Tuesday, April 30, 2013

"சாப்பிட்டேன்" என அம்மாவிடமும்"

கவலைப்படவில்லை" என அப்பாவிடமும்"

அடுத்த மா"தத்திற்குள்வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும்"

முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி"
என தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

"காலையிலிருந்து சாப்பிடல...ரொம்பப் பசிக்குதுடா,எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்மட்டும் தான் கேட்க முடிந்தது

Monday, April 29, 2013

காதலில் உண்மையாக இருங்கள் ...இல்லையேல் என் நிலைதான் உங்களுக்கும் ..!

நான் காதலில் தோற்றவன் இல்லை. . !
காதலியால் தோற்கடிக்க பட்டவன்.. !

என் காதல் உண்மையானது தான். . !
ஆனால் என் காதலி என்னிடம் உண்மையாய் இல்லை. . !

காதல் என்றுமே புனிதமானது. . !
உண்மையானது தான். . !

ஆனால் இன்றைய காதலர்கள் அவ்வாறு இல்லை. . !

நான் காதலை வெறுக்கவில்லை. . !
காதலியை தான் வெறுக்கிறேன

நினைவில் சிரிக்கிறேன்
நிஜத்தில் அழுகிறேன் ..
கனவில் முழிக்கிறேன் ..உன்னை
காணாமல் தவிக்கிறேன் ♥

உன்னுடைய நாவல்என்னை ‘நாவல்’எழுத வைக்குதடி..!!பழமொழிய்யா மட்டும் பார்க்கனும்... சரியா??? ஆராயப்படாது...!!!

Sunday, April 28, 2013

ஒற்றை ரோஜாஓர் ஊரையே ஆக்கிரமிக்க முடியுமா?

அப்படித்தான் தோன்றியது அவள் என் இதயத்தை நிறைத்தபோது!

மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?

அப்படித்தான் தோன்றியதுஅவள் என்னைப் பார்த்தபோது!

ஒரேயொரு நீர்த்துளி சூரியனுக்கே மைனஸ் டிகிரி குளிர் தருமோ?

அப்படித்தான் தோன்றியதுஅவள் என்னோடு பேசியபோது!

தென்றல் காற்று - ஒரு பனைமரத்தை வேரோடு சாய்த்திடுமோ?

அப்படித்தான் தோன்றியது அவள் என்னைத் தீண்டியபோது!

அணில் மூச்சின் வெப்பம் - ஒரு காட்டையே கொளுத்தி முடிக்குமோ?

அப்படித்தான் தோன்றுகின்றது அவளைப் பிரிந்திருக்கும­் ஒவ்வொரு கணமும்...!

என்னவள் ஏமாற்றிய கதைஎப்படி சொல்வது ..

என்னவென்று சொல்வது ...காதலித்த கதையை சொல்வதாகாதலித்து ஏமாற்றியதைசொல்வதா இல்லை....காதலித்துவிட்டு­காதலிக்கவில்லைநான் நண்பனாகநினைத்துதான்பழகினேன் என்று சாட்சியம்பகிர்ந்த கதையைசொல்வதா ...நீ தந்த காயங்களைஏற்றுக்கொள்கிறே­ன்அது நான் வாங்கிவந்த வரம்ஆனால் காதலிக்கவில்லைஎன்றாயே அதைதானடிஏற்றுகொள்ள முடியவில்லை ..இதுவரை என் ஆறுதல்காதலுடன்நீ தந்த காயங்கள்தானடி ...அவை அனைத்தும்பொய் என்கிறாய் நீஆனால் எனக்குள்வலிக்கின்றதடி ..!

Saturday, April 27, 2013

உன் விழி தந்தமது உண்டுஎன் மன வண்டுஇதயத்தை ஏதேதோ செய்யுதடிவிழி பார்த்து மயங்கிநின்ற இதயத்தைஇயக்கிட அது கொண்டமுயற்சிகள் தோல்வியடிஉனை தவிர ஏதும்வேண்டாமெனநடைபிணமாய் நானிருக்ககாரணமும் அது தானடி......... —

Friday, April 26, 2013

என் அழகிய தேவதையேஎன் காதலை அனாதைஆக்கி விடாதே! அந்த ஜீவனுக்குசொந்தம் என்று சொல்லிக்கொள்ளயாரும் இல்லை உன்னைத்தவிர.

Tuesday, April 23, 2013

நீ என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்று தெரிந்தும் உன் பின்னே வருவதன் காரணம் என்னை யாரும் நேசிக்க வில்லை என்று அல்ல உன்னைப்போல் யாரையும் நான் நேசிக்க வில்லை என்பதுதான் இன்னும் சில தினங்களே எனக்கான காலம் அன்றோடு முடிந்து விடும் உன்னுடன் ஆனா உறவு இருந்தும் நான் பாக்கிய சாலி தான் மனம் இறந்தும் உயிர் வாழும் ஒரு ஜென்மம் நானாகவே இருப்பேன் இவ்வுலகில்....
நீ என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்று தெரிந்தும் உன் பின்னே வருவதன் காரணம் என்னை யாரும் நேசிக்க வில்லை என்று அல்ல உன்னைப்போல் யாரையும் நான் நேசிக்க வில்லை என்பதுதான் இன்னும் சில தினங்களே எனக்கான காலம் அன்றோடு முடிந்து விடும் உன்னுடன் ஆனா உறவு இருந்தும் நான் பாக்கிய சாலி தான் மனம் இறந்தும் உயிர் வாழும் ஒரு ஜென்மம் நானாகவே இருப்பேன் இவ்வுலகில்....
புன்னகைக்கு பின்னால் இருக்கும்
கண்ணீர்துளிகளின் வலிகள் மிகவும்
காயமானவை!
ஒத்தயடி பாதை

என்னவளே :-

ஒத்தையில உன்னை காண நீ வரும் பாதையிலே
தனியாய் காத்து காத்துகிடந்தேனே நித்தம் நித்தம்
பெண்ணே என்னையறிந்து நீயும் தன்னந்தனியாய்
வந்து உன் ஓரபார்வையால் நீயோ பார்த்துவிட்டு செல்ல..

தவித்து போனேனே காதலில் பெண்ணே
ஆழ்கிணற்றிலே தூக்க ஆளில்லாமல்
தவிப்பதுபோல என் இதய கிணற்றிலே
நீ என்னை காணாமல் என் நினைவுகள் தவிக்குதே..

என்னவளே ஒத்தயடி பாதையிலே உன்னோடு
கைகோர்த்து வர ஆசையடி ஆனா பெண்ணே
ஒத்தயடி பாதை என்பதாலே உன்னோடு வர
முடியாமல் உன் பின்னாலே உன் நிழலைபோல்
கனவோடு வந்தேனே.. நீ போகும் பாதையெல்லாம்... ..

காலங்களும் சென்றதே தினம்தினம் என்
கனவினிலே என்னவளே உன் நினைவுதானே
ஒத்தயிலே தவிக்கவிட்டு சென்றவளே..

பெண்ணே உன்னை நேசிக்கும்போதும ்
என்னை கனவினிலே தவிக்கவிட்டவளே. .

நீ இல்லாதபோதும் உன் நினைவினிலே
தவிக்கவிட்டாயே என் நேசபறவையே...

பெண்ணே உன் நினைவுகளை என்னால்
தவிர்க்கமுடியலை யே என் வாழ்க்கை
பாதையிலே ஒத்தயடி பாதையாக உன்
நினைவு பயணம் தொடர்கிறதே..

சுகமாய் வலிக்குதே என் காதல் பயணத்தில்...... .

Credits:
என்றும் என்னவளின் நினைகளோடு
சரியா..? தவறா..?
புரியவில்லை,
தவறாமல் நினைக்கின்றேன் அவளைத்தான்,
தலை முழுகிப் போன பின்பும்...
நீ சுவாசிக்கும் காற்றை
நானும் சுவாசிக்கவேண்டும்,
நீ சிரிக்கும் சிரிப்பை பார்த்து
நான் மகிழவேண்டும்,
நீ வலிகளில் துடித்தால் - அதில்
நானும் பங்குகொள்ளவேண்டும்,
நீ கண்ணீர் வடித்தால்
அதை துடைக்கும் கரங்களாக
நான் இருக்கவேண்டும்,
நீ காணும் கனவு - அது
நானாகவேண்டும்
நான் உறங்கும் அந்த காலை நேரத்தில்
உன் பூமுகம் பார்த்து எழும்பவேண்டும்,
உடல்களால் இரண்டாக இருந்தாலும்
நாம்!
உயிரால் ஒன்றாக வேண்டும்...
நீ சுவாசிக்கும் காற்றை
நானும் சுவாசிக்கவேண்டும்,
நீ சிரிக்கும் சிரிப்பை பார்த்து
நான் மகிழவேண்டும்,
நீ வலிகளில் துடித்தால் - அதில்
நானும் பங்குகொள்ளவேண்டும்,
நீ கண்ணீர் வடித்தால்
அதை துடைக்கும் கரங்களாக
நான் இருக்கவேண்டும்,
நீ காணும் கனவு - அது
நானாகவேண்டும்
நான் உறங்கும் அந்த காலை நேரத்தில்
உன் பூமுகம் பார்த்து எழும்பவேண்டும்,
உடல்களால் இரண்டாக இருந்தாலும்
நாம்!
உயிரால் ஒன்றாக வேண்டும்...
இந்த ஜென்மத்தில் நீ எனக்கு இல்லை என்றவர்களிடம் சொன்னேன்..
அடுத்த ஜென்மத்தில் நீ யாருக்காகவும் இல்லை என்னை தவிர என்று...!!!
என் அடுத்த ஜென்மதிற்காக பூட்டி வைக்கிறேன் - காதலை
அவளுக்காகவும் அவர்களுக்காகவும்...!!
பூட்டியது என் காதலை மட்டும் தான்...
அவளுக்காக என் அன்பும் கவனிப்பும் என்றும் அவளை சுற்றிய இருக்கும்...!
என்னை மறந்து உன்னால் தூங்க முடிந்த போது
என்னால் முடியாதா...???
என்னை மறந்து தூங்க உன்னால் முடிந்தால் அதன்
பெயர் தூக்கம்...!!
உன்னை மறந்து நான் தூங்கினால்
அந்த நாள் என் மரணம்...!!!""
ஒரு சின்னக் கதை...

உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது. வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது. பூங்கொத்தும், பிரியமும் தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள்.

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது. படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள்.

இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான்.

பூங்கொத்தில் ஒரு வாசகம். 'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல. நான் உன்னை நேசிக்கிறேன்'.

அவளுக்கோ கோபம்.

பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள்.

'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா?' என சீறினாள்.

அவன் நிதானமாய்ச் சொன்னான்.

'அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால் கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை.

எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுது - 'மரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல'... என்று.

இதாம்மா நடந்தது' அவன் சொன்னான்.

அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன.

உண்மைக் காதல் ஆழமானது.
காதலின் உண்மை வேர்களில் தெரியும், பூக்களில் அல்ல.
போலிகளைப் புறக்கணியுங்கள்.
உயிரில் உலவும் உண்மை
அதுவே காதலின் தன்மை!

தமிழ் படிக்க தெரியுமா?

 (எங்க
இத .... படிங்க பார்ப்போம்)


உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக
முந்டிதால்,
உகங்ளை பாட்ராடியே ஆக
வேடுண்ம்.100குக் 55 மகக்ளால்
மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம்.
எனான்ல் நபம்ப் முயடில்விலை,
எபப்டி தஇ பக்டிறேகின் என்று?
ஆசச்ரிமாயன சதிக்க்
கொடண்து மதனினின் ளைமூ.
ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ்
பகல்க்லைழககம் இந்த
உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது.
எத்ழுக்துகள் எந்த வசையிரில்
உளள்து எபன்து முகிக்மியல்லை.
முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள
எத்துழும், சயாரின இத்டதில்
உளள்தா எபன்தை மடுட்ம்
பாத்ர்தால் போதும். எனாதல்
எறான்ல், மதனினின் மூளை முதல்
எத்ழுயுதைம்,
கைடசி எத்ழுயுதைம்
மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள
எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம்.
ஆச்ரிசயகமால்யிலை? ம், நான்
எபொப்துழும்
நிதனைதுண்டு எத்ழுதுகக்ள்
மிவுகம் முகிக்யம் என்று.
உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற
பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள
்¿¿¿¿
 (எங்க
இத .... படிங்க பார்ப்போம்)
உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக
முந்டிதால்,
உகங்ளை பாட்ராடியே ஆக
வேடுண்ம்.100குக் 55 மகக்ளால்
மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம்.
எனான்ல் நபம்ப் முயடில்விலை,
எபப்டி தஇ பக்டிறேகின் என்று?
ஆசச்ரிமாயன சதிக்க்
கொடண்து மதனினின் ளைமூ.
ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ்
பகல்க்லைழககம் இந்த
உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது.
எத்ழுக்துகள் எந்த வசையிரில்
உளள்து எபன்து முகிக்மியல்லை.
முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள
எத்துழும், சயாரின இத்டதில்
உளள்தா எபன்தை மடுட்ம்
பாத்ர்தால் போதும். எனாதல்
எறான்ல், மதனினின் மூளை முதல்
எத்ழுயுதைம்,
கைடசி எத்ழுயுதைம்
மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள
எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம்.
ஆச்ரிசயகமால்யிலை? ம், நான்
எபொப்துழும்
நிதனைதுண்டு எத்ழுதுகக்ள்
மிவுகம் முகிக்யம் என்று.
உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற
பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள
்¿¿¿¿
♥♥♥என்னைப் புரியும் நிலையில் எப்போதும்
நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும் நிலைக்கு இதுவும்
ஓர் காரணம்...!!
என்னை விட்டு விலகி வெகுதூரம்
சென்று விட்டாய் போல உணருகிறேன்...!!
இப்போதேனும்
சொல்லி விட்டுப் போ பெண்ணே...
நீயும் என்னை நேசித்தாயா....???
உன்னிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை...
இப்பொழுதெல்லாம்
உன்னை விட
உன் நினைவுகளைத் தான்
அதிகமாக காதலிக்கிறேன்....!!!!
நான் உணரும் வலியை நீ அறிய மாட்டாய் பெண்ணே..!
♥♥♥
எனக்கே எனக்கான என் அன்பு தோழனே...!
தலை வைத்து படுக்க உந்தன் ஒரு மடி
என் கவலை மறக்க
சாய்ந்து கொள்ள உந்தன் ஒரு தோள்
எந்தன்
தலை கோதிவிட உந்தன் விரல்கள்
என் வார்தையை
பொறுமையுடன் கேட்கும் உந்தன் செவிகள்
எங்கு சென்றாலும் பாதுகாப்பாய்
கைகளை பொதித்துக்கொள்ளும் உந்தன் கைகள்
என் வலிகளை ஓடிசென்று சொல்லி
முகம் புதைக்க உந்தன் ஒரு நெஞ்சு
என் கண்ணில் உதுக்கும்
கண்ணீரரை துடைக்கும் உந்தன் ஒரு விரல்
என் வெற்றியிலும் தொல்வியிலும்
அனணத்து முதுகு தட்டும் உந்தன் தோழமை
என் வாழ்வின் அணைத்து நிகழ்விலும்
ஆதரவான உந்தன் வாய் மொழிகள்
என் இன்பத்திலும் துன்பத்திலும்
பக்கத்தில் நீ
இவற்றை தேடி அலையும் என்னுள்
ஒரு சோகம் மட்டும்....!
என் அன்பானவனே மீண்டும் கிடைப்பாயா.........
எனக்கே எனக்கான என் அன்பு தோழனே...!
தலை வைத்து படுக்க உந்தன் ஒரு மடி
என் கவலை மறக்க
சாய்ந்து கொள்ள உந்தன் ஒரு தோள்
எந்தன்
தலை கோதிவிட உந்தன் விரல்கள்
என் வார்தையை
பொறுமையுடன் கேட்கும் உந்தன் செவிகள்
எங்கு சென்றாலும் பாதுகாப்பாய்
கைகளை பொதித்துக்கொள்ளும் உந்தன் கைகள்
என் வலிகளை ஓடிசென்று சொல்லி
முகம் புதைக்க உந்தன் ஒரு நெஞ்சு
என் கண்ணில் உதுக்கும்
கண்ணீரரை துடைக்கும் உந்தன் ஒரு விரல்
என் வெற்றியிலும் தொல்வியிலும்
அனணத்து முதுகு தட்டும் உந்தன் தோழமை
என் வாழ்வின் அணைத்து நிகழ்விலும்
ஆதரவான உந்தன் வாய் மொழிகள்
என் இன்பத்திலும் துன்பத்திலும்
பக்கத்தில் நீ
இவற்றை தேடி அலையும் என்னுள்
ஒரு சோகம் மட்டும்....!
என் அன்பானவனே மீண்டும் கிடைப்பாயா.........
சிறுவன் நடந்து போய்க்
கொண்டிருந்த
போது சாலையில்
நூறு ரூபாய்
நோட்டு கிடப்பதைப்
பார்த்தான்.
அன்று முதல் ஏதும்
தரையில்
கிடக்கிறதா என்று பூமியைப்
பார்த்துக்
கொண்டே நடந்தான்.
அடுத்த
அறுபது வருடங்கள்
அப்படியே இருந்தான்.
அவனுக்குக்
கிடைத்தவை 768
ரூபாய், 2 மோதிரங்கள்,
3 கொலுசுகள்.
ஆனால் அவன்
இழந்திருந்தவை,
21900சூர்யோதயங் கள்,
630 வானவில்
காட்சிகள்.
ஆயிரக்கணக்கான
பூக்கள், பல்லாயிரம்
குழந்தைகளின்
புன்னகை முகங்கள்.
வாழ்க்கையைத்
தொலைத்தவன்
மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதிர்ஷ்டம்
காலை இடறினால்
மட்டும்
குனிந்து பாருங்கள்.
இல்லையென்றால்
வாழ்க்கையைப்
பாருங்கள்.
வாழ்ந்து பாருங்கள்.
உன்னை விட அழகானவர்கள் எல்லாம் என்னை கடந்து போகிறார்கள் உன்னை விட அக்கறையோடும் சிலர் என்னை கவனித்து கொள்கிறார்கள் இருந்தும் உன்னை மட்டும் நினைக்கும்படி என்ன செய்தாய் என்னை !!!
நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும் ..
என் கண்ணீர் தடயங்கள்
காட்டி கொடுக்கும்
நான் சென்ற இடத்தை
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை பின் தொடர்து வா...!!!
காத்திருப்பேன் ..
கடவுளைக் கண்டடைய நீண்ட தேடல் வேண்டாம்.குழந்தையின் சிரிப்பு போதும்.
வழக்கமாய் சென்றமரும்
பழக்கமான குளத்துக் கரையில்
நெடுநேரம் மௌனமாய்
அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்..
நீருக்கும் எனக்கும் இடையில்
யாருமில்லை என்று
மனதுக்குள் எண்ணிக் கொண்டிருந்த பொழுது..
சட்டென வளைந்து நெளிந்து வந்த
அந்த அழகிய அலைகள்
புத்திக்கு உணர்த்திச் சென்றது..!!
நீருக்கும் எனக்கும் இடையில்
காற்று இருக்கும் உண்மையை…!!
உனக்கும் என்னக்கும் இடையில்
இருக்கும் இந்த நட்பை போலவே...!!
உணர்ந்தேன் நான் இந்த இடைவெளியில் உன் நட்பை ...
என் உயிர் நிலைப்பதே உன் நினைவுகளாலே. அதையும் மறந்துவிடச் சொல்வதற்கு பதில் மரித்துவிடச்சொல்"
நான் சந்தோஷமா இருந்தேன், ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆப்புறம் ஏன் லவ் பண்ணேன்..
காதலி இல்லாத ஒரு குறையை மட்டும் போக்கிவிட்டு, மற்ற எல்லா குறைகளையும் கொடுப்பவள் தான் காதலி .
உன்னை தேடும் என் கண்களுக்கு
ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே
உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு
ஆறுதல் உன் பாசம் மட்டுமே...

அன்பே
அன்றில் பறவையில்
தன் இணை இறந்தால்
கூழாங்கற்களை உண்டு
உயரப்பறந்து வீழ்ந்து இறக்குமாம்....
அறிவாயா.... நீ
அதைப் போலத் தானடி நானும்
உன்னை....
என்அன்பின் அடி ஆழம்வரை உனக்குத் தந்து
உன்னைக் காதலிக்கிறேன்.
நீ செய்யும் ஒவ்வொரு
உளவியல் உளைச்சலுக்கும்
என்றாவது ஓர் நாள்
என்னை நான் இழக்கத்தான்போகிறேன்.

கதை பேசிக்கொண்டே ,வா காற்றோடு போவோம், உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்!!

அனார்.... நில்..,இப்படியொருமுத்தத்தை எப்படியடிஅப்படியொரு நாளில்தந்தாய்...!!
எப்படியும்இப்படியொரு முத்தம்அப்படியொரு நாளில்மீண்டும் கிடைக்க.. நின்சொற்படி எல்லாம்நடக்கிறேன்...சொல்லடிஅனார்...எப்படி என...,

ஆழிலை அழகேஅனார்.....உன்கண்களின் கருவிழி
ஓட்டத்தை சற்றுநிறுத்து..,
என் வீட்டு மீன்கள்எகிறக் குதிக்குதடிவெளியே....உன் கண்களும் கயல்என நினைத்து...நீர் கொண்டு செல்லும்நின் கார்மேககூந்தலைக் கட்டு...பாவம் என்தோட்டத்துமலர்ச்செடிகளெல்லாம்தானே வீழ்ந்துதற்கொலைசெய்கின்றனஉன் கூந்தலில்ஊர்வலம் வர...கூண்டில் கிளிகுதியாட்டம்போடுகிறதடிஅனார்...அழகிய உன் இதழ்அது உண்ணும்கொவ்வை கனிஎன நினைத்து....வானத்துநட்சத்திரங்களெல்லாம்உன் நெற்றியைபிறைநிலவென்றெண்ணிதாமும் தர்பாருக்குவந்தன பகலிலேயே...!!உன் மூக்கின்முக்கோணங்கள்கண்டுதிரிகோணமிதிதடுமாறுகிறதடிஅனார்அனைத்திற்கும்உச்சமாய் உன் குழிவிழுந்த கன்னம்...,உன் தாய் தினம்உனக்கு திருஷ்டிபொட்டிட்டதின்வடுவோடி...!!அனார்..., உன்னைரசிப்பதாலேயே நான்அழகாகிறேனடி...!அன்பே.

எண்ணமெல்லாம்
என்
நினைவுகளெல்லாம்
வண்ணக்கனவுகளாய்
நிறைந்து கிடக்கும்
அழகே அனார்
உனை நெருங்கி
நின் கூந்தல் விலக்கி
உன் காதோரக்கன்னத்தில்
முத்தமிட
எத்தனிக்கும்
ஒவ்வொரு முறையும்
என் கண்களை மூடாது
உன் முகத்தின்
ஸ்பரிச மாற்றங்களை
பார்த்து ரசிக்கவேண்டுமென
நினைப்பேனடி அனார்.
நான் தோற்று நீயே வெல்கிறாய்....!!
நான் தோற்கும்பொழுதும்
நீ வெல்வதில் எனக்கும்
மகிழ்ச்சியே...!!
நீ உன் கூந்தலில்அப்படி என்னடி ஒரு மயக்கமருந்தை
வைத்திருக்கிறாய்....
கை சேர்த்து காதருகே
வரும்போதே நின்கூந்தலின் ஸ்பரிசமும் வாசமும்
எனை மயக்கி என் கண்களை மூடச்செய்து எனது
முயற்சியை தோற்கடிக்கிறதடி!!!

நினைவுகளில் என்னை தேடாதே...உன் மனதில் நான் குடி இருப்பேன்...என்னை பார்க்க ஆசை இருந்தால்உன் இதயத்தில் கை வைத்துப்பார்....நான் துடிப்பேன் உனக்காக........

உனக்காய் காத்திருக்கிறேன் விழியோரம் நீர் துளிகளுடன் உன் வருகைக்காய் ஏங்கும் என் இதயம் துடிப்பது நின்றாலும

கட்டவிழ்ந்த புயலை காதலென செய்தாலும்
தொட்டுவிட உதிருமென தென்றலாகி விடும்
மற்றுமென்ன மனமே... நீ மௌனத்தில் இருந்தாலும்
பற்றும் ஒரு தீயே
அந்த பாசைக்கும் பொருள் அறிவேன்
முற்றுமென் கவியே ஒரு முத்தமின்றி போனாலும்
முற்றுமென் வாழ்வும் சத்தமின்றி முந்தானைக்குள்...!!

Monday, April 22, 2013

பட்டங்கள்பல வாங்கினாலும் - என்சட்டங்கள் என்னவோ - உன்வட்டத்திற்குள்சிக்குண்டே கிடக்கின்றன!

உறங்க நினைத்தேன் முடியவில்லை
உன் உயிரின் அழைப்போ
என்னை துடிக்கவைக்க
என்றோ ஒரு நாள்
நான் இருப்பேன்
உன்உயிர் துடிப்பாய்
உன் இதயத்தில்
என் காதல் அன்பே...

Sunday, April 21, 2013

சோகமான என் வாழ்வைசுகமாக்க வந்தவள் என்றுஉன்னை நினைதேனடிஇன்று தானே அறிந்தேன்நீ சோகங்களை சுகமாய்அள்ளி கொடுப்பவள் என்று ♥

Friday, April 19, 2013

நட்பாகவும்
நம்பர் கேட்கவும்
நடுராத்திரி போன் செய்யவும்
அன்பு செய்யவும்
வம்பு செய்யவும்
காரணங்கள் ஏராளமாக
சொன்னாய் கதைகதையாக
ஏற்றுக்கொண்டேன் தாராளமாக
அதிலொன்றும் பிழையில்லை
அடியேனுக்கும் ஐயமில்லை
ஆனாலும் பொருந்தவில்லை
பிரிந்ததற்கு காரணம் மட்டும்
விலக நினைக்கிறாயா ?
விலக்க நினைக்கிறாயா ?
நினைத்தேன் உன்னை
விளையாட்டுப் பிள்ளையென
நித்தம் நித்தம்
விளையாட்டுதான் போலிருக்கிறது
காதலும் தானுனக்கு
ஆராய்ச்சிக்கு கிடைத்த
அடிமையோ நானுனக்கு ?
குற்றம் சொல்லவில்லை உன்னை
வெட்கம் கொள்கிறேன் என்னை
குழந்தைமனமும் குரூரமாகிறது
கொன்றால்தான் என்ன ?
எனக்குள் இருக்கும்
உன்னையும்
உன் நினைவுகளையும்...
கனவே கலையாதே
---------------------------
இருளின் சலனத்தில்
விழிக்கின்றாய் கனவாய்....!
அல்லி மோகித்த நிலாவில்......
அலைகின்றாய் ஒளியாய் !

நாணத்தில் மூடிக் கிடந்தவுன்
பார்வைகள்....................
மெல்லத் துடிக்கின்றன
எனுள் படரும் வரமாய்த் தாவ..........

வெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!

சேலையவிழ்த்த மரவிடுக்கில்- உன்
விரல் நுழைத்து நீ வரையும்
நம் பெயரோ................
தரை தொடும் காற்றில் தள்ளாடிக் கிடக்க!

விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!

இருள் இன்னும் கவிழ்ந்துதான்
கிடக்கின்றது- நீயோ
விடியலுக்கஞ்சி மெல்ல விழி நழுவுகின்றாய் - என்
கனவிலிருந்து விலகி!
நிராயுதபாணியாய்
-----------------------------------
சுருண்டு கிடந்தேன் - என்
கனவுலகில்!
சுள்ளென்று கிள்ளுகின்றாய் அடிக்கடி
உன் நினைவுகளால்!

பனி படரும் இருள் முகிலில்
கனிவாய் உலா வருமுன்
குரற் றொனியில்....................
அடங்கித்தான் கிடக்கின்றேன்
இனிய ஸ்வரமாய்!

இப்பொழுதெல்லாம்..................
என் தினக்குறிப்பின் ஆக்கிரமிப்பில்
அலைந்து கொண்டிருக்குமுன்னை.........
சேமித்துக் கொள்கின்றேன் கவிதைகளாய்!
பத்திரப்படுத்து என் உணர்வுகளை
உன் அன்பகத்துள்!

சிரிக்கின்றாய் எனைக் கடுப்பேற்ற.........
உன்
கருவிழிகளில் குறும்பையும் லேசாய்ப் பிசைந்து!

ஆயுதமேந்தவில்லை- உன்னை
ஆட்கடத்தல் செய்யவுமில்லை!
நிராயுதபாணியாய்
மருகிக் கிடக்கின்றாய் - என்
வாலிப எல்லைகளில் உன் விடுதலை மறுத்து!

நம் முதற் சந்திப்பின் மௌனம்
நிரம்பி வழிகின்றது ஞாபகக் குவளையில்
நாணத்தைச் சிதறியவாறு
நேசப் போதையில் கிறங்கி!

பரிவோடு காதல் குலைத்து
நிதமென்னை அரவணைக்குமுன்னை.........
அறிவிப்புச் செய்யட்டுமா - என்
தாயகமாக!
மல்லிகை
--------------------------
கூந்தல் வெளிகளில்
குடியிருக்கும்
அழகு தேவதை!

உஷ்ணத்தின் காமத்தை
சிகையுறிஞ்சாது தடுக்கும்
பூக் கூடை!

சூரியன் எட்டிப் பார்க்கையில்
சூட்சுமமாய் இதழ் சுருக்கும்
மென் தேகத்தால்!

நறுமணங்களின் ஆட்சேர்ப்பால்
நார் சேர் பூமாலையாய்
தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்!

ஜாஸ்மின் கரு சுமந்தே
ஐவிதழ் வரிகளுக்குள்
ஐக்கியமான ஹைக் கூ!

இரவின் கூடலில்
மோகித்துக் கிடக்கும்
மலர்ச் சிற்பங்கள்!

இம்சைக் காதலில்
மேனி நசிக்கும் வண்டுகளுக்காய்
மகரந்தத் தூது விடும் காதலி!

கொடிப் பந்தலிலே
கொசுவம் சொருவிக் காற்றாடும்
மல்லிகைச் சாமரம்!
- JA-
நிராயுதபாணியாய்
-----------------------------------
சுருண்டு கிடந்தேன் - என்
கனவுலகில்!
சுள்ளென்று கிள்ளுகின்றாய் அடிக்கடி
உன் நினைவுகளால்!

பனி படரும் இருள் முகிலில்
கனிவாய் உலா வருமுன்
குரற் றொனியில்....................
அடங்கித்தான் கிடக்கின்றேன்
இனிய ஸ்வரமாய்!

இப்பொழுதெல்லாம்..................
என் தினக்குறிப்பின் ஆக்கிரமிப்பில்
அலைந்து கொண்டிருக்குமுன்னை.........
சேமித்துக் கொள்கின்றேன் கவிதைகளாய்!
பத்திரப்படுத்து என் உணர்வுகளை
உன் அன்பகத்துள்!

சிரிக்கின்றாய் எனைக் கடுப்பேற்ற.........
உன்
கருவிழிகளில் குறும்பையும் லேசாய்ப் பிசைந்து!

ஆயுதமேந்தவில்லை- உன்னை
ஆட்கடத்தல் செய்யவுமில்லை!
நிராயுதபாணியாய்
மருகிக் கிடக்கின்றாய் - என்
வாலிப எல்லைகளில் உன் விடுதலை மறுத்து!

நம் முதற் சந்திப்பின் மௌனம்
நிரம்பி வழிகின்றது ஞாபகக் குவளையில்
நாணத்தைச் சிதறியவாறு
நேசப் போதையில் கிறங்கி!

பரிவோடு காதல் குலைத்து
நிதமென்னை அரவணைக்குமுன்னை.........
அறிவிப்புச் செய்யட்டுமா - என்
தாயகமாக!
திருந்தும் வரை
---------------------------
உன்னைத் திருத்த முடியவில்லை
வருந்துகின்றேன்!
கடிவாளமிடப்படாத வுன் மனசு
பிடிவாதம் பிடிக்கின்றதோ - நம்
முரண்பாட்டில் முகம் நனைக்க!

"காளை நீயே" என்றிருந்த - என்
நாளை..............
சாலையோரப் புழுதிகளால்
ஓலையெழுதினாய் - உன்
வாலிபக் கிறுக்கை எனக்குள் விற்றுவிட!

என்னை அங்கீகரிக்கு முனது
இராசதானிக்காய்..................
முரசு கொட்டியழைக்கின்றாய்
உரிமையுடன்!
பூரிக்கின்றேன் உன்னன்பில்- இருந்தும்
உதிரமுறிஞ்சும் உன் தேடலில்
கதி கலங்கிக் கிடக்கின்றேன்
"கல்லாகி" இறுகி!

மன்னித்து விடென்னை!
உனக்காய்................
செலவளிக்கப்பட்ட என் மணிப்பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நகர்கின்றன- என்
தனிமை வீதிகளில்
உன்னைத் தவிர்த்து!

அடம்பிடிக்காதே பின்தொடர..........
உனக்கான அனுமதி மறுக்கப்படும் - நீ
திருந்தும் வரை!
தாவணி
--------------
வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக் கொடி!

மலை முகடுகளை
மறைத்தோடும் நீர்வீழ்ச்சி!

தடையின்றி மேனி மறைக்கப் போராடும்
காவற் படை!

இளமையின் ரகஸியங்களை
காற்றுவெளியில் விற்கும் உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவாடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அறிவிப்புச் செய்யும்
ஒப்பந்தக் காகிதம்!

என் தனிமையின் சுமைகளில்
உன் நினைவுகளே கனங்களாய்...
வறண்டு கிடக்கும் பூமிக்கு
மழைபோல் எனக்கு எப்போதும் நீ...
வசியமாகின்றேன்
------------------------------------
விழுந்தன மயிலிறகுகள்- உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ ..........உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்...........
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போ தடிக்கடி...................
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!..

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்.............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலேயுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களின் தொடுகையால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன உன்னிடம் சரணடைந்தே!

காதலா............அன்பா.........நட்பா
ஏதோவொன்று ...........
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!
வசியமாகின்றேன்
------------------------------------
விழுந்தன மயிலிறகுகள்- உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ ..........உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்...........
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போ தடிக்கடி...................
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!..

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்.............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலேயுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களின் தொடுகையால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன உன்னிடம் சரணடைந்தே!

காதலா............அன்பா.........நட்பா
ஏதோவொன்று ...........
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!
திருமணம்
-------------------
வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!

கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!

தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!

தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!

சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!

ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!

வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!

ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!

வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!

கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்
செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
திரு மாங்கல்யம் சூட்டி........
திரையிட்டாய் உன்னை என்னுள்
இறை சாட்சியாய் அன்பைக் குலைத்தபடி!

என் னிரவிலு முலாவும்
பகலவன் நீயாயினன்.......மன
அகிலத்தின் உயிருமாயினன்!

கணையாழியில் உன்னைப் பூட்டியே
இணையாக இணைந்தனையே பல நாழி!- உன்
கலைமானாய் நானிங்கு பிறக்கையில்
தலைவா !
கவலையேன் என்னில் ஐயம் கோர்த்து!

சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவன் காதலை..........
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!

இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் மெய்யும் தொலைந்தது!
கருவளையம் ஆரணங்கின் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்தது!!

நம் பனிப்போரின் அறைகூவல்
இன்னும் அகலவேயில்லை....................
நானோ
உன்..................
சொப்பனத்தின் கதவுகளைத் தட்டியே நிற்கின்றேன்
என் சோக புலம்பலை ரசித்தபடியே!

காதல்....................
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்துகொள் அன்பே!- என்
பாசம் முகம் காட்டும் உன்னிலும்
அழகாய் ஆழமாய்!!
விடியலை நிரப்பி
பொழுதொன்று கரைகின்றது மெல்ல
அவளின் கனவுகளை மறைத்தபடி!

கன்னக் கூட்டில்
சிரிப்பைச் சிறைப்படுத்தி
மெல்ல நடந்து வருகின்றாள்
அன்னமவள்!

தெருவோர நாய்களின் சிலம்பல்
பீதியை மனவெளியினில் ஊற்ற....
மிரட்சியின் மொத்த உருவமாயிந்த
வெள்ளைப் பட்சி!

வறுமையவளை பட்டை தீட்டியதில்
சுருண்டு போன உதரக்குழி..........
பசி மயக்கத்தில் வரண்டு கிடந்தது!

அவள்.....................
மெல்லன காற்றில் விரியும்
பட்டாம் பூச்சியல்ல!
எட்டாம் வகுப்பில் எட்டி நிற்கும்
சிட்டுக்குருவி....!

நெஞ்ச வரம்பில் ஏக்கம் விதைத்து
நெருஞ்சிக்குள் நிழல் தேடும்
குழவியவள்!

பி(ய்ந்து)ஞ்சு போன காலணியும்
தோய்க்க வழி துறந்த சீருடையும்
அவளின் சொப்பனங்களுடன்
போராடிக் கொண்டிருந்தன அழுக்கை விதைத்தபடி!

அம்மா......அவள் அம்மா !
அவள் .......
சின்ன விழிகளுக்குள் குளித்தாள்
கண்ணீருடன் கலந்தபடி!

பத்துப் பாத்திரம் தோய்த்து
தேய்ந்து போன விரல் ரேகைகள்.....
பிஞ்சு ஸ்பரிசத்தில் சிலிர்த்து
சிவந்து நின்றன பல நாழிகள்!

சோகம் வரலாறாகி
தொட்டுச் சென்றதில்....................
விட்டுப் போயின பள்ளிப் பாடங்கள்
திட்டுக்கள் நிறைந்தன ஞாபக மேட்டினில்!

நினைவுகளின் இடைஞ்சல்களில்
தடங்கள் தடுமாற.....
மலரிதழ் சாலையோரம் உதிர்கின்றது
தன் மேனியுணர்ச்சியை துறந்து!

வீதியின் பரபரப்பில்
தெரு நாய்கள் கூட அவளை மறக்க.....................
வறுமையின் கிழிசல்களாய்
நொருங்கிக் கிடக்கின்றது மென் பூவொன்று
தன் சுயம் மறந்து!
உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலாவுன் முகம்
எனைக் கண்டதும் மலர்ந்தது!

வானவில் புருவங்கள்
என் வருகையில் சிலிர்த்தது!

உன் கார்மேகக் கூந்தல்
என்னை வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதடுகள்
உச்சரித்தது அடிக்கடி என் பெயரை !

உன் மேக மேனி
எனைக் கண்டு சிலிர்த்தது.............

இருந்தும்...........

அருகில் வந்ததும் விலகியோடுகின்றாய் ...............
மௌனத்தை உதிர்த்தபடி!
சீதனம்
--------

பெண் மலர்களுக்கு இடப்படும்
முள்வேலி!

வாழ்க்கை வியாபாரத்திற்காய்
வழங்கப்படும் முதலீடு!

பெண்மையின் ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச்சீட்டு!

ஏழைக் கன்னியரின் சுயம்வரத்தின்
தடைக்கயிறு!

வருங்காலம் பேணும் திருமணத்திற்கான
அனுமதி!

தன் சந்ததி பெருக்கத்திற்கான
கைக்கூலி!

ஆண் வாழ்வின் செழிப்பிற்காய்
பெண்ணார் வழங்கும் நன்கொடை!

பட்டம் பதவிக் கேற்ப நிர்ணயிக்கப்படும்
பண்டம்!

சொகுசு வாழ்விற்காக தேடப்படும்
செல்வம்!

'சீ தனம் ' சொல்லாதோர் கையேந்தும்
பிச்சை!

ஏழைகளுக்கு தூக்குமேடை விதிக்கும்
அபராதம்

உழைக்காத சோம்பேறிகள் எதிர்பார்க்கும்
அதிஷ்டலாபம்!