என்னாச்சி....?!
பச்சரிசி பொங்க பானை பனைவெல்லம்- வாங்கியாச்சி !
மஞ்ச கொத்து இஞ்சிக் கொத்து கொல்லையில- பரிச்சாச்சி !
வாழை மரம் வாழைத்தாரு தோட்டத்தில- வெட்டியாச்சி !
கரும்புக் கட்டு ரெண்டுகட்டு கடைத்தெருவில -வாங்கியாச்சி !
மோரக் கடைஞ்சி வெண்ணையை உருக்கி நெய்யை- உறுக்கியாச்சி!
வீட்டுக்கு வெள்ளை அடுச்சி,பண்டம் பழச -ஒதுக்கியாச்சி !
மாட்டுக்கு புதுசா தாம்புக் கயிறு
மூக்கனாங் கயிறு -போட்டாச்சி !
கொம்ப சீவி புதுசாகட்சி சாயத்த பூசியாச்சி!
நெல்லிச் செடி மாஞ்செடி
வீட்டுக்கு -வெட்டியாச்சி!
கொத்து கொத்தா நெல்லுமணி
வாசலுல -கட்டியாச்சி !
அரிசி அரைச்சி திண்ணையில
மாக்கோலம் -போட்டாச்சி !
கையிரண்டுக்கும்
மருதாணி-அப்பியாச்சி !
இதையெல்லாம்
கனவுலதான் -கண்டாச்சி !
வயலெல்லாம்
தண்ணியில்லாம -வறண்டாச்சி !
எங்க வயிரெல்லாம்
கஞ்சியில்லாம - காஞ்சாச்சி !
எங்கவயிரெல்லாம்
வத்திபோயி -நாளாச்சி !!
வத்திபோயி நாளாச்சி !!!
No comments:
Post a Comment