Wednesday, December 26, 2012

காதலிப்பதற்காக திருமணம்

பள்ளி நாட்களிலும்
கல்லூரி நாட்களிலும்
என்னைச் சுற்றிலும்
காதலர்கள்
வலம் வரும் வேளையில்
காதலிக்கத் தவித்த மனதை
காலச் சூழ்நிலைகளின்
காரணமாய் கட்டிப் போட்ட
தருணங்களில் எல்லாம்
நினைத்துக் கொள்வேன்
திருமணமான பின்
தித்திக்கத் தித்திக்கத்
காதலிக்க வேண்டுமென......

காதலித்துத்
திருமணம் செய்து கொள்ளும்
இக்காலத்தில்
காதலிப்பதற்காக
திருமணம் செய்து கொள்ள
நினைக்கும் நான் .. :)

No comments:

Post a Comment