ஆதலால் ஒரு புன்னகை செய்
நீயாகி அலையும் காற்று என்னுள் படர்ந்து
தியானத்தின் உச்சமாயும் பிராணத்தின் சொச்சமாயும்
ஞானத்தின் மிச்சமாயும் ஏகித்து விரிகிறது
மொட்டு வெடித்தும் பூக்காது விடுகிறாய்
உணர்வுகளாய் சிதறும் கண்ணாடி பிம்பம் பரிணமித்து எழுகிறது நீயாக-நீ
பெண்ணென்ற தீயாய்ப் பிறப்பொளிர்ந்த மௌனி
நானாகி உறையும் மூச்சு வெற்றிடத்தில் நிறைகிறது
வீட்டுக் கதவு ஜன்னலும் பாதையும் திறந்தே கிடக்க
நேற்றுக் கனவில் காற்றும் கவிதையும் காதலும் வந்து போக
சேற்றில் விழும் சூரியக்கதிராய் வறண்டு செழிக்கும்
என் உனதுடைமை தேசத்தை
உனக்கே அர்ப்பணிக்கிறேன் உன் தேசம் உன் மென்மை
நீ வாழ்ந்து என்ன பயன்
நாம் இல்லா இவ்வுலகில்
நான் வாழ்ந்து என்ன பயன்
பிஞ்சுத்துளிர்களில் வீழ்ந்த பனித்திவலை போல இந்நேசம்
நெஞ்சத்தடமெங்கும் நிறைகிறது
சுவாசமில்லா உலகில் ஒற்றைத் தனிமை கொடு
ஜீவவிருட்சத்தின் கனிகளையெல்லாமுன் காதலினால் அடை
உன் உதட்டை கர்ப்பமாக்கு
ஒளியுதிருமுன் பற்களால் பிரசவம் நிகழ்த்து

No comments:
Post a Comment