Saturday, December 8, 2012

தேசம் செய்த துரோகம் -குழந்தைத்தொழிலாளி!!!

தேசத்தின் அவலம் -குழந்தைத் தொழிலாளி ...

ஞாயிறு முளைக்கையில்
வானம் மறுக்கிறோம் - அதனை
உப்புக் கடலில்
உலையிடுகிறோம் ....

செடி
மறுத்து மொட்டினை
பறிக்கிறோம் -வியர்வையில்
எறிகிறோம் ....

இளம் பனி
பெயர்த்து -பாலைவனத்தில்
படையலிடுகிறோம் ...

ஒரு கல்வித்
தலைமுறையில் -அவர்களை
வெளியேற்றுகிறோம்-வாழ்விலிருந்து ...

அதிகாரமோ ,அரசாங்கமோ
அரசியலமைப்போ ,சமூகமோ -கல்வி மறுப்பை கண்டு
கொள்ளாமல் போயின்
தேசம் செய்த துரோகம் -குழந்தைத் தொழிலாளி !!!


No comments:

Post a Comment