நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் !வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,அப்பா !!மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,நான் சொல்கிறேன் !மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்று !உடனே எப்போது என்கிறாள் !!சொல் மயிலே !!எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?
No comments:
Post a Comment