Wednesday, December 5, 2012

தூளி!!!

மலரென்று சொன்னது மலரோமதுவென்று சொன்னது மதுவோஉனைதொடர்ந்திட சொன்னது எதுவோ
ஒன்று உனக்கு நான் தரவோ

கனவினில் நேற்று வந்தாய்
காதல் மந்திரம் சொன்னாய்
தென்னங்கீற்று நீயே என்பேன்
சுண்ணம்கள்ளு போதை என்பேன்

வண்டுகள் வாசல் வரை வருகிறது
வாவென்று என்னை அழைக்கிறது
மரகத பேழைக்குள் மாணிக்கமோ
முழுவதும் கைக்குள் அடங்குமோ

ஓசைகள் இல்லாமல் ஒதுங்குவோம்
மீசைக்குள் மெல்ல பதுங்குவோம்
ஆசைகள் முழுதும் அடங்கட்டும்
இலவம் பஞ்சுகள் பறக்கட்டும்

சரவண பொய்கைக்கு ஜலதோஷம் சண்டுபாம் தடவினா சரியாகும் மதுரச கிண்ணங்கள் காலியாகும் மயக்குமிரு செவ்விழனி தூளியாகும்.


No comments:

Post a Comment