ஜன்னலை திறந்ததில் தெரிந்தன
பஞ்சுபோல் பறக்கும்
வெண்பனித்துகள்கள்.
கைக்கெட்டும் தூரத்தில்
வந்திவிட்டது மற்றும் ஒரு பனிக்காலம்
எலும்புகள்வரை ஊடறுத்துசெல்லும்
குளிருக்கு அஞ்சாமல்,
காத்திருப்பேன் காதலுடன்
அடுத்துவரும் இளவேனில்
காலத்திற்காய
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, November 22, 2013
உன்னிடம் பேசக்கூடாது
என்று சபதம் செய்து ,
மானங்கெட்ட தனமாய்,
"உன்னை ரொம்ப பிடிக்கும் ,
என்கிட்டே பேசு .."
என்று அழுது உன்னிடம்
பேசிவிடும் ,
ஒவ்வொரு சண்டைப்
பொழுதுகளிலும் ,
எத்தனை தடவை
"இந்த காதலுக்கு கண் மட்டுமில்ல
சூடு ,
சொரணை எதுவுமே இல்லை "
என்று என்
மீதே உமிழ்ந்து கொண்டாலும் ,
தான் இருப்பதை நிரூபித்து
வெற்றி கண்ட மகிழ்ச்சியில்
அத்தனையையும் அட்சதைகளாய்
ஏற்றுக்கொண்டு
சிரித்துக் கொள்கிறது
இந்த காதல் !
Friday, November 15, 2013
Wednesday, November 13, 2013
Wednesday, November 6, 2013
Monday, November 4, 2013
கண்ணாடியை வாங்குறோம்,
விளக்கை அணைத்துவிட்டு
வெளிச்சத்தை தேடுறோம்;
தனியாளா நிக்கிறோம்,
சொந்தபந்தம் இல்லாம
செத்த பிணமா அலையுறோம்;
நல்ல நாலு ஏதுமில்லை
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை
கல்யாண நாளைக் கூட
தொலைபேசியில் தீர்க்கிறோம்;
இயக்கிவிட்ட எந்திரமா
இரவு பகல் உழைக்கையில
வியர்வையில் சரித்திரத்தை
காய காய எழுதுறோம்;
காற்று போல மண்ணு போல
மனசெல்லாம் ஆசை ஆசை,
ஆசைப் பட்ட அத்தனையையும்
அற்ப பணத்துக்கே விற்கிறோம்;
பணமென்னும் காகிதம் தான்
விதியை கூட மாத்துதே,
வீடுமனை பல இருந்தும்
மனசு ஒத்தையாவே வாடுதே....
Friday, November 1, 2013
இனிய தீபாவளி வாழ்த்து !
உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!
கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!
Wednesday, October 30, 2013
Sunday, October 20, 2013
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென
முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
Wednesday, October 16, 2013
Tuesday, October 15, 2013
ME
Nothing to say anything about me... I'm
not good but i'm not worst... Some judge
me on their view... I won't care about
that... Who are good in the world to judge
me??... No one is either buddha or
raman... I know about me more than
others...
Sunday, October 13, 2013
நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி
உன் எச்சிலை சாப்பிடம் சுகம் !
தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு
பள்ளி செல்லும் சுகம் !
மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல்
என்ன தலையை வருடிக் கொடுக்கும் சுகம் !
நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி
என் நெற்றியில் நீ முத்தம் கொடுக்கும் சுகம் !
இது அனைத்தும் இன்று வரை அனுபவித்துகொண்டிருக்கிறேன்
என் தாயிடம் இருந்து.
ஏழு கழுதை வயசாச்சு இன்னம் பிள்ளைய
கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு சொனாலும்
என் பிள்ளை கிழவன் ஆனாலும் எனக்கு அவன்
குழந்தைதான் என்று சொல்லி
என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டிருக்கும்
என் அன்னையை கடைசி காலம் வரை
சுகமாகசுமப்பது நான் செய்த பாக்கியம்.
Thursday, October 10, 2013
இன்று மாயூரம் வேதநாயகம்
பிள்ளை பிறந்தநாள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(அக்டோபர் 11, 1826 - சூலை
21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ்
எழுத்தாளர் ஆவார்.
இவர் 1878இல் எழுதிய பிரதாப
முதலியார்
சரித்திரம் என்னும் புதினம் தமிழில்
வெளியான முதல் புதினம் ஆகும்.
இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள குளத்தூரில்
பிறந்தார். இவரின் பெற்றோர், தந்தையார்
சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய
மரி அம்மையார். இவர்,1876-1888
ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட
பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள்
அனைத்தையும் கொடையளித்தார். இதனைப்
போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண
பாரதியார் நீயே புருஷ மேருஎன்ற
பாடலை எழுதினார். தொடக்கக் கல்வியைத்
தமது தந்தையிடம் கற்ற
வேதநாயகம் ஆங்கிலம், தமிழ்
மொழிக்கல்வியை தியாகராச
பிள்ளை என்பாரிடம் பயின்றார்.
சிறு வயதிலேயே திருமணங்கள்,
விருந்தினர் வருகை போன்ற
நிகழ்வுகளின் போது நகைச்சுவையான
கவிதைகளை எழுதினார்.
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய
பின் 1856இல்தரங்கம்பாடியில் முனிசீஃப்
வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட
முனிசீப்பாக 13 ஆண்டுகள்
பணி புரிந்தமையால் இவரை மாயவரம்
வேதநாயகம்
பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக்
காலகட்டத்தில் 16 புத்தகங்கள்
எழுதினார். தமிழின் முதல் புதினமான
பிரதாப முதலியார் சரித்திரத்தையும்
எழுதினார். வீணை இசைப்பதிலும்
வல்லமை பெற்றிருந்தார்.
அவரது சமகாலத்தோரான
தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
, இராமலிங்க
வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின்
மகாசன்னிதானம் சுப்பிரமணிய
தேசிகர், கோபாலகிருஷ்ண
பாரதியார் ஆகியோருடன்
நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல.
அவற்றுள் சில:
· 1862இல் சித்தாந்த
சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில
சட்டங்களை தமிழில் செய்த நூல்
· 1869இல் பெண்மதி மாலை -
பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப்
பாட்டுக்களாலும் உரைநடையாலும்
கூறும் நூல்.
· 1873இல்
மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி
, திருவருள் மாலை, தேவமாதர்
அந்தாதி இவை செய்யுள் நூல்கள்.
கிறித்துவ மதம் பற்றியது. மத
வரலாறு, மற்றும் கடவுள் பால்
அவருக்கிருந்த அன்பு இவற்றைப்
புலப்படுத்துவது.
· 1878இல் பிரதாப
முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற
கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின்
முன்னோடி. இது ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
· 1878இல் சர்வ சமய சமரசக்
கீர்த்தனை
ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
· 1887இல் சுகுண சுந்தரி
புதினம்
· 1889இல் சத்திய வேத
கீர்த்தனை
· பொம்மைக்
கலியாணம், பெரியநாயகியம்மன்
என்னும் நூல்களும் மற்றும் பல
தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார
Friday, September 27, 2013
தமிழ்நாட்டின் வரலாற்றில்
பொற்காலத்தைப் படைத்தவர்கள்
ராஜராஜசோழனும் அவன் மகன்
ராஜேந்திரசோழனும் ஆவார்கள்.
இவர்கள் ஏறத்தாழ
இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ
ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக
ஆக்கினார்கள். கி.பி. 982-ம்
ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற
சிங்கள அரசன்
இலங்கையை ஆண்டு வந்தான். அவன்,
சோழர்களுக்கு எதிரிகளான
பாண்டியனுக்கும், சேரனுக்கும்
உதவி செய்து வந்தான்.
படையெடுப்பு
எனவே, இலங்கை மீது படையெடுக்க
சோழமன் னன் ராஜராஜசோழன்
முடிவு செய்தார். தன் மகன்
ராஜேந்திர சோழன் தலைமையில்
ஒருபெரிய கப்பல்
படையை அனுப்பி வைத்தார்.
தமிழ்ப் போர் வீரர்களுடன்
கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன.
போர்க் கப்பல்களைப்
பார்த்து சிங்களர்கள் மிரண்டனர்.
சோழர் படையை எதிர்க்க துணிவின்றி,
மன்னன் மகிந்தன் இலங்கையின்
இன்னொரு பகுதியான ரோகண
நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான்.
சோழர் படை, இலங்கையின்
வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது.
அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ
மண்டலம்' என்ற பெயர்
சூட்டப்பட்டது. தலைநகரமான
அனுராதபுரம் அழிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம்
புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது.
அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய
பெயர் சூட்டப்பட்டது.
சிங்கள மன்னனின் கருவூலத்தில்
இருந்த நகைகள், வைர மாலைகள்,
அரசஅணிகலன்கள்
முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க
முடியாத வாள் ஒன்று சோழர்
வசமாகியது.
இரண்டாவது படையெடுப்பு ரோகண
நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன்,
சும்மா இருக்கவில்லை.
சோழருக்கு எதிராக
பெரும்படை ஒன்றை திரட்டினான்.
இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய
பகுதியை மீட்க போர் தொடுத்தான்.
இதுபற்றி சோழ மன்னன்
ராஜேந்திரனுக்குத் தெரிந்தது.
அவன் கி.பி. 1017-ம் ஆண்டில்
மீண்டும்
இலங்கை மீது படையெடுத்தான்.
இரு தரப்புக்கும் இடையே பெரும்
போர் நடந்தது. சோழ படைகளின்
தாக்குதலை, மகிந்தன் படைகளால்
சமாளிக்க முடியவில்லை. போரில்
சோழர் படை வென்றது. சிங்களர்
படை தோற்றது. மகிந்தனின்
மணிமுடியும், அரசியின் மகுடமும்
ராஜேந்திர னின் வசம் ஆகியது.
அதுமட்டுமின்றி, 100
ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள
அரசனிடம் பாண்டிய மன்னன்
பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த
மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன்
கைப்பற்றினான்.
சிறையில் மகிந்தன்
போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ
வீரர்களால் சிறைப்பிடிக்கப்
பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக
நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன்
தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது,
மகிந்தனும்
கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு சோழநாட்டு சிறையில்
அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம்
சிறையில் இருந்த மகிந்தன்,
சிறையிலேயே இறந்து போனான்.
மேற்கண்ட தகவல்கள்,
திருவாலங்காட்டு செப்பேட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
ராஜேந்திர சோழன்
வெற்றியை குறிக்கும்
கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில்
உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும்
உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன்
முறியடித்தது பற்றி,
சிங்களர்களின் வரலாற்று நூலான
"சூளவம்ச''த்திலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்தனின் மகன்
ராஜேந்திர சோழனால்
சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு,
காசிபன் என்ற மகன் இருந்தான். போர்
நடந்தபோது அவனுக்கு வயது 12.
அவனை சிங்களர்கள் ரகசியமாக
வளர்த்து வந்தனர். சோழ
நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த
பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக
சிங்களர்கள் அறிவித்தனர்.
சோழர்களை எதிர்க்க அவன் பெரும்
படை திரட்டினான்.
இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன்
மகன் இராசாதிராஜன் தலைமையில்
ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-
ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன்
மாண்டான்.
சிங்களப்படை தோற்றுப்போய்,
சிதறி ஓடிற்று. அதன்பின்,
கீர்த்தி என்ற சிங்கள மன்னன்
சோழர்களுடன் போர்
புரிந்து தோற்றுப் போனான். அதனால்
ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க
முடியாமல் அவன்
தற்கொலை செய்து கொண்டான்.
பராக்கிரமபாண்டியன்
பிற்காலத்தில், சோழர்கள் புகழ்
மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது.
அந்தக் காலக்கட்டத்தில்,
பாண்டியர்களும்
இலங்கை மீது படையெடுத்தனர்.
கி.பி. 1255-ம்
ஆண்டு பட்டத்திற்கு வந்த
ஜடாவர்மன் வீரபாண்டியன்,
இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண
கல்வெட்டுகள் கூறுகின்றன.
தென்காசியைத் தலைநகரமாகக்
கொண்டு ஆட்சி நடத்திய
அரிகேசரி பராக்கிரமபாண்டியன்
(கி.பி.1422-61)
இலங்கை மீது படையெடுத்து சிங்களரை
முறை வென்றதாக கல்
வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
பிற்காலத்தில், விஜயநகர
அரசர்களும் இலங்கையில்
போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள
Wednesday, September 25, 2013
நான் கடந்து வந்த காலங்களில்
பல உறவுகள்
பல நேரங்களில் என்னை கை விட்டு சென்றது
உன் நட்பினை தவிர
என் சோகங்கள் நான் சொல்ல
உன் கண்களிலே
என் கண்ணீர் துளிகளை பார்கிறேன்
சுற்றிகொண்டிருக்கும் உலகில் சுத்தமான
உறவு என்று
உன் நட்பினை மட்டும்தான் நான் உணர்கிறேன்
வாய் திறந்து காதல் என்று சொல்லிப்பார்
இரு
உதடுகளிலும் ஏற்படும் ஒரு பிரிவு
வாய் திறந்து நட்பு என்று சொல்லிப்பார்
இரு
உதடுகளிலும் ஏற்படும் ஒரு இணைப்பு
அதுவே இறைவன்
நடப்புக்கு கொடுத்திருக்கும் மதிப்பு
உறவுகள் என்னை உதறிய போதும்
காதல் என்னை கை கழுவிய போதும்
என் வாழ்வின் உரிமை கொண்ட
உறவு என்று சொல்ல
உன் நட்பு மட்டும் எனக்கு போதும்
நம் உயிரே நட்புக்கு சமர்பனமாகட்டும்
நம் நட்பு இந்த
உலகுக்கு ஒரு இலக்கனமாகட்டும்
நம் வாழ்வின் பயணம் நட்பின் பயனமாகட்டும்
நாம் வாழும் வரை நம் நட்பும் உயிர்
வாழட்டும்...
Saturday, September 7, 2013
சே குவேரா
வீரத்திற்கு மரணமில்லை
பொலிவியா நாட்டில் பிறந்தவனே
புரட்சியின் புனலாய் புலர்ந்தவனே
சரித்திரமாக மிளிர்ந்தவனே
சந்தனமாகத் தேய்ந்தவனே
உண்மை விடுதலைக்கு வேராய்
உலக விழிப்புக்கு ஆதவனாய்
உயிரைக் கொடுத்த உன்னதமானவனே
சேகுவாரா என்னும் பெயரை
செதுக்கினாய் உலக வரலாற்றில்
உழைக்கும் மக்களின் தலைவனாய்
உன்னை நீயே உருவாக்கினாய்
காலங்கள் காற்றாய்ப் பறந்திடும்
மறைந்திடும் சந்ததி ஆயிரம்
மாறாமல் இருப்பது ஒன்றேதான்
மக்களுக்காக போராடும் வீரமே
Tuesday, August 20, 2013
Monday, August 12, 2013
Saturday, August 10, 2013
ஒரு விடுதலை வீரன்
மரணிப்பதில்லை,அவன் அந்த
தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம்
தேசபக்தர்களின் இதயங்களில் என்றும்
வாழ்ந்து கொண்டே இருப்பான்.
அப்படியான ஒரு விடுதலை வீரன் தான்
நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும்
விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ்
சந்திரபோஸ்” ஆவார்.
ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய
தலைவர் தனது ஆத்மார்த்த குருவாக
இவரையே தன் நெஞ்சில்
ஏற்றுக்கொண்டாதாக நம் வரலாறு
பெருமைப்பட்டுகொள்ளுகிறது.
யார் இந்த நேதாஜி....
அவசரக்காரர்-ஆத்திரக்காரர்
என்று கூறினார் மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர்
என்று கூறினார் ஜவகர்லால்
நேரு அவர்கள்
ஆனால்
வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு
விடுதலை வீரன்
கொள்கை வீரன் என்று.
தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24
வயதில் I.C.S என்ற
உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.
35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த
கட்டாக் நகரில் தான் பிறந்த
மாளிகையை தேசத்திற்காக
அர்பணித்தார்.
42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த
அகில இந்திய காங்கிரஸ்
பதவியை துாக்கி எறிந்தார்.
44 வயதில் தன் தேச விடுதலைக்காக
தாய்
நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம்
சென்றார்.
இப்படியாக தனது தேசத்தின்
விடுதலைக்காக முழுமையாக
அர்பணிப்புடன் போராடிய
ஒரு விடுதலை வீரன் இவன்.
தேசத்தை விட்டு வெளியேறி
இருப்பினும் கொண்ட கொள்கையில்
ஒரு உறுதியுடன் அன்றைய உலக
ஒழுங்கை நன்கு விளங்கிக்
கொண்டு அதனை தனது தேசத்தின்
விடுதலைக்காக மாற்றியமைத்த
ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.
தன் உயிரையே பணயம்
வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும்,
கிழக்காசிய நாடுகளிலும்
அலைந்து திரிந்து ஒரு தற்காலிக
சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய
இராணுவத்தைத்
திரட்டி போரிட்டு உலக
வரலாற்றிலேயே ஒரு புதிய
சாதனையை அத்தியாயத்தை
உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ்
சந்திரபோஸ் அவர்களே.!!
Friday, August 9, 2013
இரும்புச்சிறைதனில் எங்கிருந்தோ
கிடைத்த இறுதி
எழுதுகோலாய் காதலிக்கப்பட்டேன்
விரகதாபத்திலிருப்பவனின் விரல்கள்
விரக்தியின்
முழு வெப்பத்தையும் விளம்பிட
வெண் தாள் வடிவம் வழுவிய படியே
தூக்கியெறிதலில் தூங்கியிருக்கும்
விடுதலைத் திலகம்
நுதல் விழுதலை எதிர் நோக்கிய வண்ணம்
மயானப்பந்தியில் கீர்த்தனை
மெட்டிசைத்தவன்
ஆனந்த குளத்தினுள் முகாரிக
Tuesday, August 6, 2013
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
1. அறம் செய விரும்பு / 1. Learn to love
virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget
Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent
philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray
confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake
motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't
despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry
and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the
great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the
good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't
shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't
flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to
befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your
speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously
space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19.
Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your
parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget
gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry
has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't
land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24.
Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with
snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton
bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-
coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest
the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when
young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is
obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is
corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives
superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth
beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from
the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all
that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake
friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon
animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the
learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide
knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't
swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal
games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands
Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate
with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being
paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be
righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt
others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action
with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out
good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being
insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show
fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a
lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be
trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the
unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57.
Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59.
Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate
every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame
the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in
unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't
listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget
your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't
compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the
beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally
agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart
from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into
a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over
snack.
71. நூல் பல கல் / 71. Read variety of
materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow
your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good
manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't
involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble
in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid
unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no
vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away
from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out
for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of
honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81.
Protect


