அலைகளலெல்லாம் சலிக்கவில்லை
தரையில் புரண்டெழுந்து மீள
கடலில் கலக்க...............
ஆதவனும் அலுக்கவில்லை
ஒவ்வொரு நாளுமுலகை
எட்டிப் பார்க்க......
காற்றும் சோரவில்லை
நம் மூச்சுக்குள் வளி நிரப்ப......
மனிதா..................!
நீ மட்டும் வாடாதே..............
தொலைவிலல்ல விடியல்
தொட்டுவிடும் தூரம்தான்!!
No comments:
Post a Comment