Tuesday, February 26, 2013

மாண்புமிகு நீதியரசர் சந்துரு

இங்கு ஏதும் தெய்வங்கள் இல்லை,-அதனால்
பூக்கள் வேண்டாம்!

இங்கு யாரும் பசியாக இல்லை-அதனால்
இனிப்புகள் வேண்டாம்!

இங்கு யாருக்கும் குளிர் இல்லை-அதனால்
சால்வைகள் வேண்டாம்.

    -மாண்புமிகு நீதியரசர்  K.சந்துரு.

#தன் வீட்டுக் கதவிலும்,
தனது அறையிலும் எழுதிய வாசகம்!

*தான் ஓய்வுபெறும்போது
உள்ள நடைமுறையான ஆடம்பர கொண்டாட்டங்களையும்
வேண்டாம் என்று தவிர்த்து,
மக்களின் வரிப்பணத்தில் எனது கொண்டாட்டங்கள் வேண்டாம் என அறிவித்த மகான்.

*மைலார்ட் (கடவுளுக்கு நிகரானவர்) என்று நீதியரசர்களை கூப்பிடும் வழக்கத்தை தனது நீதிமன்றத்தில் தடைவிதித்து
சார் என்றே அழைத்தால் போதும் என்றவர்.

*தான் நீதி அரசராக பொறுப்பேற்றவுடன்

நீதியரசர்களுக்கு அளிக்கப்படிம் சளுகைகளையும்,வேண்டாம் என எழுதிக்கொடுத்து,

இறுதிவரை நீதிக்காகவும் நியாயத்தின் அடிப்படையிலும் ,
அனைத்து தீர்ப்புகளையும் வழங்கி,

நீதிக்கே ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய மாமனிதன்.

#நீதியும் நேர்மையும் உள்ளவரை உங்கள் பெயரும் நிலைத்திருக்கும் ஐயா !

No comments:

Post a Comment