Wednesday, February 13, 2013


பத்து மாதம் உந்தன் கருவறையில்

பத்திரமாய் என்னை சுமந்தாய்யே

அம்மா !



என்னை மறுபடி சுமப்பாய்யா !





அம்மா ! அப்பா உன்னிடம் ரகசியமாய்

சொல்வதை எல்லாம் என்னிடம் குழந்தையாய்

சொல்வீங்களே

அம்மா!



என்னை மறுபடி சுமப்பாய்யா





அம்மா என்னை உன் வயிற்றில் சுமந்த போது

அடிக்கடி எனக்கு தழுவி கொடுப்பீங்களே அம்மா

அந்த ஆனந்தம்

அந்த மகிழ்ச்சி

எனக்கு மீண்டும் வேண்டும்

அம்மா



என்னை மறுபடி சுமப்பாய்யா





அம்மா நான் உந்தன் வயிற்றில் சுழலும் போது

என் கால் பட்டு உனக்கு வலி ஏற்படும்

அதனை பொறுத்துக்கொண்டு அதனை

எத்தனை ஓர் இன்பமான உணர்வுகளாக உணர்ந்தாய்



என் பிள்ளை என் வயிற்றில் குதிக்கிறான்

என் பிள்ளை என் வயிற்றில் உதைக்கிறான்

என்று அன்பாய் , மகிழ்ச்சியாய் நீங்கள்



அப்பாவிடம் சொல்வீங்களே

என்னை ஆசையாய் அதட்டுவீங்களே அம்மா !

அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா





அம்மா உன் இதயம் என் இதயத்திடம்

எப்பொழுதும் பேசி கொண்டே இருக்குமே அம்மா

நம் இரு துடிப்பாய் , இதய துடிப்பு



என் ஒவ்வொரு இதய துடிப்பிலும் அய்யப்படாதே

உன் அம்மாவின் இதயம்

உந்தன் பக்கத்திலேயே தான் துடிக்கிறது



அய்யப்படாதே ! அய்யப்படாதே

என்று எனக்கு தெம்பூட்டுமே அம்மா உன் இதயம்



அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா



அம்மா ! அம்மா என்று நான் அழைக்கும் குரல்

உனக்கு மட்டும் தானே அம்மா கேட்கும்

இரவில் திடீர் என்று விழிப்பீங்களே

கண்ணே நீ உறங்கு அய்யப்படாதே

அம்மா உன் அருகில் தானே இருக்கின்றேன்

கண்ணே நீ உறங்கு என்று தாலாட்டு பாடுவீங்களே அம்மா



அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா



ஒன்பதாம் மாதம் உன் வயிற்றில்

நான் குடியிருந்த போது



உனக்கு நடத்திய சீமந்தம் வளைகாப்பில்

சுற்றத்தார் , குடும்பத்தார் அனைவருடைய

வாழ்த்தும் எனக்கும் அல்லவா கிடைத்தது



எத்தனை மகிழ்ச்சி உனக்கும் எனக்கும்



அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா



பத்தாம் மாதம் என் முகம் பார்க்க நீங்கள் துடித்தீர்கள்

உங்கள் முகம் பார்க்க நான் துடித்தேன்

குடும்பத்தார்கள் ,

ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ



என்று பேதம் பார்க்க !

அம்மா நீங்கள் கூறினீர்களே ஒரே வார்த்தையில்

பிறக்க இருப்பது என்னுடைய குழந்தை என்று

அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா



அம்மா !

உனது கருவறையில் எனது பத்து மாத கணக்கு

நிறைய போகிறது !



அம்மா நான் உங்கள் அழகு முகம் பார்க்க வர போகிறேன் !

அம்மா நான் உங்கள் மடியில் விளையாட வர போகிறேன்

அம்மா நான் உங்களிடமும்

அப்பாவிடமும் குறும்பு செய்ய வர இருக்கிறேன்



அம்மா உங்கள் அன்பு முத்தத்தையும்

அன்பு மொத்தத்தையும் நான் அள்ளி பருக வர இருக்கிறேன்

அம்மா உங்கள் தொப்பிள் கொடி அறுத்து என்னை
பிரிக்கின்றார்களே அம்மா !

பார்த்து என் அம்மாவிர்க்கு வலி ஏற்பட போகிறது
பார்த்து என் அம்மாவிர்க்கு வலி ஏற்பட போகிறது

என்று நான் செவிலியர்களிடம் கூறியது
அவர்கள் செவிகளிலே விழ வில்லை போலும்

அம்மா

அம்மா ! அம்மா நான் பிறந்து விட்டேன்
அம்மா இன்னும் என்னை ஈன்ற மயக்கத்தில்
இருக்கின்றீர்களா

அம்மா “என்னை தூக்குங்க அம்மா !

அம்மா “என்னை தூக்குங்க அம்மா !

உன் உயிர் இரண்டாய் பிரித்து
என் உயிர் தந்தாய் அம்மா

இந்த உயிர் உனதம்மா
இந்த உயிர் உனதம்மா

அம்மா என்னை மறுபடி சுமப்பாய்யா

உந்தன் கருவறையில் மீண்டும் ஓர் சுழற்சி

No comments:

Post a Comment