Saturday, August 29, 2015

காதலிக்கும்முன்..

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய
நான்,
இவைதான் என் அடையாளங்கள் !

காதலித்தபின் ...

உறங்காத இரவுகள் (என் தலையணை
சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே
வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச்
செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன்
நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக
சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால்
பண்ண),
தூங்கினால்தானே கனவு வர
(அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை
தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ
பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு
இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத்
தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து
(திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???

Friday, August 28, 2015

காலத்தை கடந்த காதல்

*கரடு முரடான என்
வாழ்க்கைக்கு காரணம் தேடி
நடந்துபோனேன்.
உன்னை...
கண்டவுடன் அனைத்தும்
மறந்துபோனேன்.
-------------------------------------------
-------------------
யார் நீ!
உறங்க மறுத்த
என் விழிகளுக்கு
விருந்து படைத்தவளே.
எதிர்காலம் தேடும் இந்த பித்தனை
சித்தன் ஆக்கியது உன் தரிசனம்.
இயற்கை வரைந்த ஓவியமே
இதோ உனக்காக நன் எழுதும்
காவியம்!
-------------------------------------------
---------------------------
* சிக்கி முக்கி கற்களில்
நெருப்பை கண்டவன் கூட
திக்குமுக்காடி போவான் - உன்
விழிகளின் வெப்பத்தை பார்க்கும்
போது.
-------------------------------------------
---------------------------
* சக்கரத்தின் கண்டுபிடிப்பு
நாகரிகத்தின் தொடக்கம்
உன் தரிசனம் இல்லா நாட்கள்
எனக்கு வேதனையின்முடக்கம்.
-------------------------------------------
---------------------------
* உலோகங்களை
கண்டுபிடித்தவனும்
தோற்றுத்தான் போவன்- உன்
உள்மன ஆயத்தை காணமுடியாமல்.
செம்பு கண்டுபிடித்தவனுக்கு
உன் மீது கோபம் - உன்
அன்பு  கிடைக்கவில்லைஎன்று,
-------------------------------------------
--------------------------
* எத்தனையோ
காதல்கள் பள்ளத்தில்
இருந்தும்.
என்றும் - உன் காதல்
நிலைத்திருக்கும் என் உள்ளத்தில் .
-------------------------------------------
---------------------------
* விலங்குகளை
எதிர்த்து  வேட்டையாடினேன்
  இயற்கையோடும் போராடினேன்
இப்படி ஐம் பூதங்களுக்கும்
அடங்காத
என் மனம்
உன் ஐம் புலன்களைகண்டு
அடங்கி போகிறது.
-------------------------------------------
----------------------------
* நெருப்பில் வெந்து
நீரில் நனைந்து
வானில் பறந்து
காற்றில் என் உயீர் கலந்து
போகும்முன்
உன் கண்களில் விழுந்து
செவிழில் நுழைந்து
மெழ்யில் கலந்து -
வாழ் மொழியில் வாதடியாவது
உன் இதயத்தில் இடம்
பிடித்துவிடவேடவேண்டும் .
-------------------------------------------
---------------------------------------
* காட்டை கடந்து
நாட்டிற்கு வந்தேன் - இது
நாகரிகத்தின்வளர்ச்சி -
இவையாவும்
உன்னால் ஏற்பட்ட சூச்சி.
மன்னர்களின் பேத்தியியே
ஓரபார்வையால்  என்னை
சாய்த்தாயே!
நெப்போலியனுக்கு  நெருங்கிய
சொந்தமே
நீ இல்லாமல்  எனக்கு கிடையாது
வேறு பந்தமே!
-------------------------------------------
-----------------------------------
  *அர்ஜுனனின் வில்வித்தையும்
அனுமனின் சொல்வித்தையும்
தாண்டவம் ஆடும் - உன்
பேச்சிலும் வீச்சிலும்.
-------------------------------------------
-------------
* சங்ககால மன்னரான
சேர, சோழ, பாண்டியனின்
கண்ணில் நீ பட்டிருந்தால்
ஆங்காங்கே
செதுக்கபட்டிருப்பாய் சிற்பமாக.
-------------------------------------------
----------------
* என்னை ஆள பிறந்தவளே
கலப்பிரர்களின் புலம்பலை
கேட்டாய,
   உன்னை காணாத நாட்கள் தான்
வரலாற்றில் இருண்டகாலமாம் .
பல்லவர்களின் படைப்பிற்கு -
மகாபலிபுரம்
   உன் நினைவால் துடிக்கும் - என்
இதயத்திற்கு என்றும் நீ
தூங்காநகரம்.
-------------------------------------------
-----------------
* நன் உன் மீது கொண்ட காதலுக்கு
சாட்சி !
சோழ மன்னர்களின் ஆட்சி,
ஆயிரம் ஆண்டு கடந்தும் - அவன்
புகழ்
   நீங்காமல் நிலைக்கிறது,
இறவுகள் பல கடந்தும் என்
மனம்  தூங்காமல் தவிக்கிறது!
-------------------------------------------
-----------------
* கரிகாலன் கட்டிய
  கல்லணைக்கும் ஒரு காரணம்
உண்டு ,
  அது உன் இதயத்தில் இருந்து
எடுக்கப்பட்ட சிறு
இரும்புத்துண்டு
மன்னர்களின் ஆட்சி கூட மாறியது
என் மனதில் பதிந்த
உன் காட்சி மட்டும் மாறவில்லை !
-------------------------------------------
------------------
* இந்தியர்களையே
  ஏங்கவைத்திருக்கவேண்டும்
  உன் இடை!
அதை கண்டுகொள்ளதான்
அடிக்கடி  வந்துபோனதோ
ஆங்கிலேயரின்படை !
-------------------------------------------
-------------------
*காதலனை தேர்ந்தெடுக்க
நீ நடத்திய  நாடகம் தான்
முதல் உலகப்போரா !
ஆங்கிலேயரிடம்  அகிம்சை
முறையில் பெறப்பட்டதே
சுதந்திரம்
உன்னை கண்ட நாள் முதல்
அது பறிபோனதே நிரந்தரம் !
-------------------------------------------
-------------------
* அறிவியலின் அதிசயமா நீ
புவிஈர்ப்பு   விசையை கண்ட
நீயூட்டனுக்குள்ளும்  மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கும்  உன்
விழிஈர்புவிசை !
உன் இதயத்தை
நன்கு ஆராய்ந்துவிட்டுத்தான்
அணுவை பிளக்க முடியாது
என்றான  ரூதர்ட்போர்டு.
-------------------------------------------
------------------
*  உன்  கோபத்திற்கு
   காரணம் தேடித்தான் எலக்ட்ரானை
கண்டுபுடித்தானா தாம்சங்
நீல நிற கடலுக்கு
காரணம் சொன்னது ராமன்
விளைவு
  உன் நிழலை கூட
சுமந்து  வருகிறது எந்தன்
நினைவு
-------------------------------------------
-----------------
* E=MC 2 இது
ஐயன்ஸ்டீன் பார்முலா
எதிரியும் மயங்கிபோவது
உன் கருவிழி பார்வையினாலா
அன்பு கட்டும் பொது
அணுவைபோல்
ஒடுங்கி  போகும் நீ
கோபம் கொள்ளும்போது ஏன்
நீயூட்டனின் மூன்றாம்
விதியாகிராய்
-------------------------------------------
-----------------
* அறிவியலின் அடுத்த கட்டமே !
என் இறுதி மூட்சும் உன்னை
சுற்றுமே
   உன்மீது கொண்ட மோகம் தான்
கருங்கூந்தலை கடன் வாங்கி
கொண்டதா  மேகம்
  உதட்டு சாயத்தோடு நி துப்பிய
எச்சிலின் எதிரொலிதான்
மேகத்தின் மீது வரையப்பட்ட
வானவில்லா
-------------------------------------------
------------------
* ராணுவ ரகசியமாய் இருக்கும்
உன் மௌனத்தை ஆராயத்தான்
அனுப்பப்பட்டதா ஆரியப்பட்டா !
இன்று உலகையே
அட்ச்சுறுத்தும்
புரமோஷ்  ஏவுகனை
  உன் ஒட்டுமொத்த கோபத்தின்
வினை !
அதனால்தான்  உன்னுடன் நேரில்
பேச அச்சப்பட்டு கைபேசியை
கண்டுபிடித்தானோ என்னவோ !
-------------------------------------------
------------
* உலகையே ஒன்றிணைக்கும்
இணையதளமா - உன் இதயகளம்
பார்த்தவுடன் அனைவரும்
பதியவைக்கின்றனர் தன் காதலை !
சூரியனும் நிலவும்
சந்திக்கும் அன்று சூரியகிரகணம்
என்றாவது உன் இதயம் என்னை பற்றி
சிந்திக்குமே அன்றே நம்
திருமணம்.
-------------------------------------------
-------------
*கற்காலத்தில்   இருந்து
நான் கடந்து வந்த பாதையை
பார்த்தல் -  நீ தான் என்
எதிர்காலம் என்று தெளிவாக
தெரியும்
இது உனக்கும் ஓர் நாள் புரியும்.
-------------------------------------------
---------
* காலங்கள் பல கடந்தும்
இன்னும் கானல் நீராகதான்
உன்னிடத்தில் என் காதல்
நானும் ஒரு கஜினிமுகமதுதான்
உன் இதயம் எனும்
கோட்டையை அடைய பலமுறை
படையெடுத்தும்
தோற்றுபோனேன்.
-------------------------------------------
-----------
* என்னவோ .....
வரலாறு உன்னை
உற்றுபார்க்கிறது
அனேகமாக அடுத்த அமைதிக்கான
நோபல்பரிசு உனக்குத்தான்.
காதலுடன

Thursday, August 27, 2015

அம்மா

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க
கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம்
தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ
கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை
என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம்
கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ
தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!

அம்மா

அம்மா.!!!

அம்மா.!!
நான் சுவாசிக்க
கற்றுகொடுத்தவள்..!!
எனக்கு சுவாசம் தந்தவள்..!!
பெண்மையை அலங்கரித்தவள்..!!
அன்புக்கு அடையாளம் தந்தவள்..!!
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தம்
தந்தவள்..!!
புரியாத உலகில் வாழ
கற்றுக்கொடுத்தவள்..!!
உள்ளம் இனிக்கும் உறவுகளை
என்னை சுற்றி படைத்தவள்...!!
உதிரத்தை ஒன்றாக்கி உருவம்
கொடுத்தவள்..!!
இந்த உலகத்தில் எத்தனையோ
தெய்வங்கள் இருந்தாலும்,
என் முதல் தெய்வம் நீ..!!
என் சுவாசமே நீதான் அம்மா..!!

Friday, August 7, 2015

வாசகி!! நீ வா சகி!! -

உடலுக்குள் தினம் நூறு
கோளாறுகள் நடக்குதடி..
மனதுக்குள் தினம் மர்ம
பூகம்பங்கள் வெடிக்குதடி..
இரண்டுக்கும் இடைநடுவில்
என்னுயிரும் மருளுதடி..

உன்பெயரை ஓதிக்கொண்டே
உருண்டையொன்றும் உருளுதடி..
குணவதியே!! குலமகளே!!
உன் வண்ணம் மயக்குதடி..
வனமயிலே!! வா வெளியே
என் நெஞ்சம் தவிக்குதடி..

பகலவனின் சுடுகணையும்
பாவி மெய்யில் குளிருதடி...
பகலிரவு உன் நினைவு
பன்மடங்காய் மிளிருதடி..

கருங்குயிலே!! நின்குரல்தான்
காதெல்லாம் கேட்குதடி..
கானகத்துச் செடிகளெல்லாம்
கனிவாய் கேட்டு பூக்குதடி..

அருங்கவிகள் ஆயிரம்தான்
உனக்காக தோற்றுமடி...
வருங்கவிகள் உன் எழிலை
காவியத்தில் ஏற்றுமடி..

அற்புதமே!! நின் பொற்பதமே-இந்த
அற்பனுக்கு சொர்க்கமடி...-உன்னால்
அப்பனுக்கும் எனக்கும்தான்
அடிக்கடி தர்க்கமடி...

கற்பகமே!! கடுகதியில்
என்னருகில் வந்திடடி...-பல
விற்பனங்கள் செய்திடுவேன்-உன்
சம்மதத்தை தந்திடடி...