Wednesday, February 13, 2013


கறுத்த நிழல்களின் காலம்

தசை தின்று ஏப்பம் விடத்தொடங்கின
உடல்கள்
இருளின் அழுக்கேறி மெல்ல
மேகத்தால் புசிக்கப்பட்ட வறண்டு வீழ்ந்த நிலவொளியில்
உடல் தின்று அல்லது
ஒருவித நிழல் யுகத்தின்
அழுக்குகளை தின்று

கசிந்தும்
கசிந்தபின் கனத்ததும் அதனுடல்
அது என்றால் அவள்

பனிந்த புதரிலைகளில்
ஆடைகள் முளைத்த அதிசய நாளொன்றில்
பரிநிர்வாணமடைந்தேன்
காய்ந்து தகித்த உடலில் வேகமாய் கலந்து
பித்தொழுக
உயிர் நெய்தேன்

கோடையின் இயலாமை அவிழ்த்து விடுகிறது
உப்பொழுகும் நீர்மை
உடலின் கதகதப்பை உதட்டின் பிசுபிசுப்பை
இழக்கத்துணிகிறேன்
அவளென்றால் துளி

உருகியும் கருகியும் நிழல் வீழ்ந்தது
நிழலென்றால்
கொடிய புணர்வொன்றின் எச்சம்
மீண்டும் கறுத்த நிழல்களின் காலம் முடிந்தது
பூக்கள் இறந்த இடத்தில் ...

No comments:

Post a Comment