நம்பிக்கையாய் ஒரு நிழல்
ஒரு சில மின்மினிகள்
அந்த வெம்மை
இரவில்
எரிகின்ற
ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்
தூரத்தே ஒரு
தீக்குண்டம்
நுண்ணிய ஒளியில்
என் தனிமையை
தைத்துக்
கொண்டிருந்தேன்
கந்தலாடைகளாய்
மூலையில் -ஒரு
காதலும்
தைக்கப்படாத
துணி நீளமாய்
நம்பிக்கையும்....!!
அளர்வுடன்-என்
அறுந்த விரல்கள்
எதையோ நோக்கி
பயணப்பட்டன
அந்நொடியில்
எதையும் உணரமுடியவில்லை
அந்த உச்சிப்பல்லியின்
இச் இச்சென்ற
ஒலியைத் தவிர ....
அந்த இழை
வன்மையாகவும்
வேகமாயும்
இரவு பகல் பாராது
உழைத்தது
உயிரை
மனதை
வேதனையை....
தைத்து ஓய்ந்து
புலரும் நொடியில்
சிதைந்த
கின்னர நாணை
தைத்து
இசைக்கத்தொடங்கியது
ஒரு சில மின்மினிகள்
அந்த வெம்மை
இரவில்
எரிகின்ற
ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்
தூரத்தே ஒரு
தீக்குண்டம்
நுண்ணிய ஒளியில்
என் தனிமையை
தைத்துக்
கொண்டிருந்தேன்
கந்தலாடைகளாய்
மூலையில் -ஒரு
காதலும்
தைக்கப்படாத
துணி நீளமாய்
நம்பிக்கையும்....!!
அளர்வுடன்-என்
அறுந்த விரல்கள்
எதையோ நோக்கி
பயணப்பட்டன
அந்நொடியில்
எதையும் உணரமுடியவில்லை
அந்த உச்சிப்பல்லியின்
இச் இச்சென்ற
ஒலியைத் தவிர ....
அந்த இழை
வன்மையாகவும்
வேகமாயும்
இரவு பகல் பாராது
உழைத்தது
உயிரை
மனதை
வேதனையை....
தைத்து ஓய்ந்து
புலரும் நொடியில்
சிதைந்த
கின்னர நாணை
தைத்து
இசைக்கத்தொடங்கியது
No comments:
Post a Comment