Friday, April 19, 2013

வான் சாரளம் மெல்லத் திறந்து
தூவியது வியர்வைத்துளிகளை
உன்னைக் கண்ட பிரமிப்பின் வெம்மையில்!

தங்க வெயிலும் மழை மேனியும்
புணர்ந்து வீசிய வானவில்லில்
உன்னுருவம் தெறித்தது!

பூக்களின் சலசலப்பில் உதிர்ந்த மகரந்தங்கள்
நறுமணக் கசிவுகளுடன்
சிரித்தன நெற்றிப் பொட்டாய் !

சுரங்களாய் ஒலி பின்னிய குயிலிசை
வார்க்கப்பட்ட சந்தங்களுடன்
உதட்டோரம் தொட்டது இன்குரலாய்!

நிலா வீசிய நகத்துண்டுகள்
களவாய் ரேகை வரைந்தே
கன்னம் பதித்தன விழிகளின் மேல்!

தங்கம் கரைந்தோடிய மென்மேனி
அங்கமாய் முகவரி பூண
இடை மறந்து நடை பயின்றது ஒயிலாய்!

உயிர் கொண்டு செதுக்கிய நீ
பருவச் செழிப்பின் ரகஸியம்
இயற்கை முன்மொழிந்த அழகிய கவிதை!

No comments:

Post a Comment