Wednesday, February 27, 2013

உன் கண்கள் என்ன கற்பூரத்தால் செய்ததா ,
உன் பார்வை நெருப்பில் என்னை பற்றியெரியவைக்கிறது ,
உடலில் ஒரு வலி வந்தபோதும்
உருகாமல் நின்றேனே ,
உயிரில் ஒரு வலி
ஒரு பூவால் வந்த போது
உருகுலைந்துபோனேனே

காதல் என்னை கொன்றபோதும் கூட என்னை நேசிக்க வைக்கிறது!!!!

கொஞ்ச கொஞ்சமாய் என்னை ஏனடி கொல்கிறாய்,

உயிரை கொல்வது பாவம் என்று எறும்பிற்க்கும் கருணை பார்க்கும் நீயா

உன்னை நேசிக்கும் என்னை உயிருடன் கொல்கிறாய்!!!!!

மரணம்

நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில்

நான் இறந்துவிடுவேனோ தெரியாது .....!

ஆனால் நான் இறக்கும் நிமிடத்திலும்

உன்னை நினைத்துக்கொண்டுதான்­ இருப்பேன் .......!

Tuesday, February 26, 2013

மாண்புமிகு நீதியரசர் சந்துரு

இங்கு ஏதும் தெய்வங்கள் இல்லை,-அதனால்
பூக்கள் வேண்டாம்!

இங்கு யாரும் பசியாக இல்லை-அதனால்
இனிப்புகள் வேண்டாம்!

இங்கு யாருக்கும் குளிர் இல்லை-அதனால்
சால்வைகள் வேண்டாம்.

    -மாண்புமிகு நீதியரசர்  K.சந்துரு.

#தன் வீட்டுக் கதவிலும்,
தனது அறையிலும் எழுதிய வாசகம்!

*தான் ஓய்வுபெறும்போது
உள்ள நடைமுறையான ஆடம்பர கொண்டாட்டங்களையும்
வேண்டாம் என்று தவிர்த்து,
மக்களின் வரிப்பணத்தில் எனது கொண்டாட்டங்கள் வேண்டாம் என அறிவித்த மகான்.

*மைலார்ட் (கடவுளுக்கு நிகரானவர்) என்று நீதியரசர்களை கூப்பிடும் வழக்கத்தை தனது நீதிமன்றத்தில் தடைவிதித்து
சார் என்றே அழைத்தால் போதும் என்றவர்.

*தான் நீதி அரசராக பொறுப்பேற்றவுடன்

நீதியரசர்களுக்கு அளிக்கப்படிம் சளுகைகளையும்,வேண்டாம் என எழுதிக்கொடுத்து,

இறுதிவரை நீதிக்காகவும் நியாயத்தின் அடிப்படையிலும் ,
அனைத்து தீர்ப்புகளையும் வழங்கி,

நீதிக்கே ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய மாமனிதன்.

#நீதியும் நேர்மையும் உள்ளவரை உங்கள் பெயரும் நிலைத்திருக்கும் ஐயா !

Saturday, February 23, 2013

என் கண்களாக
இருந்தவளே
என் கண்ணீராகவும்
இருக்கிறாள்


Wednesday, February 20, 2013

மூலிகைக் கீரைகள் !!!-----------------------------------------புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை!தூதுவளையின் மருத்துவ குணங்கள்மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால்நிரந்தரத் தீர்வு காணலாம்.தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டுமாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில்போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்றுவேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால்நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன.இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.தூதுவிளங்காயைச்சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில்சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது.ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில்கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.தண்ணீரில் கலந்து சாப்பிட்டால்செய்யான் கடி விஷம் தீரும்.தூதுவளை இலையை நெய்யில் வதக்கி,துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால்வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு,தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால்புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று,வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும்தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள்,வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும் காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும்.வாயு தொந்த்தரவு தீரும்.பழம் இது மார்பில் இறுகிய சளியைநீக்கும்.இருமல்மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

Monday, February 18, 2013

...".எல்லாமுமாய்....

"உன்னை சந்திக்காமலேயே இருந்திருக்கனும்...
அப்போதுதான்....,
உனக்காக ஏங்கியிருக்க மாட்டேன்..உன்னை காதலித்து இருக்கமாட்டேன்...,
உனக்காக அழுது இருக்கமாட்டேன்.
உன் பொய்யான உறுதிமொழிகளால்,
உனக்காக காத்திருந்து கரைந்திருக்கமாட்டேன்...

ஆனாலும்....

உன்னை சந்தித்ததால் சந்தோஷமாக இருந்திருந்தேன்...

ஏனென்றால்...

என் மேல் அக்கறை கொண்டாய்..,
என் மேல் பாசத்தை செலுத்தினாய்..,
என் குறைகளை திருத்தினாய்...,
என் நிறைகளை பாராட்டினாய்..,
எனக்காக எல்லாமுமாய் இருந்தாய்...,
என்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத நீ......................
என்னையேன் விட்டுப் பிரிந்தாய்?

சந்தோஷத்தைவிட துக்கமே,என்னைச் சொந்தம் கொண்டாடுகிறது


Sunday, February 17, 2013

நீ என் இதய துடிப்பாய் இருப்பதைஎன் கண்கள் மறந்து விட்டதால்நீ எங்கே என்று உன்னை தேடுகின்றன....


ஒத்திகைகள பார்க்கும் பொழுது
கைவசம் பல திட்டம்!!!

உன் அருகில் வரும்பொழுது
என்னில் பதட்டம்.......!!!!


நிர்வாணமான
என் கவிதைகளுக்கு
எப்பொழுதும்
அழகான ஆடை
நீ தான்....


ரேகைகளை பார்த்து
எதிர்காலம் சொல்வேன்
என்றதும்
கையை நீட்டுகிறாய்

ஐயோ
எனக்கு உதட்டு ரேகையை தான்
வாசிக்கத்தெரியு­ம்
என்றதும் ச்சீ என்று
கண்ணை மூடிக்கொள்கிறாயே....


இப்படியும் சில பழமொழிகள்

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும

்* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும

்* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள

்* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்­கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே


மழைக்காலத்தின் முடிவில் . . .

நிலத்தின் அடியாழத்தில்
ஈரம் படரவிட்டிருந்த மழைக்காலம்

அப்பொழுதுதான் முடிந்துவிட்டிருந்தது
பூக்களின் வாசனை
பரவிக்கிடந்த இரவு நேரத்தில்
எனது படுக்கையில் அவளைத் தேடினேன்

அருகில் காணாத அவளை
நகரத்து வீதிகளில் தேடி பரிதவித்தேன்

இரண்டு பக்கங்களிலும்
உயர்ந்த கட்டடத்தை
அரண்களாகக் கொண்டிருந்த
அகலமான வீதியை

நடந்து கடக்கிறேன்
சாளரங்களின் வழியே
கசிகின்ற ஓசைகளில்
அவளைக் கண்டடைய
முடியவில்லை

கோபுரங்களின் மறைவிடங்களில்
பதுங்கிக் கிடக்கும்
புறாக்களின் சிறகசைப்பில்
அவளைக் காணவில்லை

நீண்டு படிந்திருக்கும்
விளக்குக் கம்பத்தின்
நிழலில் அவளைத் தேடிக்
களைக்கையில் நனைந்திருந்த நிலம்
அவளது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது .


நெய்த உடையில் அவிழும் காலம். . .

இந்தக் குளிர்காலத்தை
மஞ்சள் நிறப்போர்வையை
விரித்துவரவேற்க
இப்பொழுதே ஆயத்தமாகிறேன்

தூர தேசத்திலிருக்கும்
அவன்வரும் நாட்களுக்காக
நெய்யத் துவங்கியிருப்பான்
அதன் நிறம் நான் அறியாதது

நெய்த உடையைப் போர்த்திக் கொண்டதும் வயதின் தொலைவு உடலிலிருந்து அவிழத் துவங்கிவிடும்
என்பது நான் அறிந்ததே

குளிர்காலம் இப்படியிருக்கக்கூடும் என ஊற்றெடுக்கிறது
பச்சைப் புல்வெளியின் சுனை உறைந்த தண்ணீர் எங்கிருந்து

புறப்படுகிறது
என்பதை அறிகையில்
நீலமும் பச்சையும் கலந்த விளக்கொளியில் நீரூற்றுக்களுக்கு மத்தியில்
தனித்திருக்கும்

அவன் நெய்து கொண்டிருக்கும் போர்வையின் வண்ணம் உணர்வேன் அப்பொழுதுதரிசு நிலத்தில்
புல் பூண்டுகளை முளைத்தெழச் செய்யும்
கல்மழையின் மேகசாலைக்குள்
பிரவேசிக்கத் துவங்கியிருப்பேன் .


உயிர்த்திருத்தல் . . .

உன் வெப்பத்தால் நிறைந்த கருவறை இருளால் சூழ்ந்திருக்கிற­து
உயிர்த்தெழுந்த என்னை அது உயிர்ப்பிக்கிறது

நெருப்பும் நெருப்பும் அணைகையில் அணையும்
நெருப்பில் உயிர்க்கிறேன் உன்னை உயிர்ப்பிக்கிறேன்


Saturday, February 16, 2013

பெண்னே!!!

உன்னை போல ஒரு பெண் குழந்தையை பெற்றுவிடாதே !

என்னை போல பல
கிறுக்கன்கள் உருவாககூடும் ...;)



"உலகத்தில் விரும்பப்படாதவர்கள்
அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !

வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது
இந்த அழியாத காதல்"

'''தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே '''
''' தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட'''

எத்தனை முறை அழுதாலும் கரைவதாக இல்லை உன் நினைவுகள் மட்டும்.....

எல்லோரும் இருந்தும்
யாரும் இல்லாதது போலவே
இருக்கிறது நீ ஒருத்தி மட்டும்
என்னோடு இல்லாததால்

♥ மழையில் நீ நனைகையில் எனக்கு காச்சல் வரும் ♥
♥ வெய்யிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் ♥
♥♥♥ உடல்கள் தான் ரண்டு உணர்வுகள் ஒன்று ♥♥♥

என் அன்பே நீ தான் என் உலகமே
எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன்பே
நான் உன்னை பிரியாமல் இருக்க வரம் ஒன்று வேண்டும்...........!!!!!!!

பத்திரமாய் பார்த்துக் கொள்
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும். !

பத்திரமாய் பார்த்துக் கொள்
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும். !

உன்னை நேசித்த போதுதான் உலகம் அழகாய் தெரிந்தது. .
உன்னை சுவாசித்த போதுதான் வாழ்வின் அர்த்தம் புரிந்தது. !

என் உயிருக்கும் உணர்வுண்டு என்று
உணர்த்திய என் செல்லமே நீ மட்டும் போதும் எனக்கு............!!!

மழை பெய்கிறது....
என்னை இடிதாக்கி கருகிவிடமாட்டேனா என்றொரு நம்பிக்கையில் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு நான்........
விவேகானந்தர் பார்வையில் பெண்கள்..!
*************************************

உலக அரங்கில் இந்து மதத்தை தலைநிமிரச் செய்த சுவாமி விவேகானந்தருக்கு இன்று 150-ஆவது பிறந்தநாள். இந்த பொன்விழா நாளில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்...

உலக சமய மாநாட்டின் மூலம் பிரபலம் ஆன விவேகானந்தர், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆன்மிக உரை நிகழ்த்தினார். அவரது உரை வீச்சு, இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் தந்தது. அந்த இடங்களுக்கு எல்லாம் அந்த இளம்பெண்ணும் சென்றாள். உண்மையைச் சொல்வது என்றால், விவேகானந்தர் மீது பைத்தியமாக திரிந்தாள். அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவள் ஆழ்மனதில் புதைந்துகிடந்த ஆசை.

ஒருநாள் விவேகானந்தரை நேருக்கு நேராக சந்தித்துவிட்டாள். “உங்களை வெகுநாட்களாக பின்தொடர்ந்து வருகிறேன். இப்போதுதான் உங்களுடன் நேரில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது. அமெரிக்க இளைஞர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னைத் தினமும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால் நானோ உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்...’’ என்று மேலோட்டமாகப் பேசினாள்.

விவேகானந்தருக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்துவிட்டது. இந்தப் பெண் மட்டுமல்ல, நிறைய அமெரிக்கப் பெண்கள் அவர் மீது காதல் கனை வீசி இருக்கிறார்கள். அதை மனதில் நினைத்துக்கொண்டவர், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே?’’ என்று கேட்டார்.

“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதாவது, நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்குக் குழந்தை பிறக்கும். அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேச எண்ணினேன்’’ என்று, உண்மையைச் சொல்லிவிட்டாள் அவள்.

அவளது பதிலுக்கு, நிதானமாக மறுபதில் சொன்னார் விவேகானந்தர்.

“தாயே! எனக்கு 31 வயது ஆகிறது. உங்களுக்கு 20 வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து 20 வயதைத் தொடுகின்ற போதுதான் அந்தக் குழந்தை அறிவானதா, இல்லையா என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீங்கள் என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளலாமே?’’ என்றார்.

எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்த்தார் சுவாமி விவேகானந்தர்.

எனது முடிவுக்கு துணை புரிய எந்த விதமான போதையையும்
மயக்க வெறியையும் நான் விரும்பவில்லை .

நான் ஒரு யதார்த்தவாதி.
என்னுள் எழும் உணர்ச்சியை பகுத்தறிவின் துணையால்

அடக்கியாள முயற்ச்சித்துக்கொண்டு வருகிறேன்.
இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை

ஆனால் மனிதனின் கடமை இடையறாது முயற்ச்சிப்பதே…
ஜெயாப ஜெயம் சந்தர்ப்பங்களையும் சுற்று சார்புகளையும் பொருத்தது.


– பகத் சிங்
எனது முடிவுக்கு துணை புரிய எந்த விதமான போதையையும்
மயக்க வெறியையும் நான் விரும்பவில்லை .

நான் ஒரு யதார்த்தவாதி.
என்னுள் எழும் உணர்ச்சியை பகுத்தறிவின் துணையால்

அடக்கியாள முயற்ச்சித்துக்கொண்டு வருகிறேன்.
இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை

ஆனால் மனிதனின் கடமை இடையறாது முயற்ச்சிப்பதே…
ஜெயாப ஜெயம் சந்தர்ப்பங்களையும் சுற்று சார்புகளையும் பொருத்தது.


– பகத் சிங்

விதைத்தவன் உறங்கினாலும்
விதை ஒருபோதும் உறங்குவதில்லை!

     - பிடல் காஸ்ரோ


Thursday, February 14, 2013

இன்றைய சமூக நிலமை!!!

கொலை செய்தவன்
எங்க இனமாக இருந்தால்-அப்ப

செத்தவன் மேலதான்
தப்பு!!!!!


காகிதம்!!!

கசக்கும் போது
குப்பையாய் பார்க்கிறோம்!!!

காசாக்கும் போது
கடவுளாய் பார்க்கிறோம்!!!

நாமும் காகிதம் தான்

குப்பையாவதும் கடவுளாவதும்
நம் தரத்தப் பொறுத்துதான்!!!


எத்தனை முறைதான் சாவதடி!!!

எத்தனை முறைதான் சாவதடி ?

துடுப்பே இல்லாத ஓடமடி - நீ
துணையாய் வந்தால் போதுமடி

அடுப்பே இல்லாத சமையலடி -நீ
அணைத்தால் அதுவே வேகுமடி

மங்கையே அச்சம் போதுமடி - நம் மஞ்சத்தில் நாணம் சாகும்மடி

அங்கத்தில் எல்லாம் அத்துப்படி- உன்
அத்தனை பல்லும் முத்து கொடி ....

இதழில் ஊரும் செந்தேனடி -உன்
இடையில் வீழ்ந்து செத்தேனடி

கழுத்தில் கருகிய மச்சமடி -கொஞ்சம்
குனிந்தால் கோபுர உச்சம்மடி

இத்தனை அழகும் பாவமடி - நான்
எத்தனை முறைதான் சாவதடி ?

பித்தனாய் ஆக்கி விட்டாயடி - உன்
வெத்திலை இதழால் தொட்டாயடி

மழைபோல் பொழியும் முத்தமடி - நம்
மஞ்சத்தில் மூன்றாம் யுத்தமடி -உன்

காதல் திணமும் தோணுமடி - நீ
கடைசி வரைக்கும் வேணுமடி ..

மடிவதில் அச்சமே இல்லையடி -உன்
மடியில் மடிந்தால் சொர்க்கமடி

செடியில் நீறுக்கு வேரில் வழி - நீ
சென்று விட்டால் எனக்கு ஏது வழி..?