அன்பே
அன்றில் பறவையில்
தன் இணை இறந்தால்
கூழாங்கற்களை உண்டு
உயரப்பறந்து வீழ்ந்து இறக்குமாம்....
அறிவாயா.... நீ
அதைப் போலத் தானடி நானும்
உன்னை....
என்அன்பின் அடி ஆழம்வரை உனக்குத் தந்து
உன்னைக் காதலிக்கிறேன்.
நீ செய்யும் ஒவ்வொரு
உளவியல் உளைச்சலுக்கும்
என்றாவது ஓர் நாள்
என்னை நான் இழக்கத்தான்போகிறேன்.
No comments:
Post a Comment