இப்பொழுதெல்லாம்
காதல்............
எழுதிச் செல்கின்றது காம சூத்திரங்களை
இயல்பாய்!
கண்வழி நனைந்து கருத்தினுள்
பிணைந்து...............
அன்பு அடையாளப்படுத்த முன்னர்.............
இயல்பாய் முத்தங்கள் விதைக்கப்படுகின்றன
மொத்தத் தேகத்தில்!
நிலா கசியும் அந்தகாரத்தில்
அந்தரிக்கும் கைபேசிகள்........
கற்பழிக்கப்படுகின்றன அடிக்கடி- காதல்
மனங்களின் காமவேட்டையில்!
இப்போதெல்லாம்
காதல் தேசத்துக்கான பிரவேசம்............
சுள்ளென்ற மினுங்கும் தோல்களும்
பசப்பு வார்த்தைகளும்
பருவக் கிளர்ச்சிக்கான நுழைவுகளுமே!
காதல்............
எழுதிச் செல்கின்றது காம சூத்திரங்களை
இயல்பாய்!
கண்வழி நனைந்து கருத்தினுள்
பிணைந்து...............
அன்பு அடையாளப்படுத்த முன்னர்.............
இயல்பாய் முத்தங்கள் விதைக்கப்படுகின்றன
மொத்தத் தேகத்தில்!
நிலா கசியும் அந்தகாரத்தில்
அந்தரிக்கும் கைபேசிகள்........
கற்பழிக்கப்படுகின்றன அடிக்கடி- காதல்
மனங்களின் காமவேட்டையில்!
இப்போதெல்லாம்
காதல் தேசத்துக்கான பிரவேசம்............
சுள்ளென்ற மினுங்கும் தோல்களும்
பசப்பு வார்த்தைகளும்
பருவக் கிளர்ச்சிக்கான நுழைவுகளுமே!
No comments:
Post a Comment