Wednesday, February 13, 2013


தீழ்ந்தழிந்து போனபின் தீப்புகுதல் பற்றி ..
(தேற்றம்)

அடர்ந்த இருள் போர்வைக்குள்
சுருண்டிருந்த ராவொன்றில்
மதுரை தாண்டி வந்த தீப்பறவைகளின்
வழி கண்ணகிசிலை
தொலைந்தொழிந்து போன சேதி எட்டியது

காமச்சூடேறி தலை பிளந்தது
மன்மதா..!!ஒவ்வொரு பெண்களும்
ஒருவிதம் மனதும் மர்மமும் ..!!
இந்த அன்பின் இலக்கணம்
காலை வரை முத்தவாடை

வெளிச்சமற்ற மூலையொன்றில்
காற்று நடுங்குவதைக் காணமுடிந்தது
காற்றை காப்பாற்றுவதாய் எண்ணி
தன்ஆடை களைந்து வீசுவாளவள்
மூச்சிழந்த காற்றிடம் மன்னிப்புக்கேட்காது
சோர்ந்துறந்குவோம்

எனதருமைப் பெண்களே ..!!
கவலைவேண்டாம்
பின்னொருநாளில் ,
கண்ணகி சுவடழிந்த இடங்களில்
மாதவி சிலை திறக்கப்படும் ..!!

No comments:

Post a Comment