Wednesday, January 16, 2013

பிடிக்கும்

அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தந்ததென்றால்
 
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
 
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
 
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
 
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!

No comments:

Post a Comment