Friday, April 19, 2013

உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலாவுன் முகம்
எனைக் கண்டதும் மலர்ந்தது!

வானவில் புருவங்கள்
என் வருகையில் சிலிர்த்தது!

உன் கார்மேகக் கூந்தல்
என்னை வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதடுகள்
உச்சரித்தது அடிக்கடி என் பெயரை !

உன் மேக மேனி
எனைக் கண்டு சிலிர்த்தது.............

இருந்தும்...........

அருகில் வந்ததும் விலகியோடுகின்றாய் ...............
மௌனத்தை உதிர்த்தபடி!

No comments:

Post a Comment