Friday, April 19, 2013

படர் இரவும் பகலும்
சதுரங்கப்பலகையதாய்க்
கடவுள் விளையாடும்
கணக்கற்ற பொம்மைகள் நாம்!

அங்கும் இங்கும் நகர்வதும்
அடைப்பதும், வெட்டுவதும்
இங்ஙனமே பின் மறைப்பில்
இறந்துறங்கிப் போவோமே...

இதுதான் வாழ்க்கை யென்ற
உண்மை உணரும்போது
பொய்மையும், சூதும்
புறந்தள்ளிப் போயிடுமே....

No comments:

Post a Comment