அடியெடுத்து வைப்பதற்கே
ஆண்டவனைத் தேடி-நின்றால்
கற்களுக் கெல்லாம் என்ன கால்களா முளைக்கும்?
ஆண்டவனை வேண்டி
அழுவததே வாழ்வென்றால்
அவனும் வரமாட்டான்
வேண்டிய புருஷனும்-நம்
வீட்டுக்கு வரமாட்டான்.....
"அகல் விளக்கை- ஏற்றிய
அழகான கைகளால்
"அறிவு" விளக்கேற்றி
அவனியில் புறப்படுவோம்"