Friday, April 19, 2013

தாவணி
--------------
வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக் கொடி!

மலை முகடுகளை
மறைத்தோடும் நீர்வீழ்ச்சி!

தடையின்றி மேனி மறைக்கப் போராடும்
காவற் படை!

இளமையின் ரகஸியங்களை
காற்றுவெளியில் விற்கும் உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவாடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அறிவிப்புச் செய்யும்
ஒப்பந்தக் காகிதம்!

No comments:

Post a Comment