விவேகானந்தர் பார்வையில் பெண்கள்..!
****************************** *******
உலக அரங்கில் இந்து மதத்தை தலைநிமிரச் செய்த சுவாமி விவேகானந்தருக்கு இன்று 150-ஆவது பிறந்தநாள். இந்த பொன்விழா நாளில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்...
உலக சமய மாநாட்டின் மூலம் பிரபலம் ஆன விவேகானந்தர், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆன்மிக உரை நிகழ்த்தினார். அவரது உரை வீச்சு, இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் தந்தது. அந்த இடங்களுக்கு எல்லாம் அந்த இளம்பெண்ணும் சென்றாள். உண்மையைச் சொல்வது என்றால், விவேகானந்தர் மீது பைத்தியமாக திரிந்தாள். அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவள் ஆழ்மனதில் புதைந்துகிடந்த ஆசை.
ஒருநாள் விவேகானந்தரை நேருக்கு நேராக சந்தித்துவிட்டாள். “உங்களை வெகுநாட்களாக பின்தொடர்ந்து வருகிறேன். இப்போதுதான் உங்களுடன் நேரில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது. அமெரிக்க இளைஞர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னைத் தினமும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால் நானோ உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்...’’ என்று மேலோட்டமாகப் பேசினாள்.
விவேகானந்தருக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்துவிட்டது. இந்தப் பெண் மட்டுமல்ல, நிறைய அமெரிக்கப் பெண்கள் அவர் மீது காதல் கனை வீசி இருக்கிறார்கள். அதை மனதில் நினைத்துக்கொண்டவர், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே?’’ என்று கேட்டார்.
“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதாவது, நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்குக் குழந்தை பிறக்கும். அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேச எண்ணினேன்’’ என்று, உண்மையைச் சொல்லிவிட்டாள் அவள்.
அவளது பதிலுக்கு, நிதானமாக மறுபதில் சொன்னார் விவேகானந்தர்.
“தாயே! எனக்கு 31 வயது ஆகிறது. உங்களுக்கு 20 வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து 20 வயதைத் தொடுகின்ற போதுதான் அந்தக் குழந்தை அறிவானதா, இல்லையா என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீங்கள் என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளலாமே?’’ என்றார்.
எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்த்தார் சுவாமி விவேகானந்தர்.
******************************

No comments:
Post a Comment