Wednesday, February 13, 2013


காதல் பற்றிய சில குறிப்புகள்

மேகம் கறுத்து மழை பொழியும் நனைதலில்
உயிர்ச்சுவடுகள் மட்டும் வெப்பத்தால்
பொசுங்கி கருகி வீழும்
நடந்து கொண்டே இருப்பதற்காய் பாதை
நீண்டு போகும் .உலகமோ ஊசிமுனையில் இருக்கும்
மொழிகள் இளகும் ..விழிகள் இருள் துறந்து விலகும்
நிலங்களில் பறவைகள் முளைக்கும்
வண்ணத்துப்பூச்சிகள் மலர்களை சிதைக்கும்
மெல்ல மெல்ல உதடுகளால் பொய்மை
ரசம் பருகப்படும் ..ஓரிரு வார்த்தைகளில்
கவிதை உயிர் பெறும்
தமிழின் விதி முடிந்து போகும்
அந்த நாளொன்றில் உலகின் அந்தத்தில்
என் உயிர்பிரிந்த இறுதிப்பாடலொன்றை
எழுதி விட்டு இறந்து போவேன் ....

உயிரில்செறிந்தவளே !உன் காந்தவிழி
காட்டி இலக்கணத்தை கற்பழிக்காதே
விழிகளுக்கு தமிழுவமை நூறுண்டு
காந்தம் காதலை கவர்வதில்லை ...!!

No comments:

Post a Comment