அடுத்தவர் பொருள் கேட்டு
அடம்பிடிப்பேன் மழலையாய்!
அடிப்பார் ஆருமின்றி
அரவணைப்பார் பெற்றவர் !
அழுகை என் ஆயுதமாய்
அதிகாரம் பண்ணும் பருவமது!!
கடுஞ்சொல் கடிந்திடார் - என்
கண்ணீர் கண்டு துடித்திடுவார்!
ஆற்றுவாள் அன்னை அழகாய்
பல பொய் சொல்லி !
அப்பாவோ வீதியுலா காட்டி
பாப்பா தேற வழிதேடுவார்!
காலம் இறக்கை கட்டியதில்
தாவணியும் உடலேறியது!
இன்றும் எனக்குப் பிடித்த அவனை
அடம்பிடிக்கின்றேன்....
முறைக்கின்றனர் முடியாதென்று....
அறைகின்றனர் கன்னம் சிவக்க!
அடம்பிடிப்பேன் மழலையாய்!
அடிப்பார் ஆருமின்றி
அரவணைப்பார் பெற்றவர் !
அழுகை என் ஆயுதமாய்
அதிகாரம் பண்ணும் பருவமது!!
கடுஞ்சொல் கடிந்திடார் - என்
கண்ணீர் கண்டு துடித்திடுவார்!
ஆற்றுவாள் அன்னை அழகாய்
பல பொய் சொல்லி !
அப்பாவோ வீதியுலா காட்டி
பாப்பா தேற வழிதேடுவார்!
காலம் இறக்கை கட்டியதில்
தாவணியும் உடலேறியது!
இன்றும் எனக்குப் பிடித்த அவனை
அடம்பிடிக்கின்றேன்....
முறைக்கின்றனர் முடியாதென்று....
அறைகின்றனர் கன்னம் சிவக்க!
No comments:
Post a Comment