பருவச் சிட்டுக்களின் சிறகடிப்பில்
இருவருமே தொலைத்து நிற்கின்றோம்
வார்த்தைகளை!
ஆச்சரியந்தான்................
நம் விழிகள் மட்டுமே பேசிக்கொள்ள
உதடுகள் சயனிக்கின்றன நாணியபடி!
என் நுதல் முகர்ந்து
உன்னருகாமை விசிறிய உஷ்ணங்களால்
நரம்போரங்கள் சிவக்கின்றன ஆர்வமாய்!
நம் காதல் எல்லைகளைத் தகர்த்து
நீ ஏவும் அன்பாயுதங்கள்
நிறைக்கின்றன முத்தங்களை சத்தமாய்!
காற்றோடு கூடல் செய்யும்
அலைகளின் முணங்கல் வருடிச் செல்ல
இச்சை ஆடைகள் அவிழ்கின்றன அவசரமாய்...
நீயோ..............
ஈரம் முறைக்கும் தேகமதை
இழுத்து கலைக்கின்றாய் நாணமதைத் திமிராய்!
சங்கடங்களுள் சங்கமமைத்தவென்னை
தழுவிச் செல்லும் உன் புன்னகை விரல்கள்
சொர்க்கமொன்றுள் மெல்லத் தள்ளி வீழ்த்திட
அரிதாரம் காணாத வென் மெய்யழகோ
உன் னன்பின் கிறக்கத்தில் உரசியபடி
அடங்கிக் கிடக்கின்றது நீயாகி!
கொற்றவனுன் மார்போரம்
பற்றிக் கிடக்கும் ஆண்மை.....
அடக்கிக் கொள்கின்ற தென்னை
காம சூத்திரங்களை உச்சரித்தபடி!
இருவருமே தொலைத்து நிற்கின்றோம்
வார்த்தைகளை!
ஆச்சரியந்தான்................
நம் விழிகள் மட்டுமே பேசிக்கொள்ள
உதடுகள் சயனிக்கின்றன நாணியபடி!
என் நுதல் முகர்ந்து
உன்னருகாமை விசிறிய உஷ்ணங்களால்
நரம்போரங்கள் சிவக்கின்றன ஆர்வமாய்!
நம் காதல் எல்லைகளைத் தகர்த்து
நீ ஏவும் அன்பாயுதங்கள்
நிறைக்கின்றன முத்தங்களை சத்தமாய்!
காற்றோடு கூடல் செய்யும்
அலைகளின் முணங்கல் வருடிச் செல்ல
இச்சை ஆடைகள் அவிழ்கின்றன அவசரமாய்...
நீயோ..............
ஈரம் முறைக்கும் தேகமதை
இழுத்து கலைக்கின்றாய் நாணமதைத் திமிராய்!
சங்கடங்களுள் சங்கமமைத்தவென்னை
தழுவிச் செல்லும் உன் புன்னகை விரல்கள்
சொர்க்கமொன்றுள் மெல்லத் தள்ளி வீழ்த்திட
அரிதாரம் காணாத வென் மெய்யழகோ
உன் னன்பின் கிறக்கத்தில் உரசியபடி
அடங்கிக் கிடக்கின்றது நீயாகி!
கொற்றவனுன் மார்போரம்
பற்றிக் கிடக்கும் ஆண்மை.....
அடக்கிக் கொள்கின்ற தென்னை
காம சூத்திரங்களை உச்சரித்தபடி!
No comments:
Post a Comment