உன் மெளனத்தில் உள்ள வார்த்தைகளையும்...
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்
யாரால் உணர முடிகிறதோ....
அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்..
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, November 20, 2012
உனக்காக
யார்
புழுவாய் உறங்கி விழித்த போது
பட்டாம் பூச்சியாக இருந்தேன்.அவ்வளவுக் காதலுடன் கனவில் வந்து முத்தமிட்டது யார்?
நீ இல்லா நினைவில்லை!!!
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால்,
என்னுள் உன்
நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
காத்திருப்பேன்
உன் விழிகளால் நீ விதைத்த விதைகலோ!
என் உள்ளத்தில் வலிகளாய்
சுடர்விட்டெரிகின்றது.............அண்பே!
நீ வர வேண்டும் அதுவரைக்கும்உறங்காத விழிகளோடு உனக்காக..காத்திருப்பேன்
உன்னைபெபோல். . . !!!!
சில கணமேனும்
உன்னைப்போல் அழகாகும் ஆசையில்
நீ முகம் பார்க்கும் கண்ணாடியாக
மாறிவிடத் துடிக்கின்றன தேவதைகள்....
பேரூந்தில் நான்
மின்சாரம் தடைபட்ட பின்னே
மெழுகுவர்த்தி தேடுவது போலதேடுகிறேன்...
மழை தொடங்கியதும்
குடை மறந்தது
நினைவுக்கு வந்தது போல
வருந்துகிறேன்...
கடந்த பேருந்து நிறுத்தத்தில்
இறங்கிய உனக்கு
நான் என்னை
அப்போதே அறிமுகப்படுத்தத் தயங்கியதால்...
பேருந்தினுள் நான்
உலகில் உள்ள அதிசயங்கள்
" உலகின் புனித பூமி
" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்"
மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து."
கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா"
வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.
" உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.
" நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து."
அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா."
கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து."
ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக்
கடல்" தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.
" ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து."
நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே"
இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்."
ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி."
ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்."
வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.
"சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.
நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.
காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.
கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.
திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.
பிரதமரும் மந்திரிகளும் இல்லாதநாடு -சுவிட்ஸர்லாந்து.
வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.
எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.
ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.
குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.
கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.
எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.
பாலூட்டிகளில் நீந்தத் தெரியாதஇரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.
நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.
கூடு கட்டாத பறவை -குயில்.
விதை இல்லாத பழம் -அன்னாசி.
ஓணான்கள்
வீட்டில் நீ நிற்கும் போது
எல்லா ஜன்னல்களையும்
சாத்தி விட்டு இருடி ..
பல மணி நேரமாய்
உன் வீட்டு மதிலில் கழுத்தை நீட்டியவாறு பல ஓணான்கள் ..
மானுடம் மலருமா???
கண்ணிலே மனத்திலே
காணாமல் வாடி
என்னுள்ளே நான் நொந்து
ஏங்கி மடிகிறேன்..!
காமமும் கோபமும்
கொள்ளை, கொலையென
பொய்மைப் புளுகுகளும்
சதிராடும் பூமியிலே...!
பதவிக்கும் பணத்துக்கும்
போட்டி இங்கே –வெறும்
புகழுக்கும் மாலைக்கும்
ஆசை இங்கே...!
நீதி நெறியினில்
நேர்மை வழியினில்யார் இங்கு வாழ்கிறார் தேடுகிறேன், தேடித் தோற்றுவிட்டேன்.அன்புக்கும், மெய்மைக்கும் அகிலத்திலே – இன்று அர்த்தமுண்டோ...?
இங்கு ஏற்றம் உண்டோ??
எங்கும் சுயநலம்,
எதிலும் சுயநலம்!
இங்கு வாழ்ந்திடுமோ
உண்மை மானிடமே!!!
நினைப்பு!!!
எங்கு நான் வாழ்ந்தாலும்...
உன் கூட வாழ்ந்தால்
எப்படி இருக்குமென்ற நினைப்பினிலேயே
வாழ்கிறேனடி பெண்ணே..!
சமாதானம்
உருவிழந்த உணர்வுகளின் தாங்கமுடியா வெப்பத்தில்
தடுமாறி துடிக்கும் என் இதயத்தைஉன் நினைவுகளால் சமாதானம் செய்கிறேன்
இதழ்முத்தம்
கோவத்தோடு நீபேசாதிருக்க,கொஞ்ச நேரம் நானும்பார்ப்பேன் ,,பிறகு முத்தம் தந்து உன்கோவத்தை முடித்துவைக்கலாம் என்றுதொலைபேசியில் நான்முத்தமும் தருவேன்,முத்தத்தை வாங்கி விட்டு "''இவ்வளவு நேரமாஉனக்கு என்னைப்பற்றி நினைப்பதற்கு..??
''என்று கேட்பாய்
இந்த கேள்விக்கே உனக்கு
இதழ் முத்தம் குடுக்கலாம்...
அவள்
என் காதல் கவிதைகளுக்கு
பல பேர்
கருத்து சொல்லலாம்
ஆனால்
அவளால் மட்டுமே
என் காதலின்
ஆழத்தை உணர முடியும்...
உன்னைத்தேடி!!!
தொலை தூரத்தில் உன் குரல்
தொலை பேசியில் கேட்கையில்
தொலைந்து போகிறது மனது திசைஅறியாமலேஉன்னை தேடி ...
கண் தானம்!!!
கண் தானம் செய்து விட்டேன்...
ம்ம்
நீ வரும் கனவுகளுக்கு - என்கண்களை தானம் செய்து விட்டேன்..
கேட்காமல் கிடைத்த வரம்!!!
நான் கடவுளிடம் கேட்டுகொடுக்காத வரங்கள் நிறைய.....ஆனால்!!!நான் கேட்காமலே''கடவுள்'' தந்த வரம் நீ......!
ஏன்????
பத்து நிமிடங்கள் எழுதினால்வலிக்கின்ற எனது கைகள்பல லட்சம் தடவை உனது பெயரைஎழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்????
வெட்கம்
ஒரு பெண்ணின் சிணுங்கள் ஒரு ஆணுக்கு வெட்கத்தை கொடுக்கும் என்றால்.. அவன் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை என்பது மட்டுமே உண்மை...
நீயே உண்டு
சத்தம் தரும் வளையலுக்கு சந்தேகம்தெரியாது
முத்தம் தரும் வாயிக்கு முகவரி கிடையாது
தடாகத்தில் நீகுளிக்க தடா சட்டமில்லை தாமரைக்கும் உனக்கும் அதிகவேறுபாடில்லை
முல்லைப்பூ தோட்டத்தில் முத்தம்தான் கொடுத்தேன்
மொத்த பூக்களும் தர்ணா செய்ததேன்
செங்காந்தாள் பூவில்
சிறுமொட்டை தொட்டேன்
செங்கோட்டை பூராவும் சிறுதுகளாய் சிதறியதேன்
வங்கக் கடலில் மையம் கொண்ட புயல் சின்னம் வாரிச்சுருட்டி என்னை கொண்டுபோவது திண்ணம்
கன்னம் நல்ல வெண்சங்கு வண்ணம் கழுத்துக்குகீழே காலுக்கும் மேலே தங்ககிண்ணம் நிலவுக்கும் களவுக்கும் வானுண்டு பொருளுண்டு எனக்கு அணங்கு யாருண்டு நீயேஉண்டு
சொல்லடி!!!
பாடப் புத்தகமோ
படிக்க வரவோ
இன்று தொடங்கி
நாளை முடிய
என்ன தரவோ
கரும்புக்காடோ
கடிக்க வரவோ
எறும்பாய் ஊர்ந்து
எல்லாம் தின்ன
எத்தனை நாளோ
பூக்கள் வேர்க்கும்
பனிப் பொழுதோ
முகர்ந்து பார்த்து
விலைக்கு வாங்க
முட்கள் தடுக்குமோ
நடனப் பள்ளியோ
நாட்டியம் ஆடவோ
நாடகம் முழுதும்
நடத்தி முடிக்க
நாணம் தடுக்குமோ
காமன் பண்டிகையோ
காதல் செய்யவோ
கட்டிப் பிடித்து
வைத்தியம் செய்ய
கால்கள் கெஞ்சுமோ
அன்னப் பறவையோ
ஆரத் தழுவவோ
ஆதி தொடங்கி
அந்தம் முடிய
அல்லும் போயிடுமோ
அம்பும் சோர்ந்திடுமோ"!!!
சொல்லடி எந்தன்
செல்லக்கிளி!!!!
ராசா
செல்லமே
செல்லமே...
என்று ஆசையாய்
ஒற்றை வார்த்தை ஆரம்பிப்பாய்....
என் கொஞ்சலிலும்உன் கெஞ்சலிலும் - நம்
இரவுப் பொழுது நகர மறுக்கும்
இதயங்கள் இடம் மாறியதால்
எதிர்பார்ப்புகள் இருவரிடமும்
இணையாய் இருந்தன...
காதலைப் பகிர்வதில்
ஆரம்பிக்கும் வேகத்தில்
மெதுவாய் உன் தோள் சாய்வேன்
கேசம் ஒதுக்கி தலை கோதும்
உன் விரல்களில் காண்பேன்
உன் எல்லையில்லா நேசத்தை...!
உன் காதல் சொல்லி
கவிதையாய்...என் காதினை மெல்லக் கடிக்கும்
உன் காத்திருத்தலின்
வேகத்தை என்
இதழ்கள் மெல்ல உணரும்...
தனிமையில் தவிக்கும் போதெல்லாம்
குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து
உன் ஆக்கிரமிப்பை என்னுள் செலுத்தும்
ஆறுதல் சுவாசத்தை ஆழமாய் இழுப்பேன்...
உன் நேசத்தை என்னிடம்
கொட்டுவாய்
தூறலாய்...
"பெய்யும் மழையில் கூட
பிழைகள் இருக்கலாம் - என்
செல்லமே! உன்னிடம் எங்ஙனம்
பிழையைக் காண்பேன்...?? - நான்
பிழையின்றி எங்ஙனம் உனை கடப்பேன்??
"வைர வரிகளாய் உன்
வார்த்தைகள் கண்டு
என் கண்களின் நீர்த்துளி மௌனமாய்
வெளியேறி விழுவதை
அவசரமாய்த் தடுப்பாய்!
பிறப்பின் பயனை
அடைந்ததை அறிந்தவன்
மெல்லமாய் உன் மார்போடு சாய்வேன்
இதமாய் என இதழிகளில் உன்
இதழ்களை பதிப்பாயே - இதைத் தவிர
இன்னுமோர் சுகமும் உண்டோ......
ராசா
Monday, November 19, 2012
மறந்துவிடாதே
. நினைவுச் சாலையிலே
நல்லதிகாலையிலே
இந்திர வில்லெடுத்து
இதோவருகிறேன்
மனங்கொத்தி பறவையே
மறைந்துவிடாதே
எங்கிருந்து ஈர்ப்புவிசை வந்தது
என்னையும் உன்னையு
ம்கட்டிப் போட்டது
காணாத கண்ணிமைக்கும்
நேரம்கூட சுடுகிறது
காற்று வந்து சாமரம்
வீசிவீசி செல்கிறது .
நீ தொலைத்த முகவரிக்கு
தெருமுனையில்
கோயில்கட்டி வைத்தேன்
அள்ளி கொடுக்க வசதியாய்
அத்தனையும்தானம் செய்து கொடுத்தேன்
பூக்களையும் கேட்டுப் பார்த்தேன்
பூகுடையும் வண்டுகளையும்
கேட்டுப் பார்த்தேன்
அருவியிடம் கேட்டுப் பார்த்தேன்
அங்கு பாய்ச்சலிடும் மானிடமும்
கேட்டுப் பார்த்தேன்
மானிடம் முழுதுமே ஓரழகி –நீயென்
மானுடம் செழிக்கவந்த பேரழகி
பாட்டு பூக்களெடுத்து
பாசநாரில் தொடுத்து
மாலை கொண்டு
இதோ வருகிறேன்
மன்மத தேசராணியே
மறைந்துவிடாதே.
ராசா
மூன்றெழுத்து!!!
ஒற்றை வரியில் சொல்
அந்த மூன்றெழுத்து
இல்லை- என்னுடல் விட்டு பிரியும்
ஒரு மூன்றெழுத்து
கற்றை வார்குழலி
கண்ணே பூங்குழலி
உன்னைக்கண்ட நாள் முதலாய்க்கொண்டேன் அந்த மூன்றெழுத்து.
வித்தை கற்ற திருவாசகனே
என்னத்தை பெற்ற மணிவாசகனே
ஒற்றைச்சொல்லில் நீ சொல்லும்
வாசகமே எனக்கு திருவாசகமே
அற்றைத் திங்கள் நாள்முதலாய்
ஆடிப்பாடி மகிழ்ந்தோமே
ஒற்றை பனையின் கீழே
ஒருநாள் கள்ளும் உண்டாமே
பருவம் வந்த நாள்முதலாய்
பார்க்க முடியவில்லையே
பார்க்காமல் போனாலும்உருவம்
இன்னும் மறையவில்லையே
கத்தும் கடல் வற்றிப் போகலாம்
சுற்றும் பூமி நின்று போகலாம்
காயாது நம்காதல் பெண்ணே
குளிர் நிலவும் சுட்டெரிக்கலாம்
கோடையிலும் பனிவந்து குளிரலாம்
போகாது சோடை நம்காதலே
அணையாத காதல் நம்
காதல் அல்லவா
அணைபோட்டு தடுத்தாலும் நில்லாது ஆதவா.
Saturday, November 17, 2012
உணர்ந்தேன்
உணர்ந்தேன் நான்..
உனதுகனவில்
நினைவில்
உருவில் ....
என்றும் நானே
இருப்பேன் என்று
நீ தந்த
முதல் முத்தத்தில்...
அன்பே!!!
♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
அன்பே!!! நிலவு
பிடிக்கவில்லை -உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது- மலர்கள் பிடிக்கவில்லை- உந்தன் மனம் பிடித்திருக்கின்றது -குயில் பிடிக்கவில்லை-உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது-வார்த்தைகள் பிடிக்கவில்லை-உந்தன் கவிதை மட்டுமேபிடித்திருக்கின்றது-உலகம் பிடிக்கவில்லை-உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது♥♥♥♥♥
ஏன்!!!
மழையில் நனைந்தால்
ஜலதோஷம் பிடிக்குமாம்
எனக்கென்னவோ
மழையில் நனைந்தாலும்
உன்னைமட்டுமே பிடிக்கிறது.
முடிவதில்லை
விண்ணைத்தாண்டி வருவதற்கு
நட்சத்திரங்களால் இயல்வதில்லை
உன்னைத்தாண்டிப் போவதற்கு
என்னாலும் முடிவதில்லை
இனி!!!
கவிதையெல்லாம் இனி
எழுத மாட்டேன் போடீடீடீடீடீ ...
உன்னை அடுத்தவர்கள்
ரசிக்கும் படி..
இத்தனை நாள் நானே
இடம் கொடுத்து விட்டேன். . !
அது யார்!!!!
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
விளக்கம்;
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
நினைவு
வாய் கசப்பு
வேண்டாதிடத்தே
வளுத்து திணிக்கும் மருந்தாய் வாட்டும் நோய்...! -அதனினொத்தது
நின் கசந்த காதலின்நினைவும்....!
எமன்!!!
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.
விளக்கம்;
எமன் என்று நூலோர் சொல்ல முன்புகேட்டிருக்கிறேன்;பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்லகுணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.
பார்வை!!!
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
விளக்கம்;
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
பித்து!!!!!!
பார்வை ஒன்றிலே
பதற வைத்தாய்
பாவம் நீ நித்தம் பார்க்கும் கண்ணாடிக்கு பித்தே பிடித்திருக்குமடி...!
Saturday, November 10, 2012
அனாதை!!!
நினைத்ததை அடைந்துவிட்டேன்,உனைமட்டும் இழந்துவிட்டேன்,அனைத்துமே கிடைக்கப்பெற்றும்,அனாதயன்றோ நான்?..........
ஒற்றைக்கால் உச்சாடனம்
வலிகளை அழுத்தமாய் பதிவுசெய்ய,ஒரு தோல்வி தேவையாயிருந்தது!தோல்வியின் வீரியம் உணர,ஒரு ஆழ்ந்த காதல் தேவையாயிருந்தது!காதலின் நீள அகலங்களை அலச,உன் உறவு தேவையாயிருந்தது!நினைத்ததெல்லாம்நடந்து நாம் பிரிந்தபிற்பாடு,என் வரிகள் வெளிறிப்போய் துடித்தது!உன் நிழல் தந்த பலம் வேண்டி! அதுவும்,ஒற்றைக்காலில் உச்சாடனம் செய்து!!
ஒரே நிலவு!!
விண்ணில் ஒரே நிலவு இருக்க வேண்டும்
என்பதற்காகவோ என்னவோ
உன்னை இறைவன்
மண்ணில் படைத்தது விட்டான்..
பஅரமனுக்கு லஞ்சம்!!!
பெண்ணே
பிரமனுக்கு
எவ்வளவு
லஞ்சம்
கொடுத்தாய!்
எங்களை
மண்
கலவையில்
செய்துவிட்டு,
உன்னை
மட்டும்
பொன்
கலவையில்
செதுக்கி
இருக்கிறான் .
பாதகன்!!!
அறியாமை!!!
நினைவுக்கு உயிர் இல்லை என்றார்கள்!!!.
நான் உயிர் வாழ ..காரணமே உன் நினைவுகள் தான் என்று அறியாமல்...
நூலகம்
கவிதை எழுத கடினம் என்றார்கள்
உன் கண்களை கன்ட பின்பு
ஒரு நூலகமே அமைத்து விட்டேன்
என் இதயத்தில்....
புயல்
என் கவிதையை படித்த அனைவரும்
கேட்கிறார்கள்யார் அந்த அவள் என்று.
நானோ
அந்தப்பெயரில் எந்த புயலும் இன்னும்
என்னை தாக்கவில்லை என்றே
சொல்லி வருகிறேன்
யாரிடம் சொல்வது
நீ தான் அந்த புயலென்று. !
குறும்புக்காரி!!!
காதலே வேண்டாம் என்றிருந்தேன்
இறை தேடும் எறும்பாய்
அலைந்து கொண்டிருந்த
என்னை துரும்பாக்கி விட்டாள்
அவள் இதயத்தில்...
அவள் குறும்புக்காரி
ஆனாலும் உண்மையானவள் .
அறிவியல் பார்வை
இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின்வழியே பரவச்செய்கிறது.இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது.
எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.
மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோநீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும்,பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.
உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம்.குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும்.இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.ரோமங்கள்
(முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.
அமைதி!!!
கண்கள் வலித்த நிமிடங்களில்
கண்ணீர் இல்லை
ஆனால் ..,
அமைதியாய் இருக்கின்றேன்
என் அமைதியை தேடி ..!
திறக்காத கதவு!
தட்டி பார்த்து திறக்காத கதவு
அவள் இதயம்தான்
இடித்துகூட பார்த்துவிட்டேன்
அப்போதும் திறக்கவில்லை
ஆனால் ..,
இரண்டு நாள் அவளை பார்க்கவில்லை
தானாய் திறந்தது
அன்று உள்ளே போனவன்தான்
இன்னும் வெளியில் வரவில்லை ..!
வேதனை!!!
இருட்டில் ஏற்றிவைத்த விளக்குபோல் உன்நினைவுகள்...!
வெளிச்சம் தரும்
என நினைத்தால்
வேதனை தந்து
கொண்டிருக்கிறது....!
பல குரல்!!!்
நான் பிறப்பிலிருந்துபல குரல்....
நான் நட்பின்குரல்
நான் பாசகுரல்
நான் என் மொழியின்குரல்
நான் ஏக்கத்தின்குரல்
நான் எழுச்சிகுரல்
நான் அதிகாரகுரல்
நான் அடிமையின்குரல்
நான் கவிகுரல்
நான் காதல்குரல்
நான் கற்க்கும்குரல்
நான் கற்பிக்கும்குரல்
நான் பிழையானகுரல்
நான் பிழைதிருத்தகுரல்
நான் நம்பிக்கைகுரல்
என் அத்துணைகுரலையும்
குழைத்து
அழுகை குரலாக்கியதுன்
துரோகக்குரல்....!
குரல்வலை வலிக்கும்
குரல் கண்டேன்.....!
வலிபொருக்காது
அழுது நின்றேன்....!
Tuesday, November 6, 2012
காதல்
காதல்...........
அன்பு உன்னிடம்...
பாசம் என்னிடம்...
காதல் யாரிடம்
என்று தேடாதே
அது நம் இருவரிடம்.....