Thursday, June 27, 2013

மழையை பார்த்து மயங்கி நின்றேன் !
மழலை போல தயங்கி நின்றேன் !!
மங்கை அவளை பார்த்த பின்பு !!

Saturday, June 15, 2013

ஈன்றவளும் பெண்ணே
ஈரத்தவளும் பெண்ணே
ஈன்றவள் தாயானாள்
ஈர்த்தவள் தாரமானாள்
தாயானவள் காட்டுவாள் பாசத்தை
தாரமானவள் காட்டுவாள் நேசத்தை
பாசமும், நேசமும்
புடை சுழ்வதே குடும்பமாகும்

குடும்பம் என்பது குதூகூலமாகும்
உயிருக்கு ஈடாய்
உயிரை பணயம் வைப்பாள் தாய்
உணர்வுக்கு ஈடாய்
உணர்வினை உணர்ந்து
நடப்பாள் தாரம்
தாயும் தாரமும் இரு கண்கள்
சேயும் சுகமும் இவர்களது எண்ணங்கள்
தாயினைத் துதிப்போம்
தாரத்தை மதிப்போம்!!!

Sunday, June 9, 2013

நீ என்ன லூசா??"கழுத்தை சாய்த்துபார்வை இறக்கிநீ கேட்கும்அழகுக்காகவேபைத்தியமாகலாமடி...!!

இருமனம் இணைவது தான்திருமணம் என்றால் இப்போது வேறொருவனுடன் அவள் செய்வது மறுமணமே

Friday, June 7, 2013

தந்தை கைபிடித்து நடக்கையில்
தவறவிட்ட ஒருகால் செருப்பைத் தேடி
திரும்பிப் பார்த்தபடி நடக்கும்
மழலை
அணிந்து சென்ற
கம்மலில் ஒன்று
எங்கே விழுந்ததென்று
அம்மா முறைக்க
இரயில் பெட்டியில் தேடும் மகள்

அவசரமாய் அதிகாரி
அழைக்க, கிளம்புகையில்
வண்டி சாவியைத் துழாவும்
அடிமை
போலவே
நானும்.....
அரைத்தூக்கத்தில் விழித்து
அருகில் உன்னைத் தேடியபடி
இருக்கிறேன்..

Monday, June 3, 2013

எனக்குஞாபக மறதி..உனக்கோ என்ஞாபகமேமறதி.. —

Sunday, June 2, 2013

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர். எனவே தான் ஆண்கள் எந்த ஒரு இடத்திலும் பெண்களுக்கு மதிப்பளிக்கின்றனர்.

இத்தகைய பெண்களிடம் இருந்து, எப்போதும் நல்லதை மட்டும் கற்றுக் கொள்வதில்லை. தீயதையும் தான் கற்றுக் கொள்கிறோம்.

ஆகவே அத்தகைய பெண்களை சிறப்பிக்கும் வகையில் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மகளிர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய தினத்தில், வாழ்க்கையில் மறக்க முடியாத உறவுமுறைகளில் சந்திக்கக்கூடிய 8 விதமான பெண்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

அம்மா
உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம் உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.

மாமியார்
அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.

பாட்டி
பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். அதிலும் பாட்டியின் மூலமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வோம். எனவே இந்த பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.

ஆசிரியர்
குறும்பு செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும், படிக்கும் காலத்தில் ஒரு பெண் ஆசிரியர் மிகவும் பிடிப்பவராக இருப்பவர். எனவே அவ்வாறு ஒழுக்கத்தோடு, இவ்வாறு தான் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மனதிற்கு பிடித்த பெண் ஆசிரியரை, எந்த ஒரு ஆணும் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.

தங்கை
அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்களை விஷயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.

முன்னாள் காதலி
பெண்களிடமிருந்து எத்தனை தான் நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டாலும், ஒரு கெட்ட விஷத்தையும் கற்றுக் கொள்வோம். அதிலும் காதலிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து சரியான புரிதல் மற்றும் நம்பிக்கையின்மையினால் பிரிந்து விட்டாலும், வாழ்வில் காதலித்த முதல் காதலியை யாரும் மறக்க மாட்டார்கள்.

மனைவி
அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர் பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.

மகள்
அனைத்து அப்பாக்களின் செல்லப்பிள்ளை, அவர்களது மகள் தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மகளிடமிருந்தும் நிறைய கற்றுக் கொள்கின்றனர். மேலும் அவர்களிடம், அவர்களது மகளைப் பற்றி சொல்லச் சொன்னால், அனைவரும் சொல்வது “என் உயிர் தான் என் மகள்” என்பது. இத்தகைய உறவுமுறையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
உன்னில் தொலைந்ததால் தான் என்னை இன்னும் மீட்க முடியவில்லை !
வழிகள் இருந்தும் வலியோடு காத்திருக்கிறேன்...
என்னில் நீ தொலைவாய் என்ற நம்பிக்கையில் !
விரட்டி விட்டாலும் வந்து மொய்க்கின்றன
உன் நினைவுகள்..!
இறுக அணைத்து ஒரு முத்தம் கொடு ......
கொடுப்பதில்
உனக்கு தயக்கமிருக்காது
கேட்பதில் தான்
எனக்கு தயக்கம்.
உன் பேரப்பிள்ளைக்கு
என் மனைவி
ஆசை ஆசையாய்
தரும் முத்தங்கள்
என்னை வெகுவாய்
ஏக்கம் கொள்ளச்செய்கின்றன..........

அம்மா .........
இறுக அணைத்து ஒரு முத்தம் கொடு ..

Saturday, June 1, 2013

எதிர்மறையாக நான் எழுதிய கருத்துக்கள் நான் என் சொந்தக்கருத்தாகச் சொன்னதில்லை. நடைமுறையில் பார்த்திருக்கிறேன். அது போன்ற மனிதர்களுக்காக வெட்கப்படுகிறேன்.

காதலென்று எதைச் சொல்லுகிறீர்கள்காதலென்று எதைப் போற்றுகிறீர்கள்காதலென்று எதைத் தூற்றுகிறீர்கள்லைலாவும் மஜ்னுவும்தாஜ்மகாலும் மும்தாஜூம்சரித்திரம் எல்லாமே சொல்லப்படுகிறதுதான் நேசிப்பவன் தன்னை நேசித்தல்தன்னை நேசிப்பவனை தான் நேசித்தல்காதலெனும் பெயரில் உயிர் விட்டவர்கள்போற்றப்படலாம்தூற்றலுக்கும் வரைமுறைகளே இல்லை தான்தனக்குப் பிடிக்காத எல்லாமே அவ்வகையில்பிறகுகாதலென்றால்...கடவுளென்று சொல்லிவிடலாம்அது சுலபம்.