வீரத்தின் விளைநிலமாய்…
விவேகத்தின் தலைமகனாய்… – நாம் நேசிக்கின்ற பாரதத்தை சுவாசிக்கப் பிறந்தவன் நம் நேதாஜி!!
வெள்ளையனின் வஞ்சந்தனை வீழ்த்த… – இந்தியனின்
அச்சந்தனை சாகடிக்க… – அந்நியனை துச்சமென மிதிக்க… –
இந்திய தேசியப் படைதனை நிறுவியவன் நம் நேதாஜி!!
வேற்று நாட்டிலும்
வெள்ளையனை எதிர்க்க…
இளைஞர்கள் படை அமைத்து இளைஞர்களுக்கு வழிகாட்டியவன் நம் நேதாஜி!!
இன்றும் நெஞ்சில் உரமிக்க இளைஞர்களின் நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறான் நம் நேதாஜி!!
No comments:
Post a Comment