Tuesday, April 23, 2013

நீ சுவாசிக்கும் காற்றை
நானும் சுவாசிக்கவேண்டும்,
நீ சிரிக்கும் சிரிப்பை பார்த்து
நான் மகிழவேண்டும்,
நீ வலிகளில் துடித்தால் - அதில்
நானும் பங்குகொள்ளவேண்டும்,
நீ கண்ணீர் வடித்தால்
அதை துடைக்கும் கரங்களாக
நான் இருக்கவேண்டும்,
நீ காணும் கனவு - அது
நானாகவேண்டும்
நான் உறங்கும் அந்த காலை நேரத்தில்
உன் பூமுகம் பார்த்து எழும்பவேண்டும்,
உடல்களால் இரண்டாக இருந்தாலும்
நாம்!
உயிரால் ஒன்றாக வேண்டும்...

No comments:

Post a Comment