Tuesday, August 20, 2013

பல நாட்களாய் பட்டுப்போப் கிடந்த மரத்திற்கு
சமீப காலமாகம்தான் வசந்த காலம் வீசத் தொடங்கியது!

யார் கண் பட்டதோ தெரியவில்லை!

இலைகள் துளிர்விட்டு எழுகையில் மீண்டும் வறண்ட காற்று
பூப்பூக்கும் முன்னமே இலையோடு சேர்ந்து
கிளைகளும் கொட்டிவிட்டன!

Monday, August 12, 2013

நீ போவதென்றால் போ...
ஆனால்
உன்னை விட்டால்
வேறு யாரும்
எனக்கு இல்லை என்று மட்டும்
நினைத்து விடாதே...
உன் ஞாபங்கள் இருக்கின்றன
அது போதும் எனக்கு.

உன்னை
இழந்து இருப்பேன்
என்றும் நினைக்கவில்லை
உன்னை
இழந்த பின் இருப்பேன்
என்றும் நினைக்கவில்லை

Saturday, August 10, 2013

ஒரு விடுதலை வீரன்
மரணிப்பதில்லை,அவன் அந்த
தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம்
தேசபக்தர்களின் இதயங்களில் என்றும்
வாழ்ந்து கொண்டே இருப்பான்.

அப்படியான ஒரு விடுதலை வீரன் தான்
நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும்
விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ்
சந்திரபோஸ்” ஆவார்.

ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய
தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக
இவரையே தன் நெஞ்சில்
ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு
பெருமைப்பட்டுகொள்ளுகிறது.

யார் இந்த நேதாஜி....

அவசரக்காரர்-ஆத்திரக்காரர்
என்று கூறினார் மகாத்மா காந்தி

படபடப்பானவர்-பண்படாதவர்
என்று கூறினார் ஜவகர்லால்
நேரு அவர்கள

ஆனால்
வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு
விடுதலை வீரன்
கொள்கை வீரன் என்று.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24
வயதில் I.C.S என்ற
உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.

35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த
கட்டாக் நகரில் தான் பிறந்த
மாளிகையை தேசத்திற்காக
அர்பணித்தார்.

42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த
அகில இந்திய காங்கிரஸ்
பதவியை துாக்கி எறிந்தார்.

44 வயதில் தன் தேச விடுதலைக்காக
தாய்
நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம்
சென்றார்.

இப்படியாக தனது தேசத்தின்
விடுதலைக்காக முழுமையாக
அர்பணிப்புடன் போராடிய
ஒரு விடுதலை வீரன் இவன்.

தேசத்தை விட்டு வெளியேறி
இருப்பினும் கொண்ட கொள்கையில்
ஒரு உறுதியுடன் அன்றைய உலக
ஒழுங்கை நன்கு விளங்கிக்
கொண்டு அதனை தனது தேசத்தின்
விடுதலைக்காக மாற்றியமைத்த
ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.

தன் உயிரையே பணயம்
வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும்,
கிழக்காசிய நாடுகளிலும்
அலைந்து திரிந்து ஒரு தற்காலிக
சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய
இராணுவத்தைத்
திரட்டி போரிட்டு உலக
வரலாற்றிலேயே ஒரு புதிய
சாதனையை அத்தியாயத்தை
உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ்
சந்திரபோஸ் அவர்களே.!!

உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...

Friday, August 9, 2013

இரும்புச்சிறைதனில் எங்கிருந்தோ
கிடைத்த இறுதி
எழுதுகோலாய் காதலிக்கப்பட்டேன்
விரகதாபத்திலிருப்பவனின் விரல்கள்
விரக்தியின்
முழு வெப்பத்தையும் விளம்பிட
வெண் தாள் வடிவம் வழுவிய படியே
தூக்கியெறிதலில் தூங்கியிருக்கும்
விடுதலைத் திலகம்
நுதல் விழுதலை எதிர் நோக்கிய வண்ணம்
மயானப்பந்தியில் கீர்த்தனை
மெட்டிசைத்தவன்
ஆனந்த குளத்தினுள் முகாரிக

Tuesday, August 6, 2013


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love
virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget
Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent
philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray
confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake
motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't
despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry
and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the
great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the
good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't
shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't
flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to
befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your
speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously
space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19.
Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your
parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget
gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry
has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't
land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24.
Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with
snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton
bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-
coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest
the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when
young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is
obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is
corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives
superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth
beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from
the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all
that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake
friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon
animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the
learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide
knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't
swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal
games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands
Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate
with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being
paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be
righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt
others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action
with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out
good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being
insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show
fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a
lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be
trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the
unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57.
Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59.
Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate
every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame
the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in
unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't
listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget
your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't
compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the
beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally
agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart
from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into
a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over
snack.
71. நூல் பல கல் / 71. Read variety of
materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow
your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good
manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't
involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble
in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid
unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no
vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away
from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out
for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of
honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81.
Protect

Saturday, August 3, 2013

உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
நீ
உபயோகித்துக் கொண்டாய்.
இருட்டில்
நடந்துகொண்டே
உன்
நிழல் களவாடப்பட்டதாய்
புலம்புகிறாய்
பாறைகளில்
பாதம் பதித்துவிட்டு
சுவடு தேடி
சுற்றிவருகிறாய்.
நீ
பறக்கவிடும் பட்டத்தின்
நூலறுந்ததை மறந்துவிட்டு
வாலறுந்ததற்காய்
வருந்துகிறாய்.
முதுமக்கள் தாழிக்குள்
மூச்சடக்கி முடங்கிவிட்டு
சுதந்திரக்காற்று
சிறைவைக்கப் பட்டதாய்
அறிக்கைவிடுகிறாய்.
உன்
இறகுகளை உடைத்துவிட்டு
சிறைகள் திறக்கவில்லையென்று
வாக்குவாதம் செய்கிறாய்.
விரல்களை வெட்டிவிட்டு
தூரிகை
தொலைந்ததென்று
துயரப்படுகிறாய்.
சில்லறைகளை சேகரிப்பதில்
மூழ்கிவிட்டு
மதிப்பீடுகளுக்குக்
கல்லறை கட்டுகிறாய்.
நிறுத்திவிடடி.
நிறுத்திவிடு
சுவாசப்பையை
சுத்தீகரிப்பதாய் நினைத்து
நாசிகளுக்குள் இனியும்
நீர் இறைக்கவேண்டாம்.

Friday, August 2, 2013

பொழுது போக்குக்காக உன்னை காதல்
செய்யவில்லை...
என் பொழுதெல்லாம் நீ வேண்டும்
என்பதற்காக காதல் செய்தேன்
ஆனால் நீ........????

என்னை தூங்க வைப்பதும்,
தூக்கத்தை கெடுப்பதும்,
அவ்வப்போது வரும் உன் நினைவுகளே!!

Thursday, August 1, 2013

கலைந்த கனவாக,
தொலைந்த உன் பிரியங்களுக்காக
ஏங்குகிறது என் மனசு....

இருளில் மறைந்த நிழலின்
நிழற்படதொகுப்பாய்
என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது உன்
நினைவுகள்.........

காதல் கற்கையில் எனக்கு பிடித்த பாடம்
முத்தவியலும்
பிடிக்காத பாடம் மௌனவியலும் உன்
கற்ப்பித்தலில்........

உன் நினைவாற்றின் புதைகுழிகளில்
ஆங்காங்கே புதையுண்டு மறைந்து போகிறது
என் நிகழ்காலம்........