Thursday, January 31, 2013

என் பார்வையை பழுதாக்கிய பாவமும்,மொழிகளை ஊமையாக்கிய குற்றமும்,நெருக்கத்தை நொறுக்கியழித்த தவறும்,உனை குற்றவாளியாக்கா­து,பயந்து பதைத்துவிடாதே !!எல்லையில்லாத என் காதலே !அந்த துயரங்களை தலையிலேற்றிச்சு­மக்கும் !!


நீ எங்கிருந்தாலும்­ எனக்காக இருக்கிறாய் !என்ற எண்ணம் !நீ தள்ளியே வைத்திருந்தாலும­்,தடவிக்கொண்டேயிர­ுக்கிறது நெஞ்சை !!அந்த நம்பிக்கையில் உனைப்பற்றி,எந்த விவரமும் தெரியாமல் உழல்கிறேன் !நிறைய அர்த்தமில்லாத அர்த்தங்களுடன் !!தெரியும் நம்புகிறேன் !நீ நினைத்துக்கொண்ட­ுதானிருக்கிறாய்­ என்னை !!


நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள­் !வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,அப்பா !!மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,நான் சொல்கிறேன் !மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்­று !உடனே எப்போது என்கிறாள் !!சொல் மயிலே !!எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?


இருளின் முழுமையில் பதுங்கி ஒதுங்குகையில்,எதற்காக நீ வாய்விட்டு சிரிக்கிறாய் ?தேவையா இங்கே உன் புன்னகை மின்னல் ?ஏற்கெனவே உன் விழியொளி பார்த்து,விண்மீன்களுக்கு­ச் சந்தேகம் வந்திருக்கும்..­......மொட்டைமாடி ஒரு ஆபத்தான அந்தரம் அன்பே........அங்கே நீயும் எனக்கு நிலவு வேடம் தரிப்பவள் !!


உன் நினைவாய் என்னிடம் இருப்பனவற்றையெல­்லாம்,உடனடியாய் அழித்துவிடச்சொன­்னாய் !சரியென்று முயற்சித்தபோதுத­ான்தெரிந்தது !நீ நினைவாகவே மாறிப்போயிருந்த­ாய் என்பது !!இனி எனக்கிருக்கும் ஒரே வழி !எனை அழித்து உனை காப்பதுதான் !கவலை வேண்டாம் காதலே !!செவ்வனே செய்யப்படும் சீக்கிரமாய் அது !!


தெரு விளக்குகளுடனான உடன்படிக்கை,
முடிவுக்கு வந்ததும் !
கலங்கிவிட்டான் அந்த ஏழை மாணவன் !
பரிட்சையில் தேறினாலும் பிரிவுவந்துவிட்டதே !!
தனக்கும் ஒளி தந்த உயர்ந்த சகொதரனுக்குமென்­று !!


திருந்தாத ஜென்மம் வருந்தாத பிறவி,புரிந்துகொள்ளாத­ ஜடம் புரியமுடியாத கிறுக்கன்,என்றெல்லாம் எத்தனையோ சாடல்கள்,எனை தொடர்ந்துகொண்டே­யிருந்தது!கவலைப்பட்டு கலைந்துபோய்விடா­மல்,என் போக்கிலேயே நகர்ந்தேன் !ஒருநாள் காதலித்தாய் காதலித்தாய் !பிற்பாடு உணர்ந்தேன் !நீ சொன்ன அனைத்துமாய் எனை,செதுக்கியிருக்க­ிறாய் என்று !ஜெயித்தும் தோற்றதும் போகட்டும் !சொல் எனக்கு !ஏன் புரிந்தாய் பின் ஏன் மறந்தாய் ?


நேசித்த பொருள்கள் தொலைந்துபோனால்,நெஞ்சு பொறுப்பதில்லை !
அப்படித்தான்...­...............­...நீ வாசித்த என் இதயத்தை நீயே திருடியதும்,திகைத்துப்போனேன­் தலைசுற்றி !
மறுபடி அதை தருவதாயிருந்தால­் ஒரு மாறுதல் !
பதிலுக்கு உன் இதயத்தைக்கொடு !
நானும் வாசிக்கிறேன் தேர்ந்த ரசனையுடன் !!


இளவெயில் நேரத்தின் பொழுதிலேஅவளை நான் கண்டேன்
புழுதி படிந்த முகம்
முகத்திலே தவழ்ந்த கறையில்லா புன்னகை உணர்த்தியது
புழுதி முகத்திலே அகத்தில் அல்ல என்றுகலைந்த கேசம்சோர்வு ததும்பிய கண்கள்பொலிவிழந்த முகம்வசீகரிக்க ஏதுமில்லாதஅவளால் வசீகரிக்க பட்டேன்வசீகரித்தது அவளோஇல்லை அவளில் குடி கொண்ட என் மனமோஓ ஓகண்டு விட்டேன் என் காதலைஅறிந்து கொண்டேன்என் மனதைஎன் சகியே. எப்படி கூறுவேன்உன்னிடம்என் இதயம் உன்னிடமென்ற


...........எதி­ர்பார்ப்பு.....­......_______________­_______

எதிர்பார்ப்புகள­் எப்போதும்,உத்தரவு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைவதில்லை !
பார்த்தேன் பிரியப்பட்டேன் !
பார்த்தாய் ஆசைப்பட்டேன் !
ரசாயனமாற்றங்களி­ன் காரணகாரியங்கள் தெரியாது !
என் அறிவுக்கு சொன்னாலும் புரியாது !
உனக்கு நான் அவ்வளவு பரிட்சயமில்லை !
உன் உறவுக்கு நெருக்கமென்ற செருக்கும் வாய்க்கவில்லை !
என்றபோதும் எதிர்பார்கிறேன்­ உனை என் அன்றாடங்களில் !
காரணம் !!
எனக்குள்ளும் வந்தமர்ந்துவிட்­டது !
வளைக்கமுடியாத எதிர்பார்ப்பு !!


கண்களில் நீர் வற்றிப் போன பிறகும் கூட வற்றாமல் இருக்கிறது சில சோகங்கள்.. :((


Wednesday, January 30, 2013

துளிகளாக முகம் பட்டுநினைவை நனைத்து ஓடுகிறாள்கல் குத்தி முள் கிழித்தரணங்களோடு தொடர்கிறேன்என்றாவது நதிமேல் நோக்கியும் பாயுமென்று..


♥♥நீ பிரியும் தருணத்தில்வழியனுப்ப மனமில்லாமல்பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல்நான் தவித்து நின்றேன்..


போதும் உன் பார்வை
கொல்லாதே என்னை
எழுதா காகிதமாய் கிடந்த வனை கைவரி வளை தந்து புன்னகையில் பூ மழை தூவிபுதுக்கவியே வருகவென்றுவிழிகளால் அழைக்கிறாய்பித்தன் நானடிசத்தியமாய் உன்னிடத்தில்...


ஒரு பெண் நினைத்தால்எதுவும் முடியும் என்கிறீர்கள்ஏன் முடியவில்லைஎன்னால்???
உன்னை மறக்க மட்டும் ...


என் வாழ்க்கைப் புத்தகத்தின் சுவையான பக்கங்கள் உன்னால் எழுதப்பட்டவை என் மனப்-'பாலை'யெங்கும் இதமான ஈரம் அதற்க்கான மழைகள் உன்னால் பொழியப்பட்டவை


மருதாணி வைத்த உன் கைகளை விடச்சிவந்திருக்கிறது உன் முகம்உன் கன்னத்தில் நான்தந்த முத்தத்தில்வந்த வெட்கத்தில


உன்னோடு வாழத்தான் விருப்பம்..... அதற்கு தடைகள் நீ போட்டு விட்டுப்போ.....
ஆனால் நீ தந்த நினைவுகள் என்னோடு இருக்க விடு..... அவை காயப்படும் படி காட்சிகளை என் கண்ணில் காட்டி விடாதே..... அதுபோதும்....!!


உனது பொய்யான காதல்"!!

உன்னில் இல்லாத எனக்காக
உன்னில் இல்லாத உண்மைக்காக எழுதுகிறேன் பல கவிதை எல்லா கவிதையும் உன்னில் தொடங்கி உன்னிலே முடிவதால் என்னில் உன் நினைவு ஆழமாய் போகிறது ..

செவி கொண்டு கேட்காது போனாலும் கண் கொண்டு பார்த்து விடு ஒரே ஒரு முறையாவது!!!


என் சுவாசமாக!!!

உன்னை ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் போதும்,
என் இதயம் கணத்து தான் போகிறது.என்ன ஆனாலும் என் உயிர் உள்ள வரை உன்னை காதலித்து கொண்டு தான் இருப்பேன் என் சுவாசமாக......


உன் அன்பிற்காக!

காலம் சென்றாலும்...

கனவுகள் மறைந்தாலும்...

கவிதைகள் அழிந்தாலும் ...

என் உயிர் பிரிந்தாலும்...

காற்றோடு தொடர்ந்து வருவேன்...

உன் அன்புக்காக ...!


பிடிக்கவில்லை என்று சொல்.
அந்த நிராகரிப்பை ஏற்க முடியும்.பேசாமல் போகாதே.அந்த அலட்சியத்தைத் தாங்க முடியாது!


உன் நினைவுகள்!!!P

மெளனமாக இருப்பதால்

மறந்து விட்டேன்...

என்று நினைக்காதே....

மரணித்தாலும் மறக்க

மாட்டேன்....உன்னையும்....

உன்       நினைவுகளையும்....


என் காதல்....

இருட்டில் வரைந்த
ஒவியமும்,
காற்றில் கிழிந்த
காகிதமும்  போல் தான்
எனது காதல்...!
யாருக்குமே தெரியாது...!


நீ என்னைவிட்டு
பிரிந்தாலும்!!!

என் நெஞ்சைவிட்டு
பிரியாத உந்தன்
காதல் நினைவுகள்!!!


காதலி!!!

முதுகில் குத்துகிறான் எதிரி, நெஞ்சில் குத்துகிறான் நண்பன், இதயத்தில் குத்துகிறாள் காதலி


போதும் போதும் ..இந்த காதல்

காதல் என்று கற்பனையில்
வாழ்ந்த எனக்கு
இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்

காதல் என்பது ஒருவனை எப்படி முட்டாள் ஆக்கும்
என்பதை உணர்ந்தேன்
இப்போது காதல் என்ற
சொல்லை கேட்டாலே ..?
ஐயோ ஆளைவிடு
என்றாகி விட்டது


நான் எங்கே போவேன்

உன்னால் தானே
உறவுகளை மறந்தேன்

நீ சொல்லித்தானே
நண்பர்களையும் மறந்தேன்

எல்லோரையும் மறக்க
வைத்தாய்
உன்னை மட்டும் நினைக்க வைத்தாய்....

இப்போ உன்னையே மறக்க‌ சொல்லுகிறாயே

இப்போது நான் எங்கே போவேன்‍‍ _


Tuesday, January 29, 2013

உன் நினைவுகளுடன்

கண்ணோடு உன் உருவமும்
கனவோடு உன் நினைவும்- என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன­்...

என் உயிரோடு உறைந்து போன-உன் நினைவுகளை உதற முடியாமல்...!!!


Monday, January 28, 2013

யாரிடமும் அதிகஅன்பு வைக்காதே!!!!
பிரிய வேண்டிய நேரத்தில்அழுவது உங்கள்கண்களாக இருக்காது !!உங்கள் இதயமாகத்தான் இருக்கும்....


பெண்ணியம்!!!

பெரும் பகுதி பெண்களிடம்பெண்ணியத்தைப்பற்றிய சரியானபுரிதல் இன்னும்உருவாக வில்லைநில பிரபுத்துவஆணதிக்கத்தில்பெண்னை வீட்டுக்குள்முடைக்கி வைத்தார்கள்வெளியே செல்லும்உழைக்கும் மகளிரைஇழிவாக பார்த்தார்கள்முதலாளித்துவஆணாதிக்கம்தனது சந்தை பொருளின்விளம்பர கருவியாகபெண்ணின் அழகைபயன் படுத்துகிறதுஇங்கேயும்வர்க்க சமூகத்தின்ஆணாதிக்க கருத்தியல்தான்இயக்கும் சக்தியாகஇருக்கிறதுஇதையும் தாண்டிபெண்ணியத்தின்கருத்தியல் வளர்தெடுக்கப் படவேண்டும்தொழிலாளர்களிடமோதொழிலாளர் வர்க்க உணர்வு என்பதேஇல்லைஎன்றாவது ஒரு நாள்முதாலாளியாகும்கனவுகளில்தான்வாழ்கிறார்கள்வெறும் பொருளாதாரத்திற்­கானபோராட்டத்தை வர்க்க போராட்டமாகசித்தரிக்கப்படு­கிறதுமுதலில் கருத்து நிலையில் சரியான புரிதலும் தெளிவும்முறையாக அதைவளர்த்தெடுத்தலு­ம்அவசியம் !!.அப்போதுதான்சமுதாய மற்றமும்சாத்தியமாகும்அதில்லையென்றால்பண்படுத்தாதநிலத்தில் விதைத்துவிட்டுஅறுவடைக்குஅரிவாள் எடுத்ததுபோல்தான் இருக்கும் !.


பிள்ளைகளாய் , பெற்றவராய்,பிரியமுள்ள தோழர்களாய் ,பாசமிகு சகோதர - சகொதிரியராய்
எத்தனை விதமாக உறவாடினிர்கள்
ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பரிவு காட்டி
ஏழைத் தாய்க்கும் இரக்கம் காட்டி
மழலைகளுக்கும் மகிழ்வூட்டி
தோழரோடு குறும்பு செய்து
எத்தனை கனிவாய் எம்முடன் வாழ்ந்தீர்கள்
இனியவர்களே எம் இதயங்களில் வாழ்பவரே
தொடர்கின்றோம் உம் கடமை வல்லமை தாருங்கள் .......


Sunday, January 27, 2013

நேசம்

உண்மையாகவும் உரிமையோடும் நம்மை நேசிக்க எவரும் இல்லை எனில் நேசம் என்ற சொல்லிர்க்கே அர்த்தம் இல்லை என எண்ணத்தோன்றுகின­்றது......

Saturday, January 26, 2013

நட - அதிர்வின்றி

பேசு - பணிவாக

சுவாசி - ஆழமாக

தூங்கு - அமைதியாக

உடுத்து - அழகாக

செயல்படு - அச்சமின்றி

உழை - உண்மையாக

சிந்தி - சுயமாக

நம்பு - சரியாக

பழகு - நாகரிகமாக

ஈட்டு - நேர்மையாக

சேமி - சிறிதாவது

செலவிடு - யோசித்து

படி - முடிவின்றி

மரணி -பயமின்றி


சண்டை போட்ட கடிகார முட்கள்திரும்பவும் ஒன்று சேர.ஒரு மணி நேரமாகும் ...!ஆனால்உன்னை விட்டு பிரிந்துஒரு நொடி கூடஎன்னால் இருக்க முடியாது..


மலரொன்று மலராமல்
மணம் வீசி மயக்குகிறது ...
அவளது 'இதழ்கள்


Friday, January 25, 2013

பார்த்த முகங்கள்
கண்னை விட்டு பிரிந்தாலும்

பழகிய இதயம்
நெஞ்சை விட்டு பிரிவதில்லை!!


கருத்தடை!

குப்பைதொட்டிக்க­ும் கருத்தடை தேவை, இன்னும் எத்தனை குழந்தைகளை பெற்றெடுக்க போகிறாள் ?


Wednesday, January 23, 2013

boy: hey baby,happy birthday...

girl: hey babe, and thank you..
(:boy: I'll be at your house at 7:30pm..
girl: okay babe,you promise?
boy: yeah, I promise.I love you so much..no matter what happens.
girl: I love you too.I am going to cook for our dinner
(:boy: okay baby (:Exactly 7:30,boy does not arrive...1 hour goes by..8:30 and the boy arrives....
Girl: hey babe..What took you so long?
Boy: *hugs her*,sorry, There was a lot of traffic.
girl: Its okay as long as you are here
(:I bet you're hungry.They went to dinner and ate and talked...
*girl's phone rings* *Its the boys mom*
girl: helloboys mom: ( crying )I have to tell you something I am in the hospitalright now my son just passed out.
Girl: ha? What are you talking about?
Boys mom: ( crying )he was in a car crash a "hour ago"he did not makeit.
girl: "shocked" looks at his boy.The boy is in the dark holding a candle saying, "Baby,I did not break my promise.."Who else thinks this is sad? :-


நேதாஜி

இந்திய தேசிய ராணுவத்தை பிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மக்களுக்கு ..!
ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை.
இருந்தும் வாழ்கிறாய் எங்கள்
இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல தீச்சுடராகவும்...!


நேதாஜி

காந்தி என்ன பன்னனாரு.சுதந்திரம் வாங்கிக்கொடுத்தாரு....

சின்ன வயசுலேர்ந்து இப்படித்தான் சொல்லிக்கொடுத்து வரலாற்றையே திரிச்சுடுச்சு இந்த காங்கிரஸ் கயவாளி கும்பல். வெள்ளைக்காரன் வச்சிருந்தது 30-ஆயிரம் படைவீரர்கள். நேதாஜிகிட்ட இருந்தது 60 ஆயிரம். சொல்லி அடிச்சாரு நேதாஜி. அந்த பயத்துலதான் சுதந்திரத்துக்கு ஒப்புக்கும் புத்தி வந்தது. சண்டைபோட்டவனை கூப்பிட்டு “சுதந்திரம்னு” கொடுத்தா தோல்விய ஒப்புகிட்ட மாதிரின்னு, ‘சேப்டி சைடு’ போராட்டம் நடத்தின காந்தி கும்பலை கூப்பிட்டு ஒப்படைச்சான். அப்படி சுதந்திரம் வாங்கி குந்திகிட்டவன் ‘நேதாஜியின் வீரப்போராட்டத்தை மறைத்தான்.வரலாற்றை திரித்தான். ஆட்சி அதிகாரம் அவர்களிடம்தானே....
இந்த 66 வருஷத்துல நாட்டையும் சுடுகாடாக்கிட்டானுங்க....

காந்தி என்ன பன்னாரு...ம..... வாங்கிக் கொடுத்தாரு...


உன் வருகைக்காக
காத்திருப்பது நான் மட்டும் அல்லஎனக்கு துணையாய் நீ கொடுத்து விட்டு சென்ற
கடைசி முத்தமும் தான்!!


இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் நேதாஜி வானொலி மூலம் தனது இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்காக உரையாற்றினார்.

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும்."

இதை அவர் சொன்னது ஆகஸ்ட்-15 1945ம் ஆண்டு சரியாக அதிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்தது

Tuesday, January 22, 2013

வாக்குரிமையின் முக்கியத்துவம்:

-
விதை நெல்லை
விலைக்கு கொடுத்துவிட்டு,
பட்டினியால்
பரிதவிக்கும் விவசாயிகள் நாம்!
வாக்குரிமையை வீணாக்கி
வழக்கு மன்றத்தில்
காத்திருக்கும் குடிமக்களாய்!
நம் விரல்நுனி
கருப்பு மைதான்
வெள்ளை அரசியலின்
வேர் என்று அறியாமல்!

மாவீரர் நேதாஜி

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல"

என முழங்கிய மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று....

Monday, January 21, 2013

உன்னை கண்டேன்
என் இறந்தகாலத்தில்.­.
காதல் கொண்டேன்.நிகழ்காலத்தில்
நினைத்துக் கொண்டிருக்கின்றேன்...உன் நினைவை..
மரணிப்பேன் எதிர்காலத்தில் உனக்காக,,நான் காத்திருந்து.


கீதங்களில் மயங்கினேனடி!
உன் பேச்சைத் தான் சொல்கிறேன்!
மாயை உலகில் தொலைந்தேனடி!
உன் கூந்தலைத் தான் சொல்கிறேன்!
மின்னல் ஒளியில் என்னையே தொலைத்தேனடி!
உன் கருவிழியைத் தான் சொல்கிறேன்!
இன்று நான் எங்கே என்றுத் தேடிக் கொண்டே இருக்கிறேன்!
உன்னுடன் வாழ்ந்து தொலைத்த நம் நினைவுகளில்தான்!


♥நீ தொலைந்து போகும்தருணங்கள் எல்லாம்
நான் தேடுகிறேனா என்று நீ பார்ப்பதற்காகமட்டும் தான் !
மற்றபடி என்னைவிட்டு நீஎன்றுமே எங்குமேபிரிவதில்லை !♥


விழிகளை திறப்பதற்கு மனமேயில்லை!
விழிக் கதவை திறந்தால்!
உன்னுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் கனவுக் கதவு மூடிவிடும் என்பதால்!


நீ என்னை மறக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை மறந்து விடாதே !!!!


கண்ணோடு கலந்து இருந்தால் கண்ணீரோடு விட்டு இருப்பேன் நீ என் உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்உன்னை எப்படி விடுவது??? என் அன்பே..........


என் மனதோடு மட்டுமல்ல.,.,
என் மரணத்தோடும் வைத்திருப்பேன் என்னவளின் நினைவை என்றும்,,
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிரை பிரித்தாலும்.


இதுவரை உன்னை போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை....
காதல் கொள்ளவும் இல்லை...அதனால் தான் இன்னும் கூட உன்னையேநினைத்து கொண்டுருக்கிறேன்...!!!