Tuesday, October 30, 2012

அன்பை கடத்தும் கருவி!!

உன் உள்ளங்கைஉஷ்ணத்தில்
உருகி ஓடுகிறது
உயிர்தனை கரைக்கிறது
உன் மீது நான் கொண்ட
உண்மை காதல்....!

இறுக்க பிடித்து தான்
இருக்கிறாய் இருப்பினும்
இதயம் பறக்கிறது...!

இனிமை இசைதனை
இசைக்கிறது...!

ஆறாம் விரலாய் காதல்
ஆங்கே தோன்றியது...!

ஆண்மை நாணம்
ஆசனம் ஏறியது...!

ஆசையின் உச்சம் காண
ஆவலும் எழுப்பியது..!

அஞ்சு விரல்களும்
அன்பாய் என் விரல்களை
அனைக்க அறிந்து கொண்டேன்
அன்பை கடத்தும் கருவி
அழகி உன் விரல்கள்என்று...!


Sunday, October 28, 2012

.உச்சியில் பறக்க
யத்தனிக்கிறது என் உயிர்....!

சூடு தணிகிற இரத்தம் நிரம்பிய பிணம் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது
கையருகே இறந்து கிடக்கிறது
என் முகங்கள்
குழந்தை முகம்
மகள் முகம்
சகோதரி முகம்
நட்பு முகம்
கவி முகம்
சிந்தனை முகம்
பிழைப்பு முகம்
காதல் முகம்
மனைவி முகம்
தாய் முகம்
வனாந்தரத் தனிமையின்
நிசப்தத்தோடு
ஒன்றை ஒன்று
பார்த்த படிஒப்பாரி தெரியா
மூளை கிழிய ஓவென ஒலிக்கும்
தனித்த இதயத்துடன்
பறக்க மறந்த பறவையாய்
உணர்வுகளில் அமிழ்ந்து
கரைகிறது நான் எனும் உயிர்
திரும்ப வரும் உத்தேசமற்றதாய்
உச்சியிலே இன்னமும்
பறந்து கொண்டிருக்கிறது
பிரிந்த உண்மை உயிர்....!


Saturday, October 27, 2012

பிரபஞ்சக்கவிதை!!!

பிரபஞ்சத்திலேயே
மிகச்சிறந்த அழகான கவிதையை படைத்து விட வேண்டு மென்று முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்…

இப்போழுது அந்த வீண் முயற்சியை கை விட்டு விட்டேன்,

அந்த கவிதை ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டதென இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

உன்னைப்பார்த்த உடன்…!!!


என்னென்று சொல்ல!!!

விண்ணில் வெட்டுவதெல்லாம்மின்னல் என்றால்
உன் பார்வையை என்னவென்று சொல்வது....

பூப்பது எல்லாம் ரோஜா என்றால் உன் உதட்டை என்னவென்று சொல்வது...


உன்மடி (உண்மை டி)

ღநீ என் சுவாசம்

உன் முகம் மலராத நாள் எனக்கு உலகமே இருள்
நீ சிரித்தால் எனக்கு தீபாவளி
நீ இன்று எனக்கு உலகம் இல்லை
உன் கை விரல் படாத உணவில் ருசி இல்லை
உன் மடி இன்றி எனக்கு நித்திரை இல்லை


பூரிப்பு!!!

பூரித்துக்கொள்கிறோம்
உன் காதல் ஜெயித்ததால் நீயும்....

என் வாழ்வு கிடைத்ததால் நானும்...எம் மனம் சேர்ந்ததால் காதலும்...

எமை ஒன்றாய்
இணைத்ததால் கடவுளும்....


தட்சணை!!!

வாரம் ஒரு வெள்ளிக்கிழமைஉன் பெயரைஅர்ச்சதை போடும் ஐயருக்குதட்சணை கொடுக்கிறாய!்

ஓயாமல்உன் பெயரையே உச்சரிக்கும்அடியேனை விட்டு விட்டாயே ..?
தட்சணையாய்பணமொன்றும் கேட்கவில்லை
பார்வைகள் தந்தாலே போதும்.....


Friday, October 26, 2012

அழக பறவை!!!

சிறகில்லை என்றால்என்ன...?
நீயும் ஒரு வகைபறவை தான்....இதயத்தைகொத்துகிறாய்....!
காதல் கூடுகட்டுகிறய்....!
இனிய குரலில் இசைக்கிறாய்...!
(க)விதை தினம்உண்ணுகிறாய்...!
ஆகவே
நீதானடி அழகியபறவை....!


தனிமை சிறை!!!

என் தனிமையின் சிறையில்...இரும்பு கம்பிகள்இல்லை...!

கனமான பூட்டுஇல்லை...!

தாண்ட முடியா மதில ்இல்லை....!

ஆயுதம் ஏந்திய காவலாளிகளும்இல்லை...!

அத்தனை தொழிலையும்உன் நினைவு ஒன்றேசெய்கிறது....!!


விழிவழி சட்டுக்கொல்"

.உன்னூடானகாதல் அது இறக்கஆரம்பித்துவிட்டது....!

நீ ரகசியம்அறியாதவள்....!

என் காதலைகொல்பவள்....!

இனியும் கொலைகாரியைநான் நினைக்கபோவதில்லை....!

இவ்வளவு வீரவசனம்பேசியும் -என்னபயன்....?

தேவதை உனை மறக்கமறுக்குதடி மனம்....!

உன் நெஞ்சோடுஎனை வைத்துகட்டிக்கொள்....

இல்லை விழி வழி எனைசுட்டுக்கொல்...!.


கவிதை!!!

உன்னை நேசித்து நான் கவிதைஎழுதுகிறேன்....

ஆனால்,

என் கவிதை கூட என்னைநேசிக்காமல்,
உன்னை நேசிக்கிறது
என்னை போலவே ....


மயக்கம்!!!

மாயம் செய்யவில்லை...மயங்கிவிட்டேன்....அவள் பார்த்தஒரேஒரு பார்வையில்...


குடை!!

மழை நின்றாலும்
குடை சுருட்ட
மனமில்லாதது
என் காதல்...!


பிரம்மாவின் தூரிகை!!!

பிரம்மனின் தூரிகையைதிருடி வந்து விட்டேன்.

உன்னைப்போல் ஒரு பேரழகியை
இனி அவன் படைக்க மாட்டான்.


நூறு!!!

ஒன்றை புதைத்து
அன்னாந்து பார்த்தால்
நூறாய் தெரியும்...!

நிலத்தில் தென்னை...!
நினைவில் உன்னை...!


நினைவின் உருவம்!!!

நான் இன்னொருத்தியை
காதலித்து மணப்பது எளிது.....

உன் நினைவுக்கு
உருவம் கொடு....!


மரணப்படுக்கை!!!

மரண படுக்கை
என்பது
நீயும் -உன்
நினைவும்
இன்றி படுப்பது...!


முதலிடம்!!!

எந்த போட்டியிலும்எனக்கு முதலிடம்தேவையில்லை....!

உன் பக்கத்து இடம் கிடைத்தாலே போதும்....!


சிறகு!!!

தேவதைகள் சிறகுவைத் திருக்குமாம்
நம்புகிறேன்....!

காற்றில் கடந்து வந்த சிறகை கையில் எடுத்து கண்ணம் வருடிய உனை கண்ட நொடியிலிருந்து...!


ஆசை!!!

நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை....!

நின்ற பின் உன் கரம் பிடித்துநடக்க ஆசை....

உன் கரம் அது பிரியாமல்இறுக்கி கோர்க்க ஆசை.....

பிரியும் தருணத்தில் -பிரியமாய்உன் விழி நோக்க ஆசை....

விழி நோக்கி உன் இடை சேர்ந்துஉதட்டு வழி உறவாட
காதல் மழை நீ பொழிய....

நிற்கா மழையில் நின்றுநனைய ஆசை.....!


பிடிக்காத மழை!!!

பிடித்த மழையும்பிடிக்காமல் போனது....!

அடைமழை காரணமாய்
அவள்விடுமுறை எடுத்ததால்....!


பூக்கள்!!!

என் கையில் உள்ளபூக்கள்....எனக்கு முன்பேகூறிவிட்டன...நீ வாங்கவில்லை என்றால்வாடிவிடுவேன் என...!!


காரணம்"!

காரணம் இல்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லைஆனால்அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை ♥ ♥


காதல் மழை!!!!

நான் காதல்மழை
பொழிகையில்...

வெட்கக்குடை
விரிக்கிறாய்....!

பொழிவதா...?
வேண்டாமா...?

தப்பி போ இன்று....!

நாளை புயலுடன்
வருகிறேன்....!


நட்பு துரோகி !!!

பிடிக்கவில்லை என்றால்,
நட்புக்கு எதிரியாகக்கூட இருந்து விடு..
ஆனால்...
ஒரு பொழுதும்
துரோகியாக மாறிவிடாதே.


காத்திருக்கிறேன்!!!

மழை தீர்த்த
பின்பொழுதில்
நினைவின் துளிகள்
நீர்த்த பின்னே
மழையென நீ வந்து
நனைக்கும் முன்னே
வார்த்தைகளாய் வடித்தெடுக்க இயலா உணர்வொலிகள் மௌனமாய் குவிந்திருக்க காத்திருந்த கணங்கள் எல்லாம்
கை கொட்டிச் சிரித்திருக்க
நொடிப் பொழுதில் வெடித் தெழும் விம்மல்கள்
கடுகளவும் உனை அடையாது
வைத்திருந்த நேசங்கள் எல்லாம்
காற்று வந்து கலைத்தது போல் துடித்திருந்தேன்
தூரத்தில் துயரங்கள் விழித்திருக்க..


உயிரின் உயிரே!!!

உனக்காய் உதிர்வதெனில் -என்உதிரம் முழுவதும்உதிரும்...!.

உனக்கு ஏதும் என உணர்ந்தால் என்உயிர் பிறியஉடன் பதறும்....!

உதிரம் தனில்உள்ளேயும் நீ....!
உயிர் தனில்உயிரும் நீ....!


திரும்பக்கிடைக்காதவை!!!

சிறுவயதில் தொலைத்து அம்மாவிடம் அடிவாங்கித் தந்த கழுத்து நெற் சங்கலி...

தேர்வு நேரத்தில் திருடு போன சிப்பியாய் செதுக்கிய குறிப்பேடு...

தேர்ந்த ரசனையோடு தேடித்தேடி தெரிவு செய்த கைக்குட்டை...

பிடித்தவளின் பெயரையும் பிரியத்தையும் ஒருசேர நினைவுபடுத்தும் சாவிக் கொத்து...

மௌனம் ஆகாத அழைக்கப் படவேண்டிய அனைவரின் எண்ணும் தன்னுள்ளடக்கிய தொலைந்து
போன கைபேசி...

பிரியமானவர் அசாதாரணமாக அளித்த அழகான பேனா...

கண்ணும் மனமும்
கவர்ந்தவளிடம் லயித்த மனம்...

மேலும்....அவள் ப்ரியத்தில்
மீண்டும் மீண்டும்தொலையும் நான்....என்றும் திரும்பகிட்டாதவைகள்.....!


அன்னை மடி!!!

பெற்றெடுத்த வயிறுபற்றி எரிய
பேதலித்த மனத்துடன்அயல் நாட்டில் நாம"்

''உதயம் மண்ணில்நாம் காணும் போது உதிரம் வடித்து அன்னையவள் உயிர் பிழைத்ததே உலக அதிசயம்

"'தொப்புள்க் கொடி அறுக்கையில் துவண்டாலும் மழலையான எம் குரல்கேட்டு மகிழ்ந்திடுவாள்

மாமன் மாமிஉறவினையும் மறந்திடுவாள்
பெற்ற பிள்ளை எங்களையே
மன்னன் என்று அணைத்து அரவணைப்பால்"!!

கவிழ்ந்து விழுந்து பூமி பார்க்கையில் உடும்பு பிடித்தான்தன் மகனென்று
ஊரார்க்கு சொல்லி உளம் பூரிப்பால்!!

்"'தவழ்ந்து நானும் எழுகையில் தன்னை மறந்திடுவாள் தன் மகனே உயிரெனத் தன்னுயிர் தனை இழப்பால்"

'அடிஎடுத்து முதலடி வைக்கையில்ஆனந்த மேலாகி அன்றவள் சிரித்த சிரிப்பில் பூக்களும் மலர்ந்திடுமே"'!1

தத்தி தத்தி நானும் ஓடுகையில் ஐயோ மகனே என்று ஆவி துடித்திடுவாள் தவறி விழுவோம் நாமென பயம் கொண்டு"

"அதட்டி என் அப்பனவன் எனை விரட்டவே அங்கலாய்த்த அன்னை அடிவயிற்றில் அமிலம் சுரந்திடுமே"

"ஆடி ஓடி அன்னை மடிசாய்ந்த நாட்க்களை நினைக்கையில்
ஆவி போவதே நலமாம்'''''''''''


உனக்காய் துடிக்கும் ஓர் இதயம்!!!

உனக்காய் துடித்த ஓர் இதயம்..உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்..
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்..
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்..
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்..
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்..
இன்று துடி துடித்துக்கொண்டு இருக்கிறது தனியாக !..
இன்றும் கூட துடிக்கிறது உனக்காக ....
முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ எனநினைத்து?


அன்னைக்கு!!!

அன்னைக்கோர் ஆத்திசூடி

அம்மா.... -

என் உலகின்
ஆதவன் நீ....

இனியவைகள் குழைத்த
இனிப்பு நீ....

ஈதலின்
தலைவி நீ....

உண்மை இறையாய்
உள்ளவள் நீ....

ஊறு காலத்து
உறுதுணை நீ....

என்றும் நிலையாகும்
அன்பு நீ....

ஏதும் பழிக்கா
மொழியும் நீ....

ஐயம் பொழுதில்
அலறல் நீ....

ஒன்றும் வேண்டா
உள்ளம் நீ....

ஓடும் வாழ்வில்
ஊக்கம் நீ....

ஔவை(தாய்) எனும்
இறைபொருள் நீ....

ஃரினையில் எனை சேராமல்அழகு தமிழ் கவிக்ககாரணம் நீ....!..


மனம்!!!

தத்தி தத்தி விழுகிறாய்,
விழுந்த பின் சிரிக்கிறாய்,
பின் எழுகிறாய்!
உன்னிடமிருந்து உணர்ந்துகொண்டேன்,
விழுதலிலும், எழுதலிலும் இல்லை சோகமும், சந்தோசமும்
எல்லாம் அவரவர் மனதினில் என்று!


Wednesday, October 24, 2012

விவேகானந்தர்!!!

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’===============================ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில்சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர்.விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.திட்டவும் கூட செய்தனர்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவேஇல்லை.ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில்வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர்.விவேகானந்தரும் அதை எதிர்கொள்ளதயாராக எழுந்தார்.அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.


உனக்காக நான்"!!

எனக்காக;அழாதே என்று மழையிடம் சொன்னேன்மழை கேட்கவில்லை அழுதது எனக்காக
எனக்காக;
அலையாதே என்று கடல் அலையிடம் சொன்னேன்.அலை கேட்கவில்லை எனக்காக அலைந்தது அவள் பின்னால்
எனக்காக;
சுற்றாதே என்று பூமியிடம் சொன்னேன்பூமி கேட்கவில்லைசுற்றியது எனக்காக அவள் பின்னால்

பெண்ணே;உனக்காக தான் நான் -என்றுஉன்னிடம் சொன்னேன்.நீயாவது கேட்பாய?


கவிதை

உன்னை நினைத்துநான் விடும்கண்ணீரும்என் கதறலும்உனக்கானகவிதையாய் மட்டும்மாறுவது ஏனோ..!!


Monday, October 22, 2012

நேசம்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
பிரிவையும் நேசிக்கிறேன்
கவலையின்றி அல்ல
நெஞ்சில் நேசம்இன்னும் எத்தனையென்று தெரிய..♥♥♥்♥♥♥


பிடிக்காது!!!

ღ♥ღ♥ღ♥விரும்பும் இதயம்நம்மை விரும்பாதபோது "வாழ" பிடிக்காது ..ஆனால்நம்மை விரும்பும்இதயத்தை நினைத்தால்"சாக" பிடிக்காது♥♥♥


Sunday, October 21, 2012

வலி!!!

வருடங்கள் நான்காகியும் என்னை விட்டு பிரிந்த சென்றவளின் வலி இன்று இந்த நிமிடம் வரை உள்ளது!!!

காதல். !

உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, செல்வங்களை தொலைத்து,
உண்மைகளை மறுத்து, உலகை மறந்து
ஒருவருக்காக காத்திருப்பதே காதல். !

மத்திய சிறை

என்னை உன் மனச்சிறையில்தானே வைக்கச் சொன்னேன் !!உன் அப்பனிடம் சொல்லி ஏன்என்னை மத்திய சிறையில் வைத்தாய்?

நீயிருந்தால்!!!

சொல்லிவிட்டு செல்!!!

கானல் நீர் !

என் உயிரையே பறித்து சென்றாய்!!!