Wednesday, January 16, 2013

என்னவள்........



அ - ன்பானவள் என்னவள் எனக்கு...

ஆ- ழமாய் புதைந்துபோனாளே என்னுள்ளே என்னவள்...

இ - னிமையாய் இருக்குமே என்னவளை நினைக்கையிலே...

ஈ - டே இல்லையே என்னவளின் ஓர பார்வைக்கு இவ்வுலகிலே...

உ - ண்ணவும் மறந்துபோனேனே என்னவளை நினைக்கும்போது...

ஊ - மையாக என்னுள்ளே நுழைந்து தனிமையிலே என்னை பேசவைத்தவள் என்னவள்..

எ - துவுமே அறியாதவளாக காட்சிதருவாளே என்னை காண்கையில் என்னவள்...

ஏ - றுவரிசையைபோல் என்னவளின் நினைவுகள் என்னுள்ளே ஏறுகிறதே...

ஐ - யமே இல்லையே என்னவள் என்னோடு இருக்கையில் ...

ஒ - டுங்கி போனேனே என்னவளே உன்னை காணாதபோது...

ஓ - சையின்றி தாக்குதே என்னவளின் நினைவுகள்...

ஔ - வளவு வேதனைகளையும் சுமக்குதே என் சிறு இதயம்..

ஃ - கணமே மரித்துவிடுவேன் என்னவள் எனக்கில்லை என்றதுமே...

No comments:

Post a Comment