Wednesday, February 13, 2013


அன்னை என்றொரு ஆலயம்

அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .

காணிக்கை கேட்க்காத கடவுள் அவள்

காணியில் காணக்கிடைக்கும் அவளின் அருள் .

பத்து திங்கள் கருவிருந்தேன்

அவள் பளிங்கு முகத்தினை கண்டிடவே !

என்ன தவம் செய்திருந்தேன்

தாயாய் இவளை கொண்டிடவே !

பாசம் புரளும் வங்கி அவள்

வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .

பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்

பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .

எத்தனை பிறவி கொண்டாலும்

உன் மகளாய் வாழும் வரம்வேண்டும் .

இல்லை ஒரு பிறவியாவது நீ

என் மகளாய் மடியினில் தவழ்ந்திட வேண்டும்.....

No comments:

Post a Comment