Friday, May 31, 2013

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...?!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்" என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்தப் படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

நீ தினமும் மறக்காமல் பூக்களை பறித்துவிடு ....!!!
நீ பூப்பறிக்க மறந்தநாட்களில் தானாகவே உதிர்ந்து
தற்கொலை செய்துகொள்கின்றன பூக்கள்......!!!

Thursday, May 30, 2013

காதலிப்பவர்கள் எல்லோரும் பைத்தியகாரர்கள்என்றேன், என்னைப் பைத்தியமாக்க நீ வருவாய் எனத் தெரியாமல்...

Tuesday, May 28, 2013

நீ கேட்டதெல்லாம்தருவேன் நான்என்பதற்காகஉன் நினைவுகளைதிரும்ப கேட்கின்றாயே?உன் நியாபகமாய்அதை மட்டும் தானேதந்துவிட்டுபோனாய் என்னிடம்..

Monday, May 27, 2013

உனக்குத் தெரியுமா என்று தெரியவில்லைஉன்னை வெறுப்பதாகச் சொல்லிநான் இன்னும் அதிகமாகஉன்னை விரும்பிக் கொண்டிருப்பது...!


யாருமற்ற நேரத்தில்
முற்றம் நுழைந்த
மழை
எழுப்பிவிட்டுச்சென்றது
மனக்காட்டை..

Sunday, May 26, 2013

நிலவின் மகளே..,
நீலவானத்தின்
வட்டமுகமே..., அப்படி
என் மேல் கோபம்
வெல்ல வழியிருந்தும்
உனக்காக...உன்னிடம்
தோற்பதையே என்
வாடிக்கையாய்
வைத்துள்ளேனே....
அதனால அனார்
உன்னை நீயே
சரி பார் தவறின்
காரணங்கள் யார்மீது
என்பது தெளிவாய்
தெரியுமடி உனக்கு
நினைவில்
கனவில்
தொலைவில்
விண்ணில்
மண்ணில்
என்னில்
எல்லாமே நீ தான் ......
ஆனால் நான் இல்லை உன்னில்

Saturday, May 25, 2013

உனை கவிதையாய் வடிக்கவார்ததைகளை தேடினேன்...புத்தகங்களை நாடினேன்...மனதிற்குள் பாடினேன்...எனக்குள் வாடினேன்...மொழியை சாடினேன்...பிறகு என் உள்மனதைஎட்டுத்திசைக்கு­ம் அனுப்பிவார்த்தைகளுக்கா­க காத்திருந்தேன்.­..எட்டுத்திசைகளில­ிருந்தும்வந்த வார்த்தைகளைகவிதைதாய் கோர்க்கமுற்பட்டால் வந்த அனைத்துவார்த்தைகளும் உன்பெயர் தான் அன்பே... உன்பெயரை தவிர வேறேதுமில்லை...உன் பெயரால் காவியம் படைப்பேன்...உன்னையே அதில் ஓவியமாக்குவேன்.­..

உன்னை உணரவைப்பதும் நட்பு!
உன்னை உயர்த்துவதும் நட்பு!
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு!
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு!
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு!
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
என்னை பிரியும் வரையாவது
என்னுடன் பிரியமாய் இரு !
உன் பிரியம் எண்ணி என் உயிர்
பிரியும் வரை வாழ்ந்து விடுகிறேன்!.

Friday, May 24, 2013

உனதுஎண்ணங்களின் மீதுபாடலொன்றைபுனைந்து கொண்டிருக்கின்ற­ேன்காலங்களைகாதல் செய்யச் சொன்னஉன்னிடம்காதலு(லி)க்கான அர்த்தத்தைகேட்கத் தவறிவிட்டேன்...­.கிளைவிரித்து எனக்கானநிழலைத்தரும் மரமாய் நீ...உனக்கான நிழலைஒருபோதும் தேடாததுவியப்பில்லை....­.ஒரு கணையாழியால்இழந்த வாழ்க்கையைசகுந்தலையும்புத்துயிரைசீதையும் பெற்றனர்..இங்கு கணையாழியுமில்லைகாரணமுமில்லை..குழப்பத்தின் மொத்த உருவமாய்பிறந்தவளானதால்எல்லாமே ஏமாற்றமாவதாய்நினைந்து கொண்டிருக்கிறேன­்...பொய்த்துப் போகும் கனவுகளுக்குமத்தியில்விதியை வணங்கி விடுதலைதேடுகிறேன்.....

Thursday, May 23, 2013

இருட்டினில் ஏற்றி வைத்த மெழுகாகநான் உருகினேன் உனக்காக நீயோஎன் வெளிச்சத்தை மட்டும்நேசித்தாய் என்னை அல்ல நான்கரையும் பொழுது ஆவதுபுரிந்துகொள்வாயஉன்னைநினைத்து தான் கரைகிறேன் என்று...!

Wednesday, May 22, 2013

அர்த்தங்கள் தெரியாமலே ஆசை கொண்டேன் உன் மீது
காதலின் அர்த்தம் உணர்ந்தேன் நீ தந்த காயத்தோடு
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன் நான் இன்று தனிமையோடு...

Tuesday, May 21, 2013

உனக்குள் மாற்றம் வேண்டும்
இனிதாய் பேசி எவரையும் நேசி
நேர்மையாய் வாழ்ந்து உண்மையை போற்று ..........
பொய்மையை கொன்று மெய்மையை வளரு
அறிவினை வளர்த்து அகந்தையை குறை .......
மனிதம் கொள்ளும் வாதம் தவிறு
அமைதியை பெருக்கும் மௌனம் போதும் ...........
தூற்றி பேசும் பேச்சு வேண்டாம்
போற்றி பேசும் பக்குவம் பழகு ............
அறிவை இழக்கும் கோபம் வேண்டாம்
பொறுமை கொண்டு அமைதி தேடு ...........
அழிவு கொடுக்கும் பொறாமை வேண்டாம்
பெருமிதத்தோடு உயர்ந்து வாழு ..........
இயந்திர வாழ்க்கையை குறைக்க பாரு
இயற்கையோடு ஒட்டி வாழு .........
இதற்கு நீயும்(நானும்) விதிவிலக்கல்ல!
வாழ்க்கை என்ற வீதியில்
நான் திரிந்த வேளையில்
என்னுடைய பார்வையில்
நிழல்களை துரத்தியடிக்கும் வெயில்,
அசுத்தப்படும் ஈக்கள்
சில இடங்களில் பூக்கள்
சில இடங்களில் கற்கள்
இடமில்லாமல் சாலையில் கிடக்கும் குப்பைகள்
காண்போரையெல்லாம் குரைக்கும் நாய்கள்
வசைமொழி வாய்மொழியாகிக் கொண்டிருக்கின்றன.
சில கனவுகள் இன்னும்
இரவாகவே இருக்கின்றன விடியாமல்.
செய்முறையில்லா கல்விமுறை,
மாணவர்களை மரணத்துக்கு
இழுத்துச் செல்லும் தேர்வுமுறைகள்.
2020யை எதிர்பார்த்திருக்கும் நாடு
20 20யை ரசனையுடன் கண்டுகளிக்கும்
வேடிக்கை ஒரு பக்கம்.
நான் சென்ற வீதியில் இருந்து
திரும்பி வந்தேன் பீதியில்.
கடந்து வரவில்லை
கசங்கி வந்திருந்தேன்..
இதற்கு இந்த வீதியில் விளையாடும்
குழந்தைகளூம் விதிவிலக்கல்ல.
அந்த ஐந்து நிமிடம் பெய்த மழை
இவ்வனைத்தயும் மறக்கடிதன..

Monday, May 20, 2013

மூங்கில் ...
புல்லாங்க்குழல் தந்ததா...?
மண் ..
பானையை தந்ததா ..?
கல் ...
சிலையை தந்ததா ...?
துரியை ..
ஓவியம் வரைந்ததா....?
இல்லைதானே ..!!!
ஒவ்வொன்றும் உன்னால்தானே வந்தது ...!!!
முயற்சிதான் இந்த உலகம் ..!!!

எந்த சாயம்
பூசினாலும் மயங்காத
மயிலே அனார்கலி
உனை நான்
விவசாயம் செய்யப்
போகிறேனடி பேதைப்
பெண்ணே....!!
உச்சிவெயில்
உழுது நான் களைத்த
பொழுதினிலே....
கண்டாங்கி சேலைகட்டி
கை நிறைய
வளையலிட்டு
காதோரத்து முடியில்
கனகாம்பரம் நீ
வைத்து.....
கொண்டு வந்து
தந்தாயடி அந்தக்
கம்பங் கஞ்சி....அது
மந்தாரமலையை
மத்தாக்கி ஆதிசேஷனை
கயிராக்கி பாற்கடலை
கடைந்து கிடைத்த
அமுதினும் இனியதடி
கண்ணே....அதையும்
நாணிச் சிவந்த உன்
முகத்தை பார்த்துக்
கொண்டே குடிப்பது
பூலோகத்து
சொர்க்கமடி அனார்.

இன்னமும் கூடபுரியமுடியாத புதிராய்த்தானே நீ...!
மிட்டாய்க்காக அழும் குழந்தையைப்போல
என்னை அழவும் வைக்கின்றாய்
பின்பு சிரிக்கவும் வைக்கிறாய்.......!!!

மையிட்ட விழி இரண்டு போதும்
சிவப்பு வண்ண பொட்டோன்று போதும்
சிரிக்கின்ற இதழ் மட்டும் போதும்

பெண்ணே உன்னை அழகி என்பேன்
நான் கன்னம் நனைக்கையில்
கண்ணீர் துடைத்தவன்
இன்று உனக்காய், உன்னால் அழுகிறேன்
இதை ஏன் நடிப்பு என்கிறாய்?
தவறி
விழுந்தாலும்
தடுமாறி
விழுந்தாலும்
தாவிக் குதித்தாலும்
காதல் பலவீனத்தின்
பிரதி பிம்பம் தானோ...?
அத்துணையும்
கனவாய் போனதேடி
உன் மீது அவதூறுகளும் வீண் பேச்சுகளும்
அதிகமானால் நீ மிக வேகமாக
முன்னேறி கொண்டிருக்கிறாய் என அர்த்தம்...!
உன்னை எழுதுகிறேன்........
எதுகை என்கிறார்கள்,
மோனை என்கிறார்கள்,
சிலேடை என்கிறார்கள்,
எனக்கு எழுதத்தெரிந்ததெல்லாம்
உன்னை மட்டும்தான்,
உன்னை எழுதுகிறேன்
அது அழகாய் பிறக்கிறது....

Saturday, May 18, 2013

விடிந்து விட்டது என்று என் கனவை விட்டு நீ விலகிய போது தான் தெரிந்தது !

என்னை வயிற்றில் சுமந்த அன்னைக்கு
பத்து மாத வலி...
உன்னை நெஞ்சில் சுமக்கும் எனக்கு எப்போதுமே வலி
நீ தோன்றிய கனவும் கலைந்தது,,
நிழல் கூட நீரில் மூள்கியது,,,
கண்ணீரும் கண்ணில் வற்றியது,,,
இழந்தேன் உன்னை மட்டுமல்ல என்
இன்பத்தையும் தான்,,,,

நினைத்த பொழுது என் நெஞ்சில்
நின்றாய்
காரணம் கேட்டேன் கடவுளிடம்
இவள்தான் உன் துணைவி என்றான். !
மகிழ்ச்சியை நொடிப்பொழுதில்
உணர்ந்தேன்
உன்னை கண்டபொழுதெல்லாம். !
இன்று நான் கலங்கும் நேரம்
எந்தன் இதயம் என்னிடம் இல்லை
கண்ணே நீ என்னுடன் இல்லை. .
மரணம் என்று ஒன்று இருந்தால்
அது உந்தன் அன்பு மடியில்
வேண்டும் எனக்கு
உன் புன்னகை ஒன்று போதும்
கண்ணே நான் என்றும்
கண்ணுறங்க . !
மருந்தை கையில்
வைத்துக்கொண்டு
வலிந்து காயத்தை
தேடிக்கொள்வதற்கு பெயர்
-காதல்

Friday, May 17, 2013

உன் சிதறிய வார்த்தைகளை
எடுக்கிறேன்,
கோர்க்கிறேன்,
தானாகவே எழுதிக் கொள்கிறது
கவிதையாக !!
அன்பு நண்பர்களே,
வாழ்கை அனுபவங்கள் தான் தத்துவங்களின் பிறப்பிடம். தத்துவங்கள் பலருடைய வாழ்கையே புரட்டி போட்டிருகின்றது. பல சாதனையாளர்களையும், பல நல்லா மனிதர்களையும் உருவாக்கி இருக்கிறது. எனக்கு பிடித்த என்னுள் சில மாற்றங்களை கொடுத்த சில தத்துவங்கள் இதோ உங்களுக்காக,
வாழ்க்கையில் வெற்றி பெற
மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக
பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கை!!
ஓராயிரம் கற்பனைகளும்
ஒரு சில நிஜங்களும்
என்று நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்
நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்
– காந்திஜி
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்
டிரம்மண்ட்
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி
"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்
"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்
"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
நீ என்னவாக நினைகின்றாயோ
அதுவாக ஆகின்றாய் - பகவத் கீதை
கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி
ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்
தாமஸ் புல்லர்
தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்.

இராணுவத்தால் அழிந்தவர்களை விட,
ஆணவத்த்தால் அழிந்தவர்களே அதிகம்!.

Thursday, May 16, 2013

உன்னை காணாத
என் கண்கள் குருடாகட்டும்

உன் வாசம் மட்டும் அறிந்த
என் சுவாசம் திணறி போகட்டும்

உன் முத்தம் மட்டும் ருசித்த
என் இதழ் மறுத்து போகட்டும்

உன்னை தீண்டிய
என் கைகள் உடைந்து போகட்டும்

உன்னை தேடி தோற்று போன
என் கால்கள் முடங்கி போகட்டும்

உனக்காய் வாழும்
என் உயிரும் உறங்கி போகட்டும்
நீ இருந்து
நேசதின் வலியை
பாசதால் மறைக்கிறேன்
பாவையை புரிந்துகொள்
பூவைவிட மென்மையானது
இந்த பூவையின் நெஞ்சம்
சொல் தாங்கமாட்டேன்
கல் இல்லை என் இதயம்
கசக்காதே உன் வார்தைகளால்
வலிக்குத
டி . . .
உன்னால் தான்
உன்னால் தான்
கவிதை வடித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
இவ்வுலகம் அறிந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
என்னை மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கையெழுத்து அழகானது
உன்னால் தான்
உன்னால் தான்
இதயம் இடமாறிதுடித்தது
உன்னால் தான்
உன்னால் தான்
இயற்கையை ரசித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கண்விழித்து கனவுகன்டேன்
உன்னால் தான்
உன்னால் தான்
பசி; தூக்கம் மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
தனிமையில் சிரித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கைவிடாதே காதலியே
உனக்காக தான்
உனக்காக தான்
என் உயிறும் உடலும்
உனக்காக தான்
என் இதயத்தில்
காதல் எனும்
கோட்டையை
கட்டியவள்
நீ தான்...
அதையே உடைத்து
கல்லறையாய்
மாற்றியவளும்
நீ தான்...
என் நிழலையும்
நிஜமாக்கி சென்றவள் நீ
இன்று உன் நிழல் பிரதியை
மட்டுமே வைத்து வாழ்கிறேன்
வெறும் நினைவுகளில் மட்டுமே
என் நிலையறிந்து வந்துவிடு பெண்ணே
சுழற் காற்று போல் உன்னையே
சுற்றும் இதயம் காயமடைந்தாலும்
காலம் மாறினாலும் மாற மறுப்பதேன்

நீ,
என் வழியில் வந்த நொடி,
வானவில் போல் என் வாழ்வில் வண்ணம்
வந்ததென எண்ணினேன்
அது வண்ணம் அல்ல வெறும் ஒளி
என்று வலி கொடுத்து சென்றாய்
ஏன்!

வலையில் விழும் மீன்களும், அந்நொடி
வெளிவர துடிக்கும் ,
உன் வசம் விழுந்தநான் அத்துடிப்பும்
ஏற்ப்படாத கோழையானேன், ஏன்!
வலிமையான என் காதலாலா அல்லது,
அதைவென்ற உன் கண்கலாலா ,

இல்லை ,
அதை கொன்ற உன் வார்த்தைகளால்
தான்,
நான் கோழையானேன்,

பெண்ணே !
உன் விழிக்காட்டும் திசையெல்லாம்
என் வாழ்கையை செலுத்தினேன்,
உன் வார்த்தைகளை என் வாழ்கையாய்
மதித்தேன்
உயிர்வலி கண்ட இத்தருனத்தில்
எண்ணுகிறேன்,
நான் மதித்த
அந்த வார்த்தைகள் யேன் என்
உயிரை மிதித்தன என்று !

வலிபட்ட மிருகமும் மருக்கனம்
அக்காயத்தை ஏற்க்க
அவ்வழி செல்லாது,

கனம் கனம் கயபட்டாலும்,
உன்னை விட்டுவர மறுக்கின்றது
என் மனம் , ஏன் !

நிஜம் தேய்த்த என் செவிகள்
ஆயிரம் சொன்னாலும்
உணர மறுக்கின்றது மனம் ,
நீ என்னை வெருகிறாய் என்று,
ஏன் !

அழப்பெறா என்
உதடுகள்,
இன்று அகம் ஒற்று கிடக்கின்றன
ஏன்,
அகம் அழும் என்னுள்ளம்
குமுறல்கள் ,
வெளியே ஒலி பெற கூடா
தெனவா !
மலரை பிரியா வாசம் போல !
கடலை பிரியா அலையை போல !
உடலை பிரியா நிழலை போல !
அன்னையை பிரியா குழந்தை போல !
என்னைவிட்டு என்றுமே பிரியாது -- உந்தன் நினைவுகள்,........
என்றும் உன்னையே என்னி வாழும் உன் காதலன்,.....
என் உறவுகள் அனைத்தும்
என் நலம் விரும்பி

நேசிக்காத உன்னை
மறந்து விட சொல்லி
என்னிடம் அன்புக் கட்டளையிட

என் இதயமோ உன்னை
தவிர வேறு எதையும்
சிந்திக்காமல் -உன்
நினைவுகளுடனே வாழசொல்கிறது...

நண்பர்கள் கொண்ட அக்கறை
என் மனதில் ஆழமாக
பதிந்தாலும் -உன்னை
உன்னை மறக்க சொன்ன
வார்த்தைகளின் வலி

என் இதயத்தில்
முள்ளாக குத்த
துடிக்கும் என் இதயத்தின்
வலிகளை யாரிடம் சொல்லி அழுவதென
தெரியாமல் தவிக்கிறது...

நேசித்தவனின் நினைவுகள்
என் நெஞ்சில் இருக்க ...

நண்பர்களின் ஆறுதல்
என்னில் இருக்க
உன் நினைவுடன் மடிவேன் மண்ணில் ...
அன்பே
என்னிடம் உள்ள
எதை வேண்டுமானாலும் கேள்
எனக்குள் இருக்கும்
உன்(நினைவி)னை தவிர .............!
என்ன மாயம் செய்தாய் ?
நான் மூங்கில் இல்லை ஆனால்
புல்லாங்குழலாய் மாறினேன் .
நான் மேகம் அல்ல ஆனால்
மழையாய் தூறினேன் .
நான் விருட்சம் அல்ல ஆனால்
பூத்து குலுங்கினேன் .
நான் உன் உடமை அல்ல ஆனால்
உன் பெயர் சொல்கிறேன் ............
என்ன மாயம் செய்தாய் ?
நான் மூங்கில் இல்லை ஆனால்
புல்லாங்குழலாய் மாறினேன் .
நான் மேகம் அல்ல ஆனால்
மழையாய் தூறினேன் .
நான் விருட்சம் அல்ல ஆனால்
பூத்து குலுங்கினேன் .
நான் உன் உடமை அல்ல ஆனால்
உன் பெயர் சொல்கிறேன் ............
கேளடி இந்த கதையை ..!
யாரிடம் இதை சொல்வேன் ..!!
நாம் பிரிந்து பலநாட்கள் ...!
நாட்கள் தான் சொல்லுகிறது ..!
உன் மனதில்நான் இல்லையென...
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்...
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்...
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே...
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே....
என் இதயம்..... !!!
என் விரல்கள் தொடும் தூரம் நீ இல்லை எனறாலும்! நான் தொடுவேன் உன்னை என் நினைவுகளால்!
எத்தனை நாள்தான் இப்படி ..?
காத்திருப்பது ..? இன்று சொல்வாய்
நாளை சொல்வாய் என்று..?
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நான் எடுக்கும் முடிவை
நீ தாங்க மாட்டாய் ..........!
அன்பே நீ தாங்கமாட்டாய்.......!
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே அழைக்கிறேன்
உண்மையாக செல்கிறேன்
தவறிருந்தால்
ஊயிரே மன்னித்துவிடு
கரடுமுரடானதாம்
காதல் பாதை..

கல்லைப் பொறுக்கிக்கொள்,
கட்டிட உதவும்-
வென்றால்- வீடு,
தோற்றால்- கல்லறை...!
நீ என்னை நீங்கினாலும்
நீ தந்த காதலால் என்னுள் நீ வாழ்கிறாய்...
கண்ணோடு நீ மறைந்தாலும்
உன் நினைவின் துணையால்
உன்னால் தான் வாழ்கிறேன்.
உனை காணும்போதெல்லாம்
உணர்கிறேன்
உயிரிருப்பது
கண்களில்தானென்று
எவராலும் தரமுடியாத
சிலவற்றில்
உறக்கமும் ஓன்று ...
அதையும் பறித்துச் சென்றாயே
இரக்கமே இல்லாமல் ...!
நினைவுகளை விட்டு விலகாத வலிகளும் வலிகளை விட்டு விலகாத நினைவுகளும் நிலைத்திருப்பது உண்மை காதலில் தான்
காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு !!
நினைவுகளை விட்டு விலகாத வலிகளும் வலிகளை விட்டு விலகாத நினைவுகளும் நிலைத்திருப்பது உண்மை காதலில் தான்
இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்.
என் பயணத்தை தொடர்கிறேன்...
பாதை தெரியாது,
ஆரம்பித்து வைத்தாள் அன்னை,
ஊக்குவித்தார் தந்தை,
முன் சென்றான் அண்ணன்,
பின்தொடன்ர்ந்தாள் தங்கை,
கைகோர்த்து வந்தான் நண்பன்,
பாதியில் வந்தாய் நீ,
ஆரம்பம் மறுபடியும் வந்ததைப்போல் உணர்ந்தேன்,
என்னை ஆரம்பித்தவளின் அன்பை உன்னிடம் கண்டேன்,
என் ஆரம்பமும் நீ முடிவும் நீ என்ற சொற்களுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தேன்,
நான் சேரபோகும் இடத்தில், என் வெற்றியுடன் நீயும் இருந்ததால்...
அவள் பிரிவை எண்ணி வருத்த
படவில்லை கண்ணீர் வடிகிறேன் அவள்
என் அருகில் இருந்தால் கூட
இப்போது நேசிப்பது போல நேசித்து இருக்க
மாட்டேன்....
என் இதய தோட்டத்தில் ரோஜாவகை நீ பூத்தால்,
உன்னை பாதுகாக்கும் முட்களாய் நானிருப்பேன்..
நீயே முள்ளாக மாறி என்னை குத்தினால்,
கவலைப்படமாட்டேன் பூவே...
நீ விழாமல் இருக்க உன்னை தாங்குவேன் கிளையாக, என்றென்றும் காதலுடன்...
உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!
முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!
இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உனக்கு பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது..
என்ன செய்வது,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...
மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது ..
அவளை நினைக்காதே
என்று எத்தனைமுறை
சொன்னாலும் கேளா
மனதிடம்...!!!

Tuesday, May 14, 2013

dhuriyan rasa

நாணப்பிறந்தவள் நீ!!
உனை ஆளப்பிறந்தவன் நான்!!!

நீயும் நானும் மட்டும் உள்ளஆளரவமற்ற பொன்மாலைமழைப்பொழுதுகள் ஊடலற்றநம் கூடலுக்காய் காத்திருக்கின்றன!!!

Monday, May 13, 2013

உன் கண் விழியில்கைதுசெய்து என்னை கல்லறையில்அடைத்து விட்டாய்,,*

Thursday, May 9, 2013

எத்தனை முறைதான் சாவதடி ?
துடுப்பே இல்லாத ஓடமடி - நீதுணையாய் வந்தால் போதுமடிஅடுப்பே இல்லாத சமையலடி -நீஅணைத்தால் அதுவே வேகுமடிமங்கையே அச்சம் போதுமடி - நம்மஞ்சத்தில் நாணம் சாகும்மடிஅங்கத்தில் எல்லாம் அத்துப்படி- உன்அத்தனை பல்லும் முத்து கொடி ....பருவத்தின் நிலவுபாவமடி - உன்பருவத்தை பார்த்து - அதற்குகோவமடிவளைந்த புருவத்தின் கீழ்வான் நிலவு - நீவந்து விட்டால் வருடமும்தேன் நிலவுஇதழில் ஊரும் செந்தேனடி -உன்இடையில் வீழ்ந்து செத்தேனடிகழுத்தில் கருகிய மச்சமடி -கொஞ்சம்குனிந்தால் கோபுர உச்சம்மடிசந்தன காற்றைமுகர்ந்தேனடி - நீசந்தினில் வருவதைஉணர்ந்தேனடிஇத்தனை அழகும் பாவமடி - நான்எத்தனை முறைதான் சாவதடி ?பித்தனாய் ஆக்கி விட்டாயடி - உன்வெத்திலை இதழாய் தொட்டாயடிமழைபோல் பொழியும் முத்தமடி - நம்மஞ்சத்தில் மூன்றாம் யுத்தமடி -உன்காதல் திணமும் தோணுமடி - நீகடைசி வரைக்கும் வேணுமடி ..நடையில் நாணம்பொங்கும்மடி - உன்இடையில் இளநீர்மங்கும்மடி .மடிவதில் அச்சமே இல்லையடி -உன்மடியில் மடிந்தால் சொர்க்கமடிசெடியில் நீறுக்கு வேரில் வழி - நீசென்று விட்டால் எனக்கு ஏது வழி..?

Monday, May 6, 2013

இறைவா அவள் இல்லாத
விடியல் வேண்டாம்..
அவள் இல்லாத
உயிரும் வேண்டாம்
என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை மட்டும்
துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு.....

உன்னால் ....!
தொடங்கப்பட்ட எதுவும்
உன்னாலேயே முடிவுறுகிறது...!
அது கவிதையானாலும்...!!!
அது காதலானலும்...!!

தமிழ்

Sunday, May 5, 2013

அன்றே நீ சொல்லி இருக்கலாம்
உன் நெஞ்சம் கல் என்று
இன்று வரை மோதி இருக்க மாட்டேன்
ஏன் என்றால்
என் நெஞ்சம் கண்ணாடி என்று
என்றோ எனக்கு தெரியும்...

தனியாக சென்றவன் நான்
தனிமை படுத்தியவள் நீ!!!!

Wednesday, May 1, 2013

நீயே நிஜமானாய்!

நிஜமெல்லாம் நீயானாய்!!!

அன்பு கொண்ட நீ அருகில் இருந்தால் என்ன ?
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ள வரையில்
♥ உன் தொலைவும் ஒரு சுகம்தான்!!!