Friday, April 19, 2013

நட்பாகவும்
நம்பர் கேட்கவும்
நடுராத்திரி போன் செய்யவும்
அன்பு செய்யவும்
வம்பு செய்யவும்
காரணங்கள் ஏராளமாக
சொன்னாய் கதைகதையாக
ஏற்றுக்கொண்டேன் தாராளமாக
அதிலொன்றும் பிழையில்லை
அடியேனுக்கும் ஐயமில்லை
ஆனாலும் பொருந்தவில்லை
பிரிந்ததற்கு காரணம் மட்டும்
விலக நினைக்கிறாயா ?
விலக்க நினைக்கிறாயா ?
நினைத்தேன் உன்னை
விளையாட்டுப் பிள்ளையென
நித்தம் நித்தம்
விளையாட்டுதான் போலிருக்கிறது
காதலும் தானுனக்கு
ஆராய்ச்சிக்கு கிடைத்த
அடிமையோ நானுனக்கு ?
குற்றம் சொல்லவில்லை உன்னை
வெட்கம் கொள்கிறேன் என்னை
குழந்தைமனமும் குரூரமாகிறது
கொன்றால்தான் என்ன ?
எனக்குள் இருக்கும்
உன்னையும்
உன் நினைவுகளையும்...

No comments:

Post a Comment