Wednesday, February 13, 2013


ஐந்தடி அதிசயம்

யாரிவள் என்று
ஊரேதும் தெரியாத
பெண்ணிடம் ...!!
போரொன்று தொடக்கினேன்
மனதிடம்-காதல்
வேர்கொண்டு நின்றது
விருட்சமாய் ...!!

மொத்தமாய் இருப்பாள்
என்னுள்
மொத்தமுமாய் இருப்பாள்
கூந்தல் விரி கூந்தல்
கும்மிருட்டின்
வழித்தோன்றல் ...!!

மென்மையாய் நகரும்
பாதங்கள்
தொடும் பாதைகள்
குன்றும் குழியுமல்ல
காதலும் கவிதையும்

கன்னத்தில் பருவொன்று
சிவந்திருக்கும் -அதை
முப்புரங்கள் எரித்த
கனல் என்பேனா ?இல்லை
மூன்றாம் பிறை
ஒளிரும் அனல் என்பேனா..?

யாதென்று
சொல்வேன் அவள் அழகை
சிரிக்காமல் சிரிக்கும்
அவள் உதடுகள்
ஆபிரிக்க தேச
வறுமை உணர்த்தி என்பேனா ?

அவள் சுடிதார்த்
துப்பட்டா முனைகளில்
துடிக்கும் என் இதயத்திடம்
சில கேள்விகள்

உயிர் வதை செய்தல்
ஆண்மை கொல்லல்
மனம்
உடைத்தல்
அந்த சைவ அழகியிலும்
இத்தனை
வன்முறை உள்ளதா ?

மஞ்சள் நிறத்
தாஜ்மகால்
என்ன செய்வாளவள்
ரசித்தவன் கண்களை
புசித்து விடுவாளோ
ஒரு வேளை...??

No comments:

Post a Comment