Thursday, February 14, 2013

எத்தனை முறைதான் சாவதடி!!!

எத்தனை முறைதான் சாவதடி ?

துடுப்பே இல்லாத ஓடமடி - நீ
துணையாய் வந்தால் போதுமடி

அடுப்பே இல்லாத சமையலடி -நீ
அணைத்தால் அதுவே வேகுமடி

மங்கையே அச்சம் போதுமடி - நம் மஞ்சத்தில் நாணம் சாகும்மடி

அங்கத்தில் எல்லாம் அத்துப்படி- உன்
அத்தனை பல்லும் முத்து கொடி ....

இதழில் ஊரும் செந்தேனடி -உன்
இடையில் வீழ்ந்து செத்தேனடி

கழுத்தில் கருகிய மச்சமடி -கொஞ்சம்
குனிந்தால் கோபுர உச்சம்மடி

இத்தனை அழகும் பாவமடி - நான்
எத்தனை முறைதான் சாவதடி ?

பித்தனாய் ஆக்கி விட்டாயடி - உன்
வெத்திலை இதழால் தொட்டாயடி

மழைபோல் பொழியும் முத்தமடி - நம்
மஞ்சத்தில் மூன்றாம் யுத்தமடி -உன்

காதல் திணமும் தோணுமடி - நீ
கடைசி வரைக்கும் வேணுமடி ..

மடிவதில் அச்சமே இல்லையடி -உன்
மடியில் மடிந்தால் சொர்க்கமடி

செடியில் நீறுக்கு வேரில் வழி - நீ
சென்று விட்டால் எனக்கு ஏது வழி..?


No comments:

Post a Comment