காதல் முத்தம் சத்தம்
(ரணமில்லா உதடுகளின் வெளிப்பாடு)
சிவந்தும் மௌனித்தும் போகித்தும்
உயிரிலிருந்து உயிருக்குள்
உதடுகளைத் தைத்து விடுகிறது ஒரு முத்தம்
சுவை பெறுதலின்
பரிணாமப்பாதை வழி
இந்த முத்தம் வெறும் முத்தம்
இரண்டு இதயங்கள் மூர்ச்சையுற்று
விரல்கள் கோர்த்து
நிறைந்து வழிந்த வியர்வையில் இன்னொன்று
மென்நீல அடிவானம்
அவள் வெட்கங்களை அள்ளிப் பூசிச்
சிவந்து போய்க்கிடக்கின்றது
இந்த மாலை வெறும் மாலை
நாளை பிரிவுக்கான மூன்றாவது,
கடினமானது வேகமானது
காலம் கடந்தும் காதல் ஜீவித்த நினைவுகளால்
உயிரில் புதைந்தும் கரைந்தும் வரும்
சகியே
இந்த உடல் வெறும் உடல்
(காதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் )
(ரணமில்லா உதடுகளின் வெளிப்பாடு)
சிவந்தும் மௌனித்தும் போகித்தும்
உயிரிலிருந்து உயிருக்குள்
உதடுகளைத் தைத்து விடுகிறது ஒரு முத்தம்
சுவை பெறுதலின்
பரிணாமப்பாதை வழி
இந்த முத்தம் வெறும் முத்தம்
இரண்டு இதயங்கள் மூர்ச்சையுற்று
விரல்கள் கோர்த்து
நிறைந்து வழிந்த வியர்வையில் இன்னொன்று
மென்நீல அடிவானம்
அவள் வெட்கங்களை அள்ளிப் பூசிச்
சிவந்து போய்க்கிடக்கின்றது
இந்த மாலை வெறும் மாலை
நாளை பிரிவுக்கான மூன்றாவது,
கடினமானது வேகமானது
காலம் கடந்தும் காதல் ஜீவித்த நினைவுகளால்
உயிரில் புதைந்தும் கரைந்தும் வரும்
சகியே
இந்த உடல் வெறும் உடல்
(காதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் )
No comments:
Post a Comment