நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்குமருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு.
என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்தஒற்றை நிலா - சந்திரனே உன் நட்பு.
உன்னால் உன் அன்பால் சோகம் என்றவார்த்தை கூடபிடிக்காமல் போனது என்னிடம்.
சுவைக்க சுவைக்க நேற்று பார்த்த திரைப்படக் கதை சொல்லி.....உன்னால் என் கற்பனைத்திரையில் உருவான எத்தனையோ திரைப் படங்கள் எனக்கு மட்டுமே திரையிடப்பட்டு.
பிறப்பின் அர்த்தங்கள் தேடவில்லை(தேவையில்லை) கடவுள் தந்த பரிசாய் நீ கிடைத்தபோது.
சொல்லெடுத்து நீ நின்றால் சோகங்கள் மரணிக்கும் ,வில்லெடுத்து நீ நின்றால் அந்த மரணமும் இலைமறைக் காய் போல மறைந்து விடும்.
எத்தனையோ நாட்கள்
பற்பல இடங்களில் ஓரிரு
பீரினை நான் குடித்த போது
சிவப்பு விளக்காய் உன் அறிவுரைகள்.
இருந்தாலும் சில சமயம்"இன்று மட்டும் - ஒன்று மட்டும்"என்று எத்தனையோ நாட்கள் கிடைத்த உன் அனுமதிகள் .
சிலருக்கு நண்பர்கள் பல கிடைக்கலாம் அனால் ஆயுள் வரை பயணிக்கும் நட்பு நமதே.
(மாலவன்துரியன்)
No comments:
Post a Comment