-பிஞ்சு கைகளில் ரேகை தேய வேலைபள்ளி புத்தகம் சுமக்கும் வயதில்குடும்பச்சுமை சுமக்கும் சுமைதாங்கிகள்வாழ்கையின் வலிகளை மனதின் வடுகளாய்கல்வியின் ஏக்கம் மட்டும் கண்களில்விளையாட்டை மறந்த ஈரநினைவுகளோடுவிடியலை தேடிப்பறக்கும் பட்டாம்பூச்சிகள்இந்த சின்னஞ்சிறு பிஞ்சு தொழிலாளிகள் !படிக்க ஆசைத்தான் அடுத்தவேளை உணவிற்குபட்டினி பயம் வந்து படிப்பை மறந்த வரலாறாய்வண்ணமான வாழ்க்கை கருப்பு வெள்ளையாய்வீடும் வேலையும் மட்டும் சுழலும் காலத்தோடுதோய்ந்த முகமும் கலைந்த கனவுடன்தெளிந்த சந்திரனாய் மின்னும் ஆசைகளைஇரவு தூக்கத்தில் சிதறவிட்டு விடிந்ததும்இரைக்கு பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்!அறிவுக்கண் மலர கல்வி வேண்டும்கல்வி கொடுக்க மனம் வேண்டும்வேலைக்கு அனுப்பாத எண்ணம் வேண்டும்குழந்தைகளுக்கு சிறப்பான கல்விவேண்டும்குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை வேண்டும்இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம்வலுவான அறிவுள்ள இந்தியாவை உருவாக்கஅணைத்து குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்போம
No comments:
Post a Comment