Saturday, April 6, 2013

காதல் பொழுதுகள்..
மலை பிரதேசமெங்கும்,
சோவென்று,
பெரும் சப்தம்,
கொண்டு,
கொட்டி தீர்க்கிறது,
மழை..
என் வீட்டு ,
ஜன்னல் வழியே ,
வேடிக்கை பார்க்கிறேன் ,
மழையை ..
அன்றொரு நாளில்,
இப்படிதான்,
கொட்டி தீர்த்த,
மழை காலத்தில் ஓர் நாள்,
அவளை கண்டேன்..
வெகு அழகாக,
அமைதியாக,
வேறு எங்கோ,
பார்வையை வீசியபடி,
நின்றிருந்தால்,
குடைக்குள்..
எங்கோ பார்த்தது,
போன்றொரு எண்ணம்,
எனக்குள்..
புரிபடவில்லை..
மறுநாள்,
பள்ளி செல்ல பேருந்தில்,
ஏறியபோது,
கண்டு கொண்டேன்,
அவளை..
கவிஞர்கள், அவளை
வர்ணித்து கொண்டே,
இருக்கவே,
அவள் அழகாய்,
பிறந்திருக்கிறாள்,
என்பது போன்று,
வெகு அழகாய் இருந்தாள்..
தினசரி,
தொடர்தலில்,
பார்வை பரிமாற்றங்கள்,
முதலில் துவங்கின..
பிறிதொரு நாளில்,
மென்மை காதலை,
வலிக்காது அவளிடம்,
கூறினேன்..
அவள் மறுக்காமல்,
தலை அசைத்து,
ஏற்று கொண்டதும்,
நான் பரவசத்தில்,
வெகு ஆனந்தம் கொண்டேன்..
எங்கள் காதல் பொழுதுகள்,
அழகாய்,
சங்கமித்த நாட்கள்,
முடிவிற்கு வந்த பொழுது,
திருமணம் வந்து விட்டது..
திருமணம் என்றொரு,
அழகான வாழ்வியலை,
பேரழகாக மாற்றினாள்.
அழகான பிள்ளைகளோடு,
அழகிய வாழ்வியல்,
நகர,
பின்னாளில்,
பிள்ளைகள் திருமணம்,
முடித்து சென்றுவிட,
மீண்டும் நானும்,
என்னவளும்,
அழகியதொரு வாழ்வியலை,
தொடர்ந்த பொழுது,
எதிர்பாரா ஒருநாளில்,
பிரிந்தாள்,
என்னை விட்டு,
புவியை விட்டு..
இன்று நான்,
அந்திம தனிமையில்,
மழையை வேடிக்கை,
பார்த்தபடி,
என்னவளின் நினைவுகளில்,
என்னவளுக்குள்,
சங்கமமாக,
துடிக்கிறேன்,
என் மரணத்தை எதிர்நோக்கி.............

No comments:

Post a Comment