தமிழ் வழிக்கல்வி பயின்று
தலை நிமிர்ந்த தமிழன் நான்
இனிமையான மொழிகளில் ...நம்தமிழுக்கே முதலிடம் ...வாழ்க்கையில் தான் எத்தனை
நெறிமுறைகள் எழுத்துக்களாக
திருக்குறளைப்போல ...ஒழுக்கம் நேர்மை கடமை
வீரமென்று இலக்கியங்கள் கற்றுக் கொடுத்தன பல ...
பிறந்தால் மட்டும் போதுமா
தமிழை முறையாக கற்க வேண்டாமா ?
ஆங்கில மொழி படிப்பதால் நீஆங்கிலேயன் அல்ல..
அது அந்நியமொழி
நமக்கு வேண்டாம்
இன்றுடன் விட்டொழி .....
தமிழ் வழிக்கல்வி பயின்ற சாதனையாளர்கள் இவ்வுலகில் பல உண்டு
வரலாறு கலாச்சாரம் பண்பாடு .. அதைதமிழ்தான் சொல்லிக்கொடுத்தது அன்போடு ...நம்தலை முறையும் தொடரட்டும் பல நூற்றாண்டு
பன்மொழிக் கல்வியை விரட்டிடுவோம்
தமிழ்வழிக் கல்வியை உயர்த்திடுவோம்
தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை தரணி எங்கும் தொடரவேண்டும் அதன் பெருமை ...................
No comments:
Post a Comment