Saturday, December 29, 2012

'#ஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை

எனது உடல் தழுவி
ஒத்திகை பார்த்தவர்கள்
தசைகளைத் தின்று
ஒருவர் பின் ஒருவராய்
உணர்வுகளை மட்டும்
துப்பி சென்றனர்
ஆயினும் நான்
அடியெடுத்து நடக்கின்றேன்

இனிய சகோதரியே
என்னை மன்னியுங்கள்
நீங்கள் விரும்பாத மொழியை
நான் பேசுவதற்காக

சாட்சியங்கள் ஏதுமின்றி
தேசாந்திரியாய்
தனித்த பயணத்தில்
எல்லைகளற்ற பெருவெளிகளில்
நீண்ட குரலெடுத்து
நிர்வாணமாய் அப்பி
நிரம்பி வழிகிறது
எனது கவிதை

No comments:

Post a Comment