Sunday, December 21, 2014

அகமுடையார்

அகமுடையாரது பின்னனி
பெரும்பாலும் சேர
மன்னரையே பின்பற்றியது.
இதை பதிற்றுபத்து போன்ற சேரர்
புகழ்பாடும் இலக்கியங்ககளும்
மெய்பிக்கின்றன.கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய
கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர
மாவலி வானாதிராய அகம்படிய
முதலி சிங்க தேவன் ”
என்று குலசேகர
மாவலி வானதிராயரை பற்றி
குறிப்பிடுகிறது.
வானர் என்பவர்கள் மன்னர் குலத்தோர் புகழ
பெற்ற சேர மரபினர் ஆவார்.
மூவேந்தருடனும் மன
உறவு பூண்டவர். கரிகால சோழனின்
மனைவியும் வானர் குல பென்மனி,
ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான்
வந்திய தேவர் இந்த வானதிராயர்
குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,
வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு.
வானவன் (அ) வானவரம்பன் என்ற
சொல்லுக்கு வானை முட்டும்…

Sunday, November 23, 2014

கப்பல் ஒட்டி,
கவி புனைந்து,
வெறும் கதருடுத்தி,
சொத்தை விட்டு,
சுகத்தை விடுத்து,
உறவை உதறி,
கொடி காத்து,
குருதி சிந்தி,
சின்னவர் உயிர் நீத்து,
சிறை சென்று,
களி தின்று,
கல்லுடைத்து,
செக்கிழுத்து,
உணவு மறுத்து,
உறங்க மறந்து,
உணர்வை கொட்டி
பெற்றுத்தந்த சுதந்திரத்தை நானும்
மதிக்கவே செய்கிறேன்..

நான்

நான்?
விடை தெரியா வினாவொன்று
வழி தெரியாமல் உள்ளிருக்க,
வடிகாலின்றி எண்ணங்கள்
மனத்திரையில் மன்றாடும்.
'நான்' என்று ஏதுமில்லை;
பிறர் சொல்லும் 'நான்' நானில்லை;
மனம் கூறும் 'நான்' பிடிக்கவில்லை;
எந்தையும் தாயும் உருவாக்கிய
'நான்' தெரியத்தான் இல்லை!
பல வடிவெடுத்ததில்
என் உருவம் மறைய,
என்னை நானே தேடுகிறேன்;
என்னை நானே எதிர்க்கிறேன்!
'என்'னை 'நான்' பார்க்கும் கண்ணாடி
புகையாய் இருக்க,
பனிமூட்டம் தானோ?!
கை வீச மறைந்திடுமோ
'நான்' யார் என்று?!

Sunday, October 12, 2014

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும்
நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும்
குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர்
வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய்
உச்சிவரை நேர்வகிடெடுத்து
தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து
போகிறாள் அவள் !

Wednesday, September 17, 2014

பள்ளி செல்லும் போது....
பாதை இரண்டும் வேறு
என்னைப் பார்த்த பின்
தான் செல்வாய்
பள்ளிக்கூடம் அன்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

Tuesday, September 9, 2014

உன்னையிழந்த நாட்கள் பற்றி
இதோ...இன்னுமொரு கவிதை...!

பிரிவுச்சிலுவையில் அறையப்பட்ட
என் காதலின் வலி
உயிரின் அத்தனை அணுக்களிலும்
பாறாங்கல்லாய் கனகனக்கிறது..

எனது கவிதைகளின்
கண்ணீர்த்துளிகளில்
உருண்டுகொண்டேயிருக்கின்றன
உன்னோடான என் நினைவுகள்..

தீயின் நிழலில்
எரிந்து சாம்பலாகும்
என் தனிமையின் ரணங்கள்
கர்ண கொடூரமானவை.

காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?

நீ நான்
நாமாகி
நாம்
மீண்டும்
நீ நானானோம்..
அப்படி ஏனானோம்..?
நமக்கே தெரியவில்லை.

பார்த்துக்கொண்ட பார்வைகள்
பேசிக்கொண்ட வார்த்தைகள்
முத்தமிட்ட உதடுகள்
சேர்ந்திருந்த மனசுகள்
எல்லாமும் இன்று
பாழடைந்த சினைவுகளாய்
நிர்மூலமானது ஏன் பெண்ணே...?

காற்றில் கிழிபடும்
நூலறுந்த காற்றாடியாய்
நம் வாழ்க்கை..
போகும் திசையும் புரியவில்லை
சேரும் வழியும் தெரியவில்லை..

மீண்டும் ஒரு முறை
பார்க்கும் ஆவல் எனக்கில்லை.
வலிக்க வலிக்க
நகரும் நாட்களில்
இன்னும் வலியேற்றத்திராணியற்ற
நாணல் நான்..!

இனி
உன் வழியில் நீ
என் வழியில் நான்..
ஆயினும்
எவ்வழியில் நம் காதல்????
அதற்கு மட்டும் விடை சொல்லிப்போ..!

Thursday, August 7, 2014

புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..
ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள்
பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.
முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள்
இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..
அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர்
அழுகட்டும்..அழியட்டும்.
மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள
சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..
எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்
இனியதாக
அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடம் தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லா சுதந்திரமாய்
கிடைக்கட்டும்-
போரில் சாய்ந்து இறந்தவர்க்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.
தளிர்த்த,.தளிர்க்கும் இளந்தளிர்க்கு
சந்தோச
நிகழ்வு இனி உண்டாகட்டும்.

Sunday, August 3, 2014

வலியது ஜெயிக்க
எளியது பிழைக்க
நியாயமாகும் சில
துரோகங்களின் உடன்பாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறது
உலகில் மனிதம் ..

நினைவில் காடுள்ள
மிருகத்தை எளிதில் பழக்க
முடியாது...

எதை இழந்து தேடினாலும்
நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைகளே நீயாகிறாய்
பின் என்னதான் செய்வதாம்
உன்னை காதலிக்க
மட்டுமே செய்வதை தவிற!

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்
உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்
நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன
என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்
வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்
உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்
மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்
மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்
உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்
அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்.
சம்மதமா அன்பே!!
பெய்யென பெய்யும் மழை

கடற்கரை மணல்
அந்தி வானம்
ஏங்கும் அலை
ஒழிந்த சூரியன்
நீ
நான்
காதல்!!!
பின் கவிதைகளாய்
என்ன சொல்வது
நீ நான் நாம் என்ற
காதலை தவிற!!!

அலைகளின் நடுவில்
விடுதலை பெற்ற
விருச்சங்களில்
கறைந்தொழுகிய
கடற்கரை மணலில்
காதல்
தீண்டலில் தொடங்கி
சூவாசத்தில் முடியத் துடிக்கும்
ஷிருங்கார சாசனத்தின்
சில்மிசியே!
எனக்காக நடத்த
உன் கால்களும்
உனக்காக மணல் அள்ளிய
என் கைகளும்
நமக்கான காதலை
பதியம் போட்டது
கரையெல்லாம்!

Friday, June 6, 2014

தடுப்பு மருந்தும் இல்லை
தடுக்க விருப்பம் இல்லை...
நரம்பில் ஓடும்
குருதியை போலே
நான் வழுக்கி ஓடுறேன்
இந்த உலகத்தின் மேலே..

புவியீர்ப்பு விசையால்
நான் திடமாக நடந்தேன்
உன் விழியீர்ப்பு விசையால்
நான் தடுமாறி விழுந்தேன்
நியுட்டனின் மூன்றம் விதியது
உண்மையானது....
உன் காதலால் எனக்கு
காதல் வந்தது...

Monday, June 2, 2014

இன்றைய விவசாயத்தின் நிலைமை

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம்
மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_
பூமி
யாரையும் கைவிடாத
தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட
சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த
சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டா
ல்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பா
ன்.....

iPodடை'யும் Androidடை'யும்
தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன
முடியாது
மதுவை மட்டும்
தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க
முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள்
வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _ உண்மை
இன்று புரியாது.

உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில்
துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...

Wednesday, May 28, 2014

உயிரே...
வளைந்து ஓடும் நதிகள்
கூட கடலில் முடியும்...
உன் நினைவு என்னில்
முடியவில்லை...

காற்றாட்டு
வெள்ளம் கூட...
மழை வந்தால்
மட்டுமே வரும்...
உன் நினவு வரும் போதெல்லாம்
என்னில் மழைதான்...
உருகும்
பனிக்கட்டியால்...
கங்கை ஓயாமல்
ஓடிகொண்டே இருக்கிறது...
உருகும் என்
இதயத்தால்...
என் கண்ணீர் கங்கை
ஓயாமல் ஓடுதடி...
என் இதய துடிப்பு
நிற்கும் வரை...
உன் நினைவு அலைகள்
என்றும் ஓயாமல் ஓடுமடி...
என்னில் முடிவில்லாத
என் பயணமும்...
முடியாத உன்
நினைவுகளும்...
என்னில் ஓயாமல்
தொடருமடி...
கண்ணே என்னோடு
நீ இல்லை என்றாலும்...
எனக்கு
சந்தோசம்தானடி...
உன் நினைவு
என்னுடன் இருகிறதே...
உன் நினைவில் நான்
நீந்துவதர்காகவே...
மரணத்தை நான்
வெறுக்கிறேனடி...
வாழ்ந்து பார்கிறேன்
மண்ணோடு...
உன் நினைவில் நான்.....

Tuesday, April 29, 2014

உனக்கென்ன
எளிதில்
தீண்டி
செல்கிறாய்
நானல்லவா
தீப்பற்றி
எரிகிறேன்...........

Saturday, April 26, 2014

அவள்

கூரிய வாளினை
பழுக்க காய்ச்சி
இதயத்தில்
இறக்கி
பின்னர்
மயிலிறகால்
மருந்திடுதல்
போன்றது
உந்தன்
நெடுங்கோபத்தின்
பிந்தைய
அனைப்பும்
முத்தமும்.....♥:*

Monday, April 14, 2014

இல்லத்தில் உன் பிள்ளைகளுக்கு நீ தந்தை,
இனத்தில் உன் மக்களுக்கு நீ தாய்..!!

புலி கொடி
தமிழ் தலைவனின் புரட்சி கொடி,
தமிழுக்கும்..!!
தமிழனுக்கும்..!!
உரிமையை கேட்டு போராடும்
உரிமை கொடி.

Photo: புலி கொடி
தமிழ் தலைவனின் புரட்சி கொடி,
தமிழுக்கும்..!! 
தமிழனுக்கும்..!!
உரிமையை கேட்டு போராடும்  
உரிமை கொடி. 
-சீமான்
தமிழனை தனிமைப்படுத்த முள்வேலி முகாம் மட்டும் அல்ல,
தனி கண்டம் அமைத்தாலும்.
அங்கும் வருவான் தமிழனின்
சுதந்திரத்துக்காக.
என் ஈழத்து மாவீரன் பிரபாகரன்..!!!!


இறைவன் என்னும் கற்பனை உருவத்தின்.
நிஜமான தோற்றம்..!!
" அம்மா

பாலச்சந்திர,
புலிகளின் சரித்திரத்தில் நீ
புரட்சி என்றால்.
தமிழர்களின் சரித்திரத்தில் நீ
எழுச்சி.
உன்னால் தோன்றப்பட்ட இன்றைய
எழுச்சி.
நாளைய தமிழீழத்தின் விடுதலை
புரட்சி...!!
" வாழ்க பாலச்சந்திரர் "

ஒரு மரணம்,
ஒரு இனத்துக்கே
விடியல் தரும் என்றால்.
அது இன்றே நிகழட்டும்
உன் மரணத்தில்...!!!
" வாழ்க தமிழீழம் "

Photo: ஒரு மரணம்,
ஒரு இனத்துக்கே
விடியல் தரும் என்றால்.
அது இன்றே நிகழட்டும் 
உன் மரணத்தில்...!!!
" வாழ்க தமிழீழம் "
-சீமான்
தமிழ் சொந்தங்களே
நீதி கேளுங்கள்,

சமுக ஆர்வலர்களே
நீதி கேளுங்கள்,

அரசியல்வாதிகளே
நீதி கேளுங்கள்,

எழுத்தாளர்களே
நீதி கேளுங்கள்,

கவிஞர்களே
நீதி கேளுங்கள்,

நீங்கள் கேட்க்கும்
நீதி,
ஒரு இசை பிரியாவின்
கற்புக்கும்.
நிகழ்ந்த வன்கொடுமைக்கும்
அல்ல,

இன்னும் பல ஆயிரம்,
இசை பிரியாகளின்
கற்புக்கும்.
எங்கள் தேசத்துக்கும்,
கேட்க்கும் நீதி.

நீதிக்கு சிறை தண்டனை
" 22 " ஆண்டாம்.

22 வருட வன வாசம்,
எத்தனையோ இழப்புக்களை
தந்து விட்டது.

வாழ்வை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

உறவுகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

இளமையை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

உரிமைகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

இத்தனை
மரணத்தண்டனை தந்த உயிருக்கு,
இனியும் மரணமா..??

உன் தூக்கு கயிறு கூட இதை
ஏற்காது.

தமிழ் ஆளும்..!!
தமிழ் இனமும் ஆளும்..!!
ஆள்கின்ற இனத்தை,
அடக்கி ஆள்பவனும்.
அழித்து வாழ்பவனும்.
காலத்தின் நிலை மாறும் போது,
நிர்கதியாய் நின்றிட நேரும்
மரணத்தின் வாசல் தோறும்.
" வாழ்க தமிழ் இனம் "


தாய் தந்தையை
மறந்து.

ஜாதி மதங்களை
மறந்து.

ஏழை பணக்காரன் பேதம்
மறந்து.

இல்லத்தை
மறந்து.

உறவுகளை
மறந்து.

கூட்டமாய் இணைந்தாலும்.

கூட்டு குடும்பமாய்
கொண்டாடிய தருணம்.

என்னை,
மறந்த நாட்கள் கூட உண்டு.

உன்னை,
மறந்த நாட்கள் இல்லை
நண்பா...!!!!!!!


இரவு பகல்
பாராமல்,
வந்தவனுக்கும்..!!
போனவனுக்கும்..!!
பெயர் வைக்காத சமுகம்.
வாழ்வதற்காக
ஊரின் பாவத்தை சுமக்கும்.
பாவப்பட்ட உயிருக்கு
பேரு வைக்கும் கேடுகெட்ட சமுகம்.
" விலைமாது "


காலம் மாறும் போது,
நிலைகளும் மாறும்.
இன்று
நீ
ஏற்படுத்தும் பயம்,
நாளை
ஏற்படும் உனக்கே,
அன்று
பலியும் பாவமும்
நீ
மட்டும் தான்.
" ஈழம் வெல்லும் "

அவன்
மறந்தாலும்.

அவள்
மறந்தாலும்.

மறந்தவர்கள்
மனதில் மறையாத,
மறவாத
நீ..!!

" காதல் "
அடக்கி
ஆள நினைத்தால்,

அடக்கியவனை
அண்டம் அழித்து வாழும்.

நீ
வென்றாலும்.

உயிர்களை
கொன்றாலும்.

செய்த வினை,

நீ
செத்து மடியும் முன்பு,
வந்து சேரும்.

நரகத்தின் வாசலாய்..
பாவத்தின் வினையாய்..

அத்தனையும் சேர்த்து,
செத்து மடிவாய் பிணமாய்..!!

மரணம் தின்ற,

உன்
உயிரின் சுவாசம்.

உயிராய்..
உறவாய்..
உலகாய்..

என்னூள்
வாழும் என்றும்..!!
உன் விதையே,
உனக்கு வினையாய்.
கூட்டணிக்கு
நீ..!!
உன்
நாற்காலிக்கு போட்டியாய்.
சென்னையும்...
மதுரையும்...
போராடுகிறது.




Photo: உன் விதையே,
உனக்கு வினையாய்.
கூட்டணிக்கு 
நீ..!!
உன் 
நாற்காலிக்கு போட்டியாய்.
சென்னையும்...
மதுரையும்...
போராடுகிறது.

-சீமான்
18/1/2014

நூறு தலைவர்கள்
வரலாற்றில் தோன்றினாலும்.

நூற்றுக்கு நூறு
சதவீதம் பெறும் தலைவன்.

என்,
தலைவன்
" பிரபாகரன் "

தேசமே
என் சுவாசம்.

மக்களே
என் உறவுகள்.

யென்று வாழ்ந்தவன்...
இன்றும் வாழ்பவன்...

பதுங்கிய
புலி..!!

அழிந்தது யென்று,
என்னும் மனதிற்கு யெல்லாம்.

அழிந்ததும்..
அழிவதும்..
என்
பிறப்பிலே இல்லை யென்று,

விரைவில்..!!
உணர்ந்திட செய்வாய்

பகைவர்களை
பகையில் நடுங்கிட செய்வாய்,
தலைவா..!!!!
இனி
அடுத்த ஆட்சி மட்டுமல்ல,

அடுத்த ஜென்மத்தில்
கூட,

நீங்கள்,
பதவியும்..
ஆட்சியும்..
அமைக்க முடியாது.

தமிழனையும்,
தமிழ் மீனவனையும்,
கண்ணீரில் முழ்க வைத்த
நீ.

இனி என்றுமே,
முழ்கி தான் போவாய்.

தமிழ் இனத்திலும்..!!!
Photo: இனி 
அடுத்த ஆட்சி  மட்டுமல்ல,

அடுத்த ஜென்மத்தில்
கூட,

நீங்கள்,
பதவியும்..
ஆட்சியும்.. 
அமைக்க முடியாது.

தமிழனையும்,
தமிழ் மீனவனையும்,
கண்ணீரில் முழ்க வைத்த
நீ.

இனி என்றுமே,
முழ்கி தான் போவாய்.

தமிழ் இனத்திலும்..!!!
தமிழகத்திலும்..!!!

-சீமான் 
23/1/2014
தமிழகத்திலும்..!!!
லட்சம் பலியிலும்,

பலியாகாத
எங்கள் லட்சியம்.

வாழ்வதும்..!!
விதையாய் வீழ்வதும்..!!

தேசத்தின்
விடுதலைக்காக மட்டுமே.

" ஈழம் வெல்லும்"
தமிழ்
பிறந்த தேசத்தை,

இன்று
ஆங்கிலம் ஆள்கிறது.

இது
சாதனை அல்ல,
தமிழர்களின் வேதனை.
தேசத்தை காக்க.

நம்
இனத்தின் விடுதலைக்காக.

மீண்டும்
புலி..!!
புயலாய் வரும்,

அன்று
பகைக்கும்.
எதிரிகளுக்கும்.
முடிவாய் இருக்கும்,

தமிழீழத்தின்
விடுதலை பிறக்கும்..!!

" வாழ்க பிரபாகரன் "
தமிழர்களின் உரிமையை
காக்க.
உயிராய் நீ தந்த
ஒருவன்.
எம் தலைவன்
பிரபாகரன்....!!!!!
" வாழ்க பார்வதி அம்மா "
விடுதலை,
விடுகதையாய் மாறும் போது.
வீரம் விடையாய் மாறும்..!!!
" வாழ்க பிரபாகரன் "
ஒரு இனத்தை காக்க..!!
ஒரு இயக்கம் பிறந்த தேசம்.
புலி சின்னத்தில்
ஒரு புரட்சி பிறந்த தேசம்.
அதுவே,
தமிழர்களின் தமிழீழ தேசம்.
" வாழ்க தமிழீழம் "
மரணம்,
கொன்றது உயிர்களை தான்.
எங்கள்
தமிழீழ உணர்வுகளை அல்ல.
உன் தோட்டாக்களும்,
குண்டுகளும்...
எம் உயிரை பறித்தாலும்.
ஒரு போதும் இழக்க மாட்டோம்
எங்கள் தேசத்தை...!!!!
" தமிழீழம் வெல்லும் "
சுதந்திரத்தின்
எல்லை முள்வேலி.

உலகத்தின்
எல்லை முள்வேலி.

உறவுகளின்
எல்லை முள்வேலி.

சிறைப்பட்ட முள்வேலியில்.
சிறை கைதிகளாய் தமிழர்கள்.

பட்டியில் அடைக்கப்படும்
விலங்கு கூட,

காலையில்
சுதந்திரமாய் சென்று விட்டு.
மாலையில் தான் அடைக்கப்படும்.

ஆனால்
என் தமிழனோ,

விடுதலையின்றி,
விலங்காய் அடைப்பட்டு கிடக்கின்றான்
முள்வேலியில்.....

புத்த தேசத்தில்.
புதைக்கப்பட்ட மனித நேயம்.

" தமிழீழம் வெல்லும் "
தேசத்தை காக்க.

நம்
இனத்தின் விடுதலைக்காக.

மீண்டும்
புலி..!!
புயலாய் வரும்,

அன்று
பகைக்கும்.
எதிரிகளுக்கும்.
முடிவாய் இருக்கும்,

தமிழீழத்தின்
விடுதலை பிறக்கும்..!!

" வாழ்க பிரபாகரன் "
மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை.
484115_397360786987784_836825529_n
பல் விளக்கும் பட்டை வேப்பங்குச்சி
நீச்சலடிக்கும் ஏரி குட்டை
பிடிக்க போகும் பட்டா…ம்பூச்சி
காதில் கேட்ட கிராமத்து பாடல்கள்
காணமல் போன குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும் கறவை மாடு
விட்டு வந்த வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும் பம்பர விளையாட்டு
கூட்டமாய் விளையாடிய கில்லிதாண்டு
விரட்டி பிடித்த கோழி, மாடு
விழுந்து எழுந்த தொழி வயல்
நினைவில் நிற்கும் நிலா சோறு
அடித்து விட்ட அடுத்தவீட்டு பையன்
அடி வாங்கின அப்பு மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட பள்ளி புத்தகம்
பாழாய் போன தண்ணீர் குழாய்
சண்டை போட்ட சித்தப்பா வீடு
உதவி செஞ்ச பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த அக்கா
காதலிச்ச கூட படித்த பெண்கள்
கைகாட்டி காரில் போன கார வீட்டுகாரர்
நித்தமும் சப்தமிடும் ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய குடு குடுப்பை காரன்
களை எடுக்றப்ப கதை சொல்லி களைப்பு போக்கும் களவாணி பாட்டி
கலர் கலராய் தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும் கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும் காளை மாடுகளோடு காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில் வேலை செய்யும் அம்மா மாருங்க
ரெட்டைஜடை கூந்தல் சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும் காதல் கிறுக்கங்க
மருத்துவம் கொடுக்ற மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும் கூடார சர்க்கஸ்
எப்போதும் நான் முதல் மார்க் வாங்கிய பள்ளி
எத்தனை எத்தனை சொல்வது
மறக்கமுடியா என் கிராமத்து நினைவுகளை
நெஞ்சில் முள் குத்துகிறது.

Friday, April 11, 2014

உறங்கச் சென்ற எனக்கு
கவிதை தோன்றியது......
காதல் கவிதை...
எழுதாமல் திரும்பிவிட்டேன்...
காதல் தோல்வியுற்ற
எனக்கேன் காதல் கவிதை என்று.........

Sunday, April 6, 2014

யாரென்று நினைத்தாய் தமிழனை ?...                              

அடிப்பட்டே மாண்டிடும்
கோழையா?
உணர்ச்சியற்ற முடவனா?
ஒளியற்று உதிரும்
சூரியனா?
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...

வீரம் செறிந்த இனம்
மானம் போற்றும் சினம்
வாரி வழங்கும் மனம்
நாங்களின்று பிணம்...
பிணத்தையும் நக்கும்
சிங்கள ஆதிக்கம்!
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...

தமிழுணர்ச்சியின் சீற்றம்
பாய்ந்திடும்
புலியின் தோற்றம்
உணர்ச்சியற்ற மறவர்களிடையே
உணர்ச்சி வசப்படும்
புலித்தமிழர்கள் !...
எம்மை இனி தொட்டால்
பிணமாவாய்...
கடலோரம் சுட்டால்
சிங்களநாயே நீ
புலிக்கு இரையாவாய் ...
அடையாளம் இழந்தே
நீ சாவாய்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை ?...

தமிழன் மீது
தேசிய பாதுகாப்பு சட்டம்!
ராசபக்சேவோடு
தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!!
மெய்க்கு சட்டம்
ஏற்றும் குற்றம்!
பொய்மைக்கு தேசியவாதி
பட்டம்!!
கொடையாளி காங்கிரசுக்காரன் 
கொலையாளி பௌத்தன்
உளவாளி கருணா(க்கள்)
பகையாளி தமிழன்
இந்தியாவுக்கு பங்காளி
சிங்களன்...
எதிராளி தமிழன்
இந்திய குடிமகனாம்...
யாரென்று நினைத்தாய்
தமிழனை?...

திமிறி எழும் தமிழர் படை 
நடுங்கி சாகும்
எதிரியர்  படை...
தமிழீழம் தமிழீழமே
தமிழர்க்கு விடை!
உற்ற எம்உரிமையினை
தடுக்கும் எத்தடையும்
பிரபாகரன் படைமுன்
சாயும்...
புலிப்படை சாதிக்கும்...
 
இறுதி மூச்சு !

வல்வெட்டித்துறையில்
சூரிய புதல்வனை
பெற்றெடுத்த
உன் மூச்சு பனகொடா
சிங்களவன் முகாமிலா
நிற்கணும் !
அய்யோ
பகலவனை வளர்தெடுத்த
பாச கீற்று
இங்கோ போகணும் !
இன்று தமிழர்
உளம் வெதும்பி
இருண்டா சாகணும்...
அப்புவே தலைவனை
சுமந்த உன் மூச்சு,
இறுதி மூச்சின்
அனல்
ஈழத்தில் எரியுது
பார் இன்னும்...
தியாக மூச்சால்
விடியும் நம் மண்ணும் !!!
தமிழன்!தமிழன்!!             
தமிழன்!தமிழன்!!
கதைக்கு கதைக்க மட்டுமே
தமிழ் தமிழென்று
சொல்லுவோன்  தமிழனா?
நஞ்சை அணிந்து
ஆசை துறந்து
மண்ணுக்காய் போரிடுபவன்
தமிழனா?
தமிழருக்காய் வாழ்வையும்
தமிழுக்காய் தேசத்தையும்
படைப்பவன் அவனடா!
தமிழன்!தமிழன்!!
தாய்மொழியை தாரைவாத்து
கொடுப்பவன் தமிழனா?
வீரத்தோடு  உரிமை
காத்தவன் தமிழனா?
பதவி மோகத்தில்
மானம்  விதவன்
தமிழனா?
பறித்தவன் தமிழனா?
அடிமை மோகம்
நுகர்ந்தவனை
விளிகசெயதவன் எவனடா!
அவனே தமிழன்!
தமிழன் ! தமிழன்!!
இவன் தான் தமிழன்
நீதியற்ற துரோகியோடு
கூட்டுச்சேருபவன்  தமிழனா?
கொள்ளையடித்து  வயிறுவளர்ப்பவன்
தமிழனா?
இனமானம் பெரிதென 
தமிழனாய் எழுந்தவன்
எவனடா!
அவனே தலைவன்!
இவனே தமிழன்!!
தமிழன் இறங்கிபோகும்
படிகட்டுகளல்ல...
தரித்திரத்தை மடித்து
சரித்திரம் படைக்கும்
தலைக்கட்டுகள் ! !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்

சொல்லில் உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லாம்
அச்சொல் கொச்சையின் பிச்சையால்
தமிங்கல சொல்லாகி , உயர்ச்சொல்
பிறர்மொழி யாசித்து பேசும்
வேற்றுச்சொல்லாயிற்று...

ஆங்கில மோகத்தில் இச்சைத்
தமிழாய் வாழ எம்மொழியென்ன
செப்பு மொழியோ ...
அறம் தங்கி
மானம் தாங்கிய செம்மொழி !
அம்மொழி பன்மொழி கலவையால்
தமிழன் வாய்மொழி அறிவற்ற
அறியாமை மொழியாயிற்று...

தமிழ்ச்சொல்லிலே 'ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ'
இணைந்திட எம்மொழி சடங்கு
மொழியாயிற்று...

பாமரனும் தமிங்கல கோர்வையில்
தாய்மொழியை மறதியில் மாய்த்து
பேய்மொழியை எம்மவர் சொல்லில்
பாய்த்து சீரற்ற தமிழரானாய்...

புலவனும்,அறிஞனும்,வள்ளுவனும்
தீட்டிய இச்சொல் மதியற்றோர்
சேர்க்கையில் தன்மைச்சொல்
பிழையாவதோ!

தமிழனாய் யோசி
கலங்காத தமிழால் பேசி
தாய்மொழி காக்க
உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லை வாசி...
விடுதலை !

சிறைவாசம்
அடக்குமுறையை  பேசும்
பெயருக்கு மட்டும்
தமிழ் மீது பாசமிக்கவர்களின்
நெஞ்சில்  கூசும்
 பொய்மை
உம்மவர்
 மனதையே ஏசும்
தமிழ்நாட்டில்
இனி மடமையராட்சி
வீசி தூசாக்கப்படும்
விலைப்போகும் சட்டம்
மானமற்றவர் கொட்டம்
தமிழனாக  எழுந்தால்
அடியோடு மடியும்
விலைப்போனவர் திட்டம் !!
முற்போக்காளன்...

இது வேறு பூமி
நாம் பிழைக்க முடியாதாம் சாமி
நம் எண்ணம் வேறு
நம் சிந்தனை வேறு
நம் செயல் வேறு
சூதோடு வளர்ந்த கும்பல்
எதைச் செய்தாலும்
மாட்டிவிடும் வம்பில்
தூது விட்டு வால் பிடிக்கும்
துப்பு கெட்ட பொழப்பு
கடைசி காலம் வரை
வீணாய் போச்சி உழைப்பு...
முள்ளிவாய்க்கால் மூட்டிய  பெருந்தீ!

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள்  குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!


முன்னங்கால் பாய்ச்சல் கொண்ட
எம் எல்லாளன் படையை
எதிர்க்கொள்ள வக்கற்றவனின்
நாசச்சுவடு மே 18!
கொத்துக்குண்டுகள் வீசி
லட்சம் உயிர் விழுங்கினாய்...

கோட்டைக்கட்டி வாழந்த இனத்தின்
கூடாரத்தையும்  குறிப்பார்த்து
காந்திய ராணுவம் வழிவகுத்து
இஸ்ரேலிய எறிகணை
தமிழர் தலைமீது விழுந்து
புலிபடையினை  வீழ்த்துவேனென்று
நாடு நாடாய் ஊர் ஊராய்
இருபத்தோர்  தேசமெங்கும்
யாசகமெடுத்த வரிசையில்
ரேடார் இந்திரா இந்தியா
மீக்-29   சீனா   
பல்குழால் பீரங்கி  பாகிஸ்தான்
கடன்காரனின் 
இரண்டாயிரம் கோடி கடன்
சிங்களன்,இந்தியன் பெருமையுடன்
தமிழன் பொறுமையுடன்
          ...முள்ளிவாய்க்கால்


காமவெறி தணிக்க
திருப்பதியில் பரிகாரம்...
இந்தியாவில் நாய்க்கெல்லாம் அதிகாரம்...
இதன் பெயர்தான் போரா!
தமிழச்சி மாரறுத்தாய்
மாவீரர் துயில் இடித்தாய்
தம்பிகள் உயிரெடுத்தாய்
இதன் பெயரோ  போர்...


பன்னாட்டு சபையின்
அணுஆயித ஒப்பந்த
பரீட்சிய  கூடம்
முள்ளிவாய்க்கால்!
முள்வேலிக்குள் அடைத்த பெரும்
ஒப்பந்தம்!
எம்மின துரோகிகளுக்கு பதவி
இது,எம்மின எதிரியின் பெரும் உதவி…

 இன்னும் எங்களை
என்னவென்று நினைத்தாய்!
கற்கள் என்றா ?
முற்கள் என்றா ?
புலிகள்  என்றுதானடா  தடைவிதிதாய்!!
எச்சில் பட்ட எம்தேசத்தை
புலிகளே மீட்டெடுக்கும்
அண்ணன் களத்தில் போராடுவார்!
தம்பிகள்
நாங்கள் புலத்தில் போராடுவோம்!!
அண்ணன் எழுப்பிய விடுதலைதீ!
முத்துக்குமார் மூட்டிய செந்தீ!!
முள்ளிவாய்க்கால் மூட்டிய  பெருந்தீ!!!
கண்ணீர் தேசம்
                                           

கடல்பரப்பில் வழிந்தோடிய
குருதிநீர் பனிமண்டலத்தில்
           உரைந்து கசியுதே...
பூத்துக்குலுங்கும் ஈழத்திலும்
இரத்தம் பீச்சி
அடிக்கிறது !
குளிர்ந்து விளையும்
வெண்மை காசுமீரிலும்
இரத்தம் நிறக்கிறது !!

சோழன் முக்கடலிலே
மீன்கொடி பறந்ததம்மா !
மாற்றான் பிடியிருந்த
தமிழ்மண் அடிமை
மடமை துறந்திட
இமயம் வென்ற
புலிநாட்டன் கோடி
வீழ்ந்ததாம் அம்மா !
ஓயவில்லை பாரம்மா !
புத்துயிர் ஈழம் விடியும்
கண்ணீர் துடையம்மா !!

பூலோக சொர்க்கம்
ஆசாதி(விடுதலை) காசுமீர்
துரோகியவர் கூடலிலே
வெண்பிடி மண் !
உறங்குமா உன்கண் ??

மரண ஓலம்
ஈரமுடையோர் நெஞ்சினை
பிளந்திட்டு
கல்லுடையோர் எண்ணத்தினை
கரைத்திட்டு
நீர் வடிக்கிறது..
கண்ணீர் வலிக்கிறது...
இனியோ அலறமாட்டோம் !!  
எம் பாட்டன் முப்பாட்டன்
ஆண்ட தமிழ்நாடு!
வேற்றோனுக்கு  தாய்வீடு...
மாற்றான் மொழி பேசும்
தமிழ்நாட்டன் மொழியென்றால் ஏசும்.

ஆங்கிலேயன்  நயாகராவில்
வருக! வருக!!
தமிழன் பயாகராவில்
"WELCOME ENTRY TICKET 2 Rs/-"
ஆடுவது மானாட மயிலாட
ஆளுவது தமிழ்நாட
நடத்துவது செம்மொழிமாநாட
பாரடா! தமிழ்ப்படும் பாட்ட
தெலுங்கன் ஆள்கிறான்
கன்னடன் அடிக்கிறான்
மலையாளி வாழ்கிறேன்
தமிழன்
அலைகிறான்!அழிகிறான்!!
கேட்டால் தமிழ்நாடென்கிறான்...

தமிழ் பேசா
வேற்றோன்  நாடு!
அதற்கே தமிழீழ
தனிநாடு அண்ணன்
கட்டமைத்த செந்தமிழ்நாடு!!
தமிழர் நாதமதில்
தமிழீழமே இசைந்திடும்
குருதி கண்ட உடல்
நீர்க்கொண்ட விழி கள்
மறக்குமா? ரணங்கள்
இனியோ அலறமாட்டோம்...
அனல் கக்கும்
நெருப்பாய் போராடுவோம்!
பதுங்கும் புலிகள்
பாய புறப்படுவோம்!
பாயந்து வென்றிடுவோம்!
தாய்நாடு  புகுந்திடுவோம்!!
எதிரியை விரட்டிடுவோம்!!!
இனியோ!
அண்ணன்புலி ஈழநாட்டில்..
தம்பிபுலிகள்   தமிழ்நாட்டில்...
எரிதழல் ஏந்தி வா!
                                       

துரோகத்தின் ஊடே
முறையற்ற பகைமை
அதிகார ஆதிக்க
வர்க வதத்தினை
கொழுத்திட
எரிதழல் ஏந்தி வா!
குருதி துடித்தெழுந்து வா !
அச்சம்தனை தீயலிட்டு வா !!
செந்நெருப்பு மூட்டி வா !!!

திருமேனிதனில் தணல்
மூண்டு தானே
எரிக்கொன்டு
களமாடிடு புலியாய்...
அறமற்று எம்வீடேறி
கொன்றிட்ட வந்தேறிதமை
செந்தழல் மூட்டும்
நெருப்பிற்கு இரையாக்கு...
செந்தமிழ் முழங்க
வீணரவனை பொடியாக்கு...

யாதொரு படை
பின்னுக்கு போகினும் ...
தீதொரு
இடுக்கண் நேரினும்
உடலுக்கு தாமே
கொள்ளியிட்டுக்கொண்டு
தமிழுயிர் தின்றவனை
வென்று வாழும்
செத்தும்,வெல்லும்!!

புலியாய் நீ
எரிதழல் ஏந்தி வா!
சிங்களவன் கொட்டத்தினை
அடக்கி வா!
வேறோடு அறுத்து வா!!
ஏந்திய செந்தீ
புலிவீரம் படிக்கும் !!
தமிழ்மானம் சிறக்கும் !!!
சரக்குந்து ஓட்டுநன் !
               
வாகனம் ஓட்டும்
நாடோடி வாழ்வால்
வந்தது தொலை
என்ன செய்ய ?
ஏது செய்ய ?
ஒருசாண் வயிற்றுக்கு
இராப்பகல் பாராது
ஓடினேன் ஓட்டினேன்
தெற்கிருந்து வடக்கு ...
அன்புமில்லை - என்னை
பேணி வளர்க்கவுமில்லை
எல்லாம் இழந்தும்
நேர்மை இழக்கவுமில்லை..
தேய்வுராத தேசத்தின் குரல் !

பேச்சாயிதமேந்தி  தேய்வுராத
மூத்த குரல்...
பாலனே !
நீ
மடை உடைந்த
ஈழ எல்லைக்கோட்டை
உலகுணர
எடுத்துக்காட்டிவன்...

தடை பதிந்த
விடுதலை போராட்டத்தை
தலைநிமிர உரையாற்றிவன்...

நஞ்சு சுமந்த
மாவீரனை புலம்பெயர்ந்தவரிடமும்
புவியினரிடமும்
உயர்த்தி நிறுத்திவன்...

தாயகத்தை விலைப்பேசியவனை
அழல் நிறையும்
 பேச்சால் அடிக்கியாண்டவன்...

வலியுணர்ந்த காயத்தை
சபைவழியேற்றி புரட்சியாக்கிவன்...

குருதியாற்றில்  நனைந்த
தேசத்தை உறுதியோடு
பின்பற்றியவன்...

நிலைக்குலைந்த மக்கள்
வாழ்வு நிலையாகிட
தலைவனோடு நிலைத்திருந்தவன்...

பன்னாட்டு அவையங்களில்
புலிகளின் தாகம்
தமிழீழ தாயகமென்று
மார்தட்டி சொன்னவன் ...

பிரபாகரன் சகாப்தத்தில்
வலிமையுடைய மன்னவனாய்
வாழ்ந்து
தேசத்தின் குரலாய்
தகப்பனாய்  மூத்தவராய்
வாழ்கிறாய் பாலனே !!

அணையாத செந்தணல்



முத்துக்குமரா முத்துக்குமரா
எழும்பாத உணர்ச்சி
நரம்பு புடைக்க,
தணலாகிய முத்துக்குமரா...

பொசிங்கிய உடலாலே
சதையை உணர்வாக்கிய
முத்துக்குமரா...

கரும்புலி போல கருகிய
உணர்ச்சிக்குமரா
தீயாலே தீபமாகிய
வீரக்குமரா...

குருதிக்கடல் கொப்பளிக்க
தீச்சூட்டில்
உன்னை ஏற்றினாய்...

உளம் வெதும்பும்
உடல் கொதிக்கும்
தணலிலே
உன்னைக் காட்டினாய்

வீரம்,மானம்
மனிதம் சிதைய
உன்னை நீயே
தழலாக்கினாய்...
நொடியின் கணம்
உன்னை மாய்த்து
சாவின் ரணம்
உணர்ந்துவிட்டாய்...
மனதற்றவர் மதியற்றவர்
சேர்க்கையை
உணர்த்திவிட்டாய்...
தமிழன் அணி திரள
உசுப்பிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
உணர்ச்சி தழலென்று
காட்டிவிட்டாய்...

முடங்கிய இனத்தின்
முடிவில்
தொடங்கிவைத்தாய்...
முணங்கிய வேதனையினை
மூட்டிவிட்டாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
எழுப்பிவிட்டாய்...


புலியின் தடை தகற
தழலாலே மூண்டுவந்து
பலியான உற்றார் மீள
உடல் உருக்கி
பெரும் படை திரட்டினாய்...
உளம் உருக
தமிழரை மாற்றினாய்...
முத்துக்குமரா முத்துக்குமரா
இன்றும் எங்கள்
நெஞ்சில் வாழ்கிறாய்...
தழல் சூழ்ந்த
மாவீரனாய்...

முத்துக்குமரா முத்துக்குமரா
மூண்ட தீயில்
வெடியாகிய தீக்குமரா
என்றும் உன் தழல்
அணையாது...
தமிழர் தாகம்
தணியாது...

Tuesday, March 18, 2014

திருவெண்ணெய்நல்லூர்

வெண்ணெய்நல்லூர் (திருவெண்ணெய்நல்லூர்)

 
 



அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்

மரம்: மூங்கில்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பித்தாபிறை -7 -1 சுந்தரர்

முகவரி: திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04153 234548

இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர், இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.



கல்வெட்டு:


( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)

திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச உடையார், கோப்பரகேசரி பன்மரான உடையார் இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கஉடையார், இரண்டாம் இராசாதிராசஉடையார், மூன்றாங் குலோத்துங்கஉடையார், மூன்றாம் இராசராசன் உடையார், மூன்றாம் இராசேந்திரஉடையார் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயஉடையார், குமாரமல்லி கார்ச்சுனராயஉடையார், கிருஷ்ணதேவராய உடையார் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், முதலாம் இராசராச உடையார் கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுள் சில: திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி உடையார் இராஜராஜ தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கஉடையார் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழ உடையார் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)

அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

குறிப்பு: இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம்.
நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)

திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்: அருட்டுறை உடைய மகாதேவர் கோயில்  அகமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை உடையார் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான்.

பொதுச் செய்திகள்: இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.

ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, 

விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய உடையார் சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்.

இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், 
[சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.]

இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.

அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.

பட்டுடையான்: `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர்  சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களைத் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.