தேன் சிரித்தாள்
தொட்டேன் தடுத்தாள்
விட்டேன் அணைத்தாள்!
ஆறாம் அறிவும்
பாழாய் போனது!
நெருங்கினாள் நான்
நொறுங்கினேன்!
இமை வருடினாள் நான்
இதழ்'கள் பருகினேன்!
வேண்டாமென எச்சரித்தாள்
இது போதாதென நச்சரித்தேன்!
காதலும் காமமும்
ஒரு புள்ளியில் சேர்த்துவிட்டாள்!
சம்மதம் கேட்கவில்லை
சங்கடமும் அவளுக்கில்லை!
அகம் புறம் எங்கெங்கும்
முத்தமிட்டு சிலிர்க்கவைத்தாள்!
அகவை அது மறந்து
நித்தம் நித்தம்
தேகம் துளிர்க்கவைத்தேன்!
வெட்கத்தில் முகம் மலர்த்தாள்!
சொர்க்கத்தை நானும் கண்டேன்
பக்கத்தில் அவளும் இருந்தாள்!
மடியினிலே சில நேரம்
மார்பினிலே சில நேரம்
முதுகோடு சில நேரம்
மூர்ச்சைனேன் அந்நேரம்!
ஆகா, மோச்சமானேன் எந்நாளும்!
அச்சம் அது மறந்து
மிச்சமின்றி அள்ளிக்கொடுத்தாள்
சொச்சமும் ருசித்துவிட்டு
மச்சம் கூட சிவக்க வைத்தேன்!
மலராக மாறிவிட்டாள்
மகரந்தம் நானும் கொண்டேன்!
சிலையாகி அவள் கிடந்தாள்
செதுக்கும் போதே சிற்பியானேன்!
நாணத்தில் தலைகுனிந்தாள்
நானும் அதில் பாதி அடைந்தேன்!

Thursday, July 4, 2013

அம்மா

ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்தக் குரலில் கலந்து வரும்
உரிமையை உணர்வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை.......அம்மா